மொத்தப் பக்கக்காட்சிகள்

இப்போது பங்குச் சார்ந்த திட்டங்களில் எப்படி முதலீடு செய்தால் லாபம்? ச.ஶ்ரீதரன், நிதி ஆலோசகர்

இப்போது பங்குச் சார்ந்த திட்டங்களில் எப்படி முதலீடு செய்தால் லாபம்? 

By திரு. .ஶ்ரீதரன், நிதி ஆலோசகர்https://www.walletwealth.co.in/

 

தற்போதைய நிலையில் (2024 நவம்பர்) இந்தியப் பங்குச் சந்தை சற்று அதிக மதிப்பீட்டில் (Modest Overvalued) உள்ளது. எனவே, பங்குச் சந்தையில் குறுகிய கால முதலீட்டில் சிறு முதலீட்டாளர்கள் மிகவும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். 

புவி சார் அரசியல் பதற்றங்கள் (Geo-political Tensions) உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் இந்தியப் சந்தையில் சமீபத்தில் சுமார் 10% இறக்கம் காணப்பட்டது, அதன் பிறகு சற்று ஏற்றம் ஏற்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் சந்தை ஏற்ற இறக்கத்தில் இருக்க அதிக வாய்ப்புள்ளது. இதை முதலீட்டுக்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

எனவே, சிறு முதலீட்டாளர்கள் சந்தை சரியும் போது போது 5, 6 தவணைகளில் முதலீடு செய்யலாம்.


ஹைபிரீட் ஃபண்டுகள்..!


தற்போதைய நிலையில் நிறுவனப் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் கலந்து முதலீடு செய்யும் ஹைபிரீட் மியூச்சுவல் ஃபண்டுகள் (Hybrid Mutual Funds) மற்றும் பங்குகள், கடன் பத்திரங்கள், தங்கம் / வெள்ளி என பல சொத்து பிரிவுகளில் கலந்து முதலீடு செய்யும் மல்டி அசெட் மியூச்சுவல் ஃபண்டுகள் (Multi Asset Mutual Funds) முதலீட்டுக்கு மிகவும் ஏற்றவையாக உள்ளன.


நிறுவனப் பங்குகள் மற்றும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் (Equity Mutual Funds) மொத்தத் தொகையை (Lump Sum) முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. 

அடுத்த 20 முதல் 24 வாரங்களுக்கு சீரான முதலீட்டுத் திட்ட ((Systematic Investment Plan-SIP)) முறையில் முதலீடு செய்து வருவது லாபகரமாக அமையும்.

அதே நேரத்தில் பங்குச் சந்தை இறக்கங்களின் போது சற்று கூடுதல் முதலீட்டை மேற்கொள்வது நீண்ட காலத்தில் லாபகரமாக அமையும்.

ஸ்மால் கேப் நிறுவனப் பங்குகளின் மதிப்பீடு அதிகமாக இருப்பதால் ஸ்மால் கேப் பங்குகள் மற்றும் ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்கள் சந்தை இறக்கத்துக்கு காத்திருந்து முதலீடு செய்வது நல்லது.


லார்ஜ் கேப் ஃபண்டுகள்..!


குறுகிய கால நிதித் தேவைகளுக்கு பணத் தேவை இருந்தால், ஸ்மால் கேப் நிறுவனப் பங்குகள் மற்றும் ஸ்மால் கேப் ஃபண்ட்களில் லாபத்தை வெளியே  எடுத்துக் கொள்ளலாம். நடப்பு 2024 ஆம் ஆண்டில் ஸ்மால் கேப் பங்குகள், ஃபண்டுகளின் செயல்பாட்டை விட   லார்ஜ் கேப்  மற்றும் மிட் கேப் பங்குகள், ஃபண்டுகளின் வருமான செயல்பாடு நன்றாக இருக்கும் எனலாம்.  .


கூடுதல் விவரங்கள், முதலீட்டு ஆலோசனைக்கு..!

திரு. .ஶ்ரீதரன், நிதி ஆலோசகர்https://www.walletwealth.co.in/

S.Sridharan, Founder,  https://www.walletwealth.co.in/ 

If you need any advice on investments, do call us at 9940116967.

Team Wallet Wealth,

AMFI Registered Mutual Fund Distributor

2nd Floor, No.8A, 2nd Main Road, Nanganallur,

Chennai – 600 061

Ph: 044-48612114

https://www.walletwealth.co.in/ 

sridharan@walletwealth.co.in

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, மருத்துவக் காப்பீடு, ஆயுள் காப்பீடு உள்ளிட்ட அனைத்து வகையான காப்பீடு எடுக்கவும், திரு.ச.ஶ்ரீதரன் அவர்களை தொடர்பு கொள்ளலாம்.

முன்னணி தனிநபர் நிதி மேலாண்மை இதழ் நாணயம் விகடன் –ல் திரு.ச.ஶ்ரீதரன் எழுதிய கட்டுரைகளை படிக்க..

https://www.vikatan.com/author/855-sridharan-s

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு ஏற்ற . - பஜாஜ் ஃபின்சர்வ் ELSS வரி சேமிப்பு ஃபண்ட் .!

திரு .  எஸ் .  கார்த்திகேயன் ,  நிறுவனர் ,  https://winworthwealth.com/ மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு   ஏற்ற . ...