டிஆர்ஏ நிர்வாக இயக்குனர் ரஞ்ஜீத் ரத்தோட் & நடிகை ராஷ்மிகா
நிதி ஆண்டு 2026 - 2027-ல் ரூ.1000 கோடி வர்த்தகத்துடன் வருவாயை இரட்டிப்பாக்க டிஆர்ஏ ரியல் எஸ்டேட் நிறுவனம் இலக்கு
- முதல் பிராண்ட் தூதராக நடிகை ராஷ்மிகா மந்தனாவை அறிவித்தது.
- தமிழகத்தை தொடர்ந்து பெங்களுருவில் கால் பதித்துள்ள இந்நிறுவனம் அடுத்த நிதியாண்டில் புனேயில் ரியல் எஸ்டேட் துறையிலும் நுழைகிறது.
சென்னை, நவ. 28- தமிழகத்தில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றாக திகழும் டிஆர்ஏ நிறுவனம் நிதி ஆண்டு 2026 - 2027-ல் ரூ.1000 கோடி வர்த்தகத்துடன் வருவாயை இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளதாக சென்னையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது தெரிவித்தது.
இதன் வர்த்தகமானது நிதி ஆண்டு 2023 - 2024-ல் ரூ.300 கோடியிலிருந்து நிதி ஆண்டு 2024 - 2025ல் ரூ.500 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சியின் அடிப்படையில் 2026 - 2027-ல் ரூ.1000 கோடி இலக்கை அடைய பல்வேறு விரிவாக்க நடவடிக்கைகளை இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. தற்போது இந்நிறுவனம் தமிழகத்தை தொடர்ந்து, புனே சந்தையில் நுழைவதுடன், அடுத்த நிதி ஆண்டுக்குள் பெங்களூரில் தனது இருப்பை மேலும் விரிவாக்குவதற்கான அறிவிப்பை நிறுவனம் வெளியிட்டது. சென்னை சந்தையில் 2.7 மில்லியன் சதுர அடியில் விற்பனை செய்யக்கூடிய பகுதியைச் சேர்க்கும் மூலம், நகரின் முக்கிய சந்தைகளில் 9 நடப்பு மற்றும் 6 வரவிருக்கும் திட்டங்களுடன் தனது தடத்தை வலுப்படுத்துவதாகவும் நிறுவனம் அறிவித்தது. தரமான கட்டுமானம் மற்றும் சரியான நேரத்தில் டெலிவரி வழங்குவதில் புகழ்பெற்ற இந்த பிராண்ட், பிரபல நடிகை ரஷ்மிகா மந்தனாவை தனது முதல் பிராண்ட் தூதராக நியமித்து, தனது புதுப்பிக்கப்பட்ட 'ஹோம் ஆஃப் ப்ரைட்' என்ற பிராண்ட் தத்துவத்தை வெளியிட்டது.
இந்நிகழ்ச்சியில் பேசிய டிஆர்ஏ நிர்வாக இயக்குனர் ரஞ்ஜீத் ரத்தோட் கூறுகையில், பெருமை என்பது டிஆர்ஏவின் தாரக மந்திரமாகும். மேலும் பல்வேறு புதிய திட்டங்களுடன் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி நாம் செல்லும்போது இது இன்னும் வேகமெடுக்கும். இந்தியாவில், வீடு வாங்குவது பலருக்குமான ஒரு கனவும், பெருமையும் ஆகும்,. மேலும் இது இளம் தலைமுறையினர் இடையே இன்னும் உற்சாகமாக இருக்கிறது. சிறந்த விலை, தரம் மற்றும் சரியான நேரத்தில் டெலிவரி போன்ற ஒவ்வொரு சிரமத்தையும் தீர்க்க மட்டுமல்லாமல், அழகான மற்றும் காலத்திற்கேற்ப இல்லங்களை வழங்குவதன் மூலம், வீடு வாங்குபவர்களின் கனவுகளை நிறைவேற்றுவதில் நாங்கள் பொறுப்பான பங்கு வகிக்க உறுதியாக இருக்கிறோம்."
