நாணயம் விகடன் & மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து `இலக்கு அடிப்படையிலான மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு' என்ற நிகழ்ச்சியை வேலூரில் 2024 நவம்பர் 16- ஆம் தேதி நடத்தின.
இந்நிகழ்ச்சியில் மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் விற்பனை மேலாளர் திரு. கோபிநாத் சங்கரன் பேசும்போது, "தற்போது உள்ள 100 ரூபாயின் மதிப்பு எதிர்காலத்திலும் அப்படியே இருக்காது; குறையும். நம்முடைய எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், பணம் வீக்கத்தைச் (விலைவாசி உயர்வு ) சமாளித்து நம்முடைய நிதி இலக்கை அடைவதற்கும் முதலீடு அவசியமாகிறது.என்றார்.
''இந்த நிதி இலக்குகளை நிறைவேற்ற அதற்கு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் உதவுகின்றன. பங்குச் சந்தை சார்ந்தது ஈக்விட்டி ஃபண்ட், குறியீடு சார்ந்தது இண்டெக்ஸ் ஃபண்ட், பங்குகள் மற்றும் கடன் பத்திரங்கலில் கலந்து முதலீடு செய்யும் ஹைபிரிட் ஃபண்ட், கடன் பத்திரங்களில் மட்டும் முதலீடு செய்யும் கடன் சந்தை மியூச்சுவல் ஃபண்ட் என நம் தேவைகளுக்கு ஏற்ப ஃபண்டை தேர்வு செய்து முதலீடு செய்யலாம். பிள்ளைகளின் உயர்படிப்பு, கல்யாணம், சொந்த வீடு, பணி ஓய்வுக் காலம் ஆகிய நிதி இலக்குகளை வெற்றிகரமாக அடைவதற்கு, முன்கூட்டியே திட்டமிட்டு பிரித்து முதலீடு செய்தாலே போதும்" என்றார் திரு கோபிநாத் மேலும்.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக