மொத்தப் பக்கக்காட்சிகள்

Market இந்தியப் பங்குச் சந்தை தொடர் இறக்கம்: சிறு முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியவை..!


திரு. ச.ஶ்ரீதரன், நிதி ஆலோசகர், https://www.walletwealth.co.in/ 


இந்தியப் பங்குச் சந்தை தொடர் இறக்கம்: சிறு முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியவை..!


இந்தியப் பங்குச் சந்தைகள் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக தொடர்ந்து இறக்கம் கண்டு வருகிறது. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் சுமார் 8-9 சதவிகிதம் குறைந்துள்ளது. 

 

சிறு முதலீட்டாளர்கள் இனி என்ன செய்ய வேண்டும் என பார்ப்போம்.

 

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு..!


இந்தியப் பங்குச் சந்தை சரிவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதாவது அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (2024 அக்டோபர் 5) நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலின் முடிவுகள் எப்படி இருக்கும் என்ற அச்சம் சிறு முதலீட்டாளர்களிடம் அதிகமாக காணப்படுகிறது. கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால், அமெரிக்க வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. டிரம்ப் வெற்றி பெறும்போது வட்டி விகிதம் குறித்து முடிவு எடுக்க கால தாமதம் ஆகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

இது மட்டும் இல்லாமல் அமெரிக்க ஃபெடரல் வங்கியின் வட்டி விகிதம் குறித்த கூட்டம் 2024 அக்டோபர் 6, 7 -ம் தேதிகளில் நடைபெறுகிறது. ஏற்கனவே ஃபெடரல் வங்கி அதிபர், தொடர்ந்து வட்டி விகிதம் தொடர்ந்து குறைக்கப்படும் என அறிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த முடிவு எப்படி இருக்கும் என்ற அச்சம் பங்குச் சந்தையில் நிலவுகிறது.

நடப்பு 2024-25-ம் நிதி ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான செப்டம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. இந்த முடிவுகள் பெரும்பாலும் எதிர்பார்த்த அளவில் இல்லை. இது முதலீட்டாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


கச்சா எண்ணெய் (க்ருட் ஆயில்) விலை கடந்த மாதம் அதிகமாக குறைந்த நிலையில், தற்போது விலை சுமார் 2% உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரிக்கும் போது இந்தியாவில் பணவீக்க விகிதம் என்கிற விலைவாசி அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் ரிசர்வ் வங்கி வட்டியை உயர்த்தக் கூடும். கடந்த 18 மாதங்களுக்கு மேலாக ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தில் எந்தவிதமான மாற்றமும் மேற்கொள்ளவில்லை.

புவிசார் அரசியல் பதற்றம்..!

இதுமட்டும் இல்லாமல் புவிசார் அரசியல் பதற்றம் தொடர்ந்து நிலவி வருகிறது. இஸ்ரேல் - ஈரான் போர் பதற்ற பங்குச் சந்தையில் பெரும் பதற்றத்தை உருவாக்கி உள்ளது. பங்குச் சந்தைகள் தொடர்ந்து வீழ்ச்சி அடைவதை கண்டு முதலீட்டாளர்கள் பதற்றம் அடையாமல் இருக்க வேண்டும். முடிந்த வரையில் பங்குச் சந்தை மற்றும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீட்டை அதிகரிக்க வேண்டும். பொதுவாக, பங்குச் சந்தை 5 சதவிகிதத்துக்கு மேல் இறங்கும் போதெல்லாம்  கூடுதலாக சுமார் 10 சதவிகிதம் முதலீடு செய்ய வேண்டும்.

குறுகிய காலத்தில் சந்தை எப்போதெல்லாம் சரியும் என்பதை யாராலும் சரியாக கணிக்க முடியாது. எனவே முதலீட்டாளர்கள் கையில் இருக்கும் பணத்தை மொத்தமாக முதலீடு செய்யாமல் கொஞ்சம் கொஞ்சமாக முதலீட்டை மேற்கொள்வது புத்திசாலித்தனம் மற்றும் லாபகரமான முடிவாக இருக்கும்.

லார்ஜ் கேப் பங்குகள், லார்ஜ் கேப் ஃபண்டுகள்..!


பங்குச் சந்தையில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் லார்ஜ் கேப் பங்குகளிலும் ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் லார்ஜ் கேப் ஃபண்டுகளிலும் மேற்கொள்வது சிறந்த முடிவாக இருக்கும். ஏனெனில் இந்தியப் பங்குச் சந்தை இன்னும் சரிய வாய்ப்புள்ளது.

அதேநேரத்தில் வீழ்ச்சிக்கு பிறகு எழுச்சி அடையும் போது லார்ஜ் கேப் பங்குகள் மற்றும் லார்ஜ் கேப் ஃபண்டுகள் வேகமாக வளர்ச்சி அடையும். ஸ்மால் அண்ட் மிட்கேப் பங்குகள் மற்றும் ஃபண்ட்களில் இதற்கான வாய்ப்பு குறைவு ஆகும். 


கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீட்டு ஆலோசனைக்கு..!

திரு. ச.ஶ்ரீதரன், நிதி ஆலோசகர், https://www.walletwealth.co.in/

Wealth Ladder Direct

Golden Rays Business Centre,
53A / 29A, Lake View Road,
West Mambalam, Chennai – 600 033
044 - 4861 2114,  +91 99401 16967
info@wealthladderdirect.com 

Branch Office: 
No. 29 NIDHI 10 MAIN 3 CROSS PRASHANTINAGAR,
NEAR BRV SCHOOL,
ISRO LAYOUT BENGALURU – 560078

 

Web Site: https://www.walletwealth.co.in/


மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, மருத்துவக் காப்பீடு, ஆயுள் காப்பீடு உள்ளிட்ட அனைத்து வகையான காப்பீடு எடுக்கவும், திரு.ச.ஶ்ரீதரன் அவர்களை தொடர்பு கொள்ளலாம்.

முன்னணி தனிநபர் நிதி மேலாண்மை இதழ் நாணயம் விகடன் –ல் திரு.ச.ஶ்ரீதரன் எழுதிய கட்டுரைகளை படிக்க..

https://www.vikatan.com/author/855-sridharan-s

 

 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மொரிஷியஸ் நாட்டிலிருந்து கிஃப்ட் சிட்டிக்கு  மாறிய அர்தா குளோபல் ஆபர்சூனிட்டிஸ் ஃபண்ட் Artha Global Opportunities Fund

மொரிஷியஸ் நாட்டிலிருந்து கிஃப்ட் சிட்டிக்கு   மாறிய அர்தா குளோபல் ஆபர்சூனிட்டிஸ் ஃபண்ட், நிதி நெருக்கடி நிறுவனங்களில் முதலீடு செய்ய ...