பிஜிஐஎம் இந்தியா மியூச்சுவல் ஃபண்டு அறிமுகம் செய்யும்
பிஜிஐஎம் இந்தியா ஹெல்த்கேர் ஃபண்டு
மும்பை / சென்னை, நவம்பர் 19, 2024 : சுகாதாரத் துறை மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி தொடர்புடைய பத்திரங்களில் முதலீடு செய்கிற ஒரு திறந்த முனை கொண்ட ஈக்விட்டி திட்டமான பிஜிஐஎம் இந்தியா ஹெல்த்கேர் ஃபண்டு அறிமுகம் செய்யப்படுவதை பிஜிஐஎம் இந்தியா மியூச்சுவல் ஃபண்டு இன்று அறிவித்திருக்கிறது. இந்த ஃபண்டானது BSE ஹெல்த்கேர் TRI-க்கு எதிராக பெஞ்ச்மார்க் செய்யப்படுகிறது.
இந்த புதிய ஃபண்டு ஆஃபர் (NFO), 2024, நவம்பர் 19 அன்று சப்ஸ்கிரிப்ஷனுக்காக தொடங்குகிறது மற்றும் 2024 டிசம்பர் 03 அன்று முடிவுக்கு வருகிறது. அதன் பிறகு தொடர்ச்சியான விற்பனை மற்றும் மீண்டும் வாங்குவதற்காக 2024 டிசம்பர் 11 அன்று கிடைக்கப்பெறும்.
"குறைவான செலவு, புத்தாக்கம் மற்றும் உடல்நல காப்பீடு மீது அதிகரித்து வரும் விழிப்புணர்வு, உயர்ந்து வரும் அந்நிய நேரடி முதலீடுகள் மற்றும் வளர்ச்சியடைந்து வரும் மருத்துவச் சுற்றுலா போன்ற பல அம்சங்களினால் ஆதாயம் பெற்று இந்தியாவின் சுகாதாரத் துறை மிக வேகமாக வளர்ந்து வருகிற நிலையில் அதனை சரியாக பயன்படுத்தி ஆதாயம் பெற முதலீட்டாளர்களுக்கு ஒரு மிகச்சிறப்பான வாய்ப்பை பிஜிஐம் இந்தியா ஹெல்த்கேர் ஃபண்டு வழங்குகிறது. ஒருவரால் செய்யக்கூடிய சிறந்த முதலீடு என்பது ஒருவரது சொந்த உடல்நலத்தின் மீதுதான் என்று நாங்கள் நம்புகிறோம். உடல்நல/ஆயுள் காப்பீட்டின் மூலம் உங்களையும் மற்றும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாப்பது அடுத்த சிறந்த முதலீடாக இருக்கும். மேலும் ஒரு பிரிவாக சுகாதாரத் துறையில் முதலீடு செய்வது சிறப்பானதாக இருப்பது நிச்சயம்" என்று பிஜிஐஎம் இந்தியா அசெட் மேனெஜ்மெண்ட்-ன் தலைமை செயல் அலுவலர் திரு. அஜித் மேனன் கூறினார்.
"இந்தியாவின் வளர்ச்சி வரலாற்றில் கட்டமைப்பு சார்ந்த பயனாளியாக சுகாதாரத் துறை இருக்குமென்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். நிலையான மற்றும் வளர்ச்சியடைந்து வரும் உள்நாட்டு தேவை, உறுதியான விலை நிர்ணய சக்தி, இந்தியாவின் போட்டியிடும் ஆதாயத்தின் காரணமாக சிறப்பான ஏற்றுமதிக்கான சாத்தியத்திறன் மற்றும் உலகளாவிய மருந்தியல் துறையால் பின்பற்றப்படும் சீனா +1 உத்தி போன்ற எண்ணற்ற பலன்களை இத்துறை காண்பதற்கு அதிக சாத்தியம் இருக்கிறது" என்று பிஜிஐஎம் இந்தியா அசெட் மேனெஜ்மெண்ட்-ன் முதன்மை முதலீட்டு அதிகாரி திரு. வினய் பஹாரியா கூறினார்.
இத்திட்டமானது, மருந்தியல் மற்றும் சுகாதாரத் துறை நிறுவனங்களின் பங்குகளில் குறைந்தது 80% வரையிலும் மற்றும் பிற துறை நிறுவனங்களின் ஈக்விட்டிகளில் 20% வரையிலும், கடன் மற்றும் பணச் சந்தையில் (20% வரை), REIT & InvIT-களில் (10% வரை) மற்றும் வெளிநாட்டு ETF-கள் உட்பட அந்திய பத்திரங்களில் 20% வரை முதலீடு செய்யும்.
சுகாதார தொழில்துறைக்குள் உடல்நல பராமரிப்பு சேவைகள், உடல்நல பராமரிப்பு உற்பத்தி உட்பட பல்வேறு துறைகளில் முதலீடு செய்வதையும் இந்த ஃபண்டு பரிசீலனை செய்யும். உடல்நல பராமரிப்பு சேவைகளுள் மருந்தகம், நோயறிதல் மையங்கள், மருத்துவமனைகள் மற்றும் உடல்நல காப்பீடு ஆகியவை உள்ளடங்கும். உடல்நல பராமரிப்பிற்கான உற்பத்தி பிரிவிற்குள் CRAMS (ஒப்பந்த ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி சேவைகள்), மருத்துவ கருவிகள், சிறப்பு வேதிப்பொருட்கள், ஃபார்முலேஷன்கள் மற்றும் API (செயலில் உள்ள மருந்து மூலப்பொருள்), ஆகியவை இடம்பெறுகின்றன.
"சுகாதார துறையானது ஒப்பீட்டளவில் குறைவான, எளிதாக மாறக்கூடிய தேவையைக் கொண்டிருக்கிறது; இது குறிப்பாக பணவீக்க சூழலில் உயர்வான விலை நிர்ணய திறனை வழங்குகிறது. நீண்ட காலஅளவின் போது முதலீட்டை பன்மடங்கு பெருக்குவதற்கு ஒரு முதலீட்டாளருக்கு நல்ல வாய்ப்பை இது வழங்குகிறது" என்று பிஜிஐஎம் இந்தியா அசெட் மேனெஜ்மெண்ட்-ன் ஈக்விட்டிகளுக்கான முதுநிலை ஃபண்டு மேலாளர் திரு. அனந்த பத்மநாபன் ஆஞ்சநேயன் கூறுகிறார்.
மேலாண்மையின் தரம் உட்பட ஒவ்வொரு பங்கின் அடிப்படை அம்சங்கள் மீது சிறப்பு கவனத்துடன் மேலிருந்து கீழ் மற்றும் கீழிலிருந்து மேல் என்ற போர்ட்ஃபோலியோ கட்டமைப்பின் கலவையை பயன்படுத்தி இந்த ஃபண்டின் போர்ட்ஃபோலியோ உருவாக்கப்படும்.
இந்த நிதி திட்டத்தின் ஈக்விட்டி பகுதியானது, அனந்த பத்மநாபன் ஆஞ்சநேயன், விவேக் சர்மா, மற்றும் உட்சவ் மேத்தா ஆகியோரால் நிர்வகிக்கப்படும் நிலையில் கடன் பத்திரங்கள் பிரிவை திரு. புனித் பால் நிர்வகிப்பார்.
சுகாதாரப் பிரிவை எப்போதும் பசுமையானதாக ஆக்குவது என்ன?
· அதிகரித்து வரும் அந்நிய நேரடி முதலீடுகள் மற்றும் அரசு செலவினத்தால் ஆதாயமடைவதற்கு பல பத்தாண்டுகள் வளர்ச்சி பெற்ற கட்டமைப்பு.
· 2025-ம் ஆண்டிற்குள் நாட்டின் GDP-ல் 2.5% என்ற அளவை அரசின் செலவினம் அதிகரிக்கும் என மதிப்பிடப்படுவதால் இதனால் இத்துறை ஆதாயமடையும். (ஆதாரம்: www.ibef.org)
· முதிர்ச்சியடைந்து வரும் மக்கள் தொகை, உடல்நலம் குறித்து அதிகளவில் விழிப்புணர்வு, உயர்ந்திருக்கும் அரசின் செலவினம் ஆகியவற்றின் காரணமாக மருத்துவ சேவைகளுக்கு அதிகரித்து வரும் தேவையினால் ஆதாயம் கிடைக்கும்.
· செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான நோயறிதல், மருத்துவ-தொழில்நுட்பம், தொலை-மருத்துவம், முன்தடுப்பு உடல்நல பராமரிப்பை நோக்கிய நகர்வு, மருத்துவச் சுற்றுலா போன்ற வளர்ந்து வரும் போக்குகள் இத்துறைக்கு நன்மை பயக்கும்.
· பொருளாதார தளர்ச்சிகளுக்கு ஒப்பீட்டளவில் பாதிப்படையாத துறையில் ஒரு துறையில் பங்கேற்று பயனடையலாம்.
· சுகாதாரம் மற்றும் அதன் துணை பிரிவுகளுக்குள் மாறுபட்ட பல்வேறு நிறுவனங்களில் முதலீடு வாய்ப்பு.
· அதிகரித்து வரும் வருவாய் அளவுகள் மற்றும் முன்தடுப்பு உடல்நல பராமரிப்பு மீது மக்கள் மத்தியில் மாறிவரும் மனப்பான்மையினால் கிடைக்கும் ஆதாயம்.
முக்கிய அம்சங்கள்
குறைந்தபட்ச விண்ணப்ப தொகை
· தொடக்கநிலை வாங்குதல்/ஸ்விட்ச்-இன்: குறைந்தபட்சம் ரூ. 5000 மற்றும் அதன்பிறகு ரூ. 1-ன் பன்மடங்கு.
· கூடுதல் வாங்குதல்: குறைந்தபட்சம் ரூ. 1,000 மற்றும் அதன்பிறகு ரூ. 1-ன் பன்மடங்கு.
· மீட்பு: ரூ. 1,000 மற்றும் ரூ. 1-ன் பன்மடங்கு அல்லது கணக்கில் எஞ்சியுள்ள தொகை ஆகியவற்றுள் எது குறைவானதோ அது.
· SIPகள்: குறைந்தபட்சம் 5 தவணைகள் மற்றும் ஒரு தவணைக்கு குறைந்தபட்ச தொகையாக ஒவ்வொன்றும் ரூ. 1000/- மற்றும் அதன்பிறகு ரூ.1-ன் பன்மடங்கு தொகை.
வெளியேறல் கட்டணம் (Exit Load)
சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) மற்றும் சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்ஃபர் பிளான் வழியாக (STP) யூனிட்டுகள் வாங்கப்படும் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும்:
· யூனிட்டுகள் ஒதுக்கீடு தேதியிலிருந்து 90 நாட்களுக்குள்: 0.50%
· யூனிட்டுகள் ஒதுக்கீடு தேதியிலிருந்து 90 நாட்களுக்குப் பிறகு: ஒன்றுமில்லை
வெளியேறலுக்கான கட்டணம் (எக்ஸிட் லோடு) எதுவும் அத்தொகை முழுவதும் இத்திட்டத்தில் வரவு வைக்கப்படும்.
மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள், சந்தை இடர்வாய்ப்புகளுக்கு உட்பட்டவை. எனவே, திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.