ரஷ்மிகா மந்தனாவை தனது பிராண்ட் தூதராக நியமிப்பதன் மூலம், DRA தனது சந்தை பங்கைக் கூடுதல் அளவில் அதிகரிக்கவும், வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் கூட்டாண்மை நிறுவனங்களுடன் தனது பெருமை தொடர்பை வலுப்படுத்தவும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஒத்துழைப்பு, ஒவ்வொரு வீடு வாங்குபவருக்கும் பெருமை உணர்வை ஊட்டுவதுடன், சரியான விலை அளவில் தரமான, பரந்த வீடுகளை வழங்குவதற்கான DRA-வின் உறுதிமொழியை மேலும் வலுப்படுத்துகிறது. DRA, ரஷ்மிகா மந்தனாவுடன் 'ஹோம் ஆஃப் ப்ரைட்' விளம்பரம் நாளை முதல் தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகள், சமூக வலைதளங்கள் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் வெளியிடப்படுகிறது என்றார். புதிய பிராண்ட் தத்துவம் மற்றும் கட்டிடக்கலை, ப்ளூ நூடில்ஸ் (Blue Noodles pvt ltd) மூலம் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் ரஞ்ஜீத் கூறுகையில்,, "ரஷ்மிகா மந்தனா எங்கள் தேசிய பிராண்ட் தூதராக எங்களுடன் சேர்ந்து, எங்கள் புதுப்பிக்கப்பட்ட தத்துவத்தின் அடிப்படையை – 'ஹோம் ஆஃப் ப்ரைட்' – பிரதிபலிப்பதற்கு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். திறமையான நடிப்பு மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றின் காரணமாக தேசிய நட்சத்திரமாக மாறிய ரஷ்மிகாவின் அற்புதமான வளர்ச்சி, DRA-வின் கடுமையான ஆர்வம் மற்றும் சிறந்த தரத்திற்கு உறுதிமொழியுடன் கூடிய பயணத்தைப் போலவே, முயற்சி, உண்மைத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. மேலும் நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்காக வீடுகளை மட்டுமல்லாமல், நிலையான பாரம்பரியங்களை உருவாக்குவதற்காக ஒன்றிணைந்து செயல்படுகிறோம்"என்று தெரிவித்தார்
இது குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா கூறுகையில், DRA-வின் பிராண்ட் தூதராக இணைவதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். DRA கூட்டணியின் ஒரு பகுதியாக இருப்பதுடன், இந்த புதிய பயணம் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வெற்றி பெரும் என்பதில் எனக்கு எந்த வித சந்தேகமும் இல்லை. DRA-வின் 'ஹோம் ஆஃப் ப்ரைட்' விளம்பரம் மூலம், எதிர்காலத்தில் மேலும் பல ஆசை கொண்ட மக்களின் வீடு வாங்கும் கனவுகளை நிறைவேற்றுவதைக் காண எதிர்பார்க்கிறேன்."
About DRA
DRA, with an impressive legacy of 40 years, has become a trusted name in the real estate industry, delivering world-class projects across Chennai. With more than 12,000 satisfied customers DRA is synonymous with trust, transparency, and timely delivery. Under the visionary leadership of Mr. Ranjeeth Rathod, Managing Director, DRA goes beyond just building apartments by offering its customers a 'Home of Pride' — thoughtfully designed living spaces that cater to evolving lifestyles and embody a sense of accomplishment and belonging. Innovations like the 'Timeline Meter' for project updates and the 'Customer Delight Meter' reflect t`heir unwavering focus on customer satisfaction, while their online customer portal ensures hassle-free access to project details and documentation. Signature developments such as DRA Pristine Pavilion, Tuxedo, Ascot, Skylantis, Elite, Infinique and many others exemplify their commitment to blending modernity with value-driven investments. Recognized with awards like FICCI's REISA and Times Business Awards, DRA holds the distinction of being Chennai's first developer with CRISIL's 7-star grading. Their social responsibility initiatives include pond restoration and nurturing young sporting talent, which highlight their dedication to the community. Upholding their motto "Timeless Home, Timely Delivery, DRA continues to inspire pride and trust in every home they create, turning dreams into lasting legacies.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக