வணிக நிறுவனங்கள், தனிநபர்கள் தங்களுக்கு ஏற்ற
காப்பீட்டு திட்டங்களை தேர்வு செய்ய புதிய இன்சூரன்ஸ் தரகு சேவைகள் வழங்கும் நிறுவனம் – "கவர்டன் இன்சூரன்ஸ் " சென்னையில் தொடக்கம்
Photo Caption (L to R): Mr. Karthik Gunasekar, Founder & CTO,Coverton Insurance Broking, Mr. Imthyaz Sheriff, Founder & COO, Coverton Insurance Broking; Mr. Vishal Srinivasan, Chief Financial Advisor of Coverton; Mr. S. Swaminathan, CEO of Coverton Insurance Broking at the launch in Chennai.
சென்னை, நவ. 17th - 2024: நாடு முழுவதும் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் காப்பீடுகளில் உள்ள இடர்பாடுகளை களைந்து தங்களுக்கு ஏற்ற தனிப்பயனாக்கப்பட்ட விரிவான காப்பீட்டு திட்டங்களை தேர்வு செய்வதற்கான புதிய இன்சூரன்ஸ் தரகு சேவைகளை வழங்க கவர்டன் இன்சூரன்ஸ் நிறுவனம் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.இதில் வாடிக்கையாளர்கள் தங்களின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப மிகவும் பொருத்தமான கவரேஜைப் பெறலாம். நிபுணர்களின் வழிகாட்டுதலின்படி தங்களுக்கு பொருத்தமான இன்சூரன்ஸ் திட்டங்களையும் அவர்கள் தேர்வு செய்யலாம்.
இந்த புதிய இன்சூரன்ஸ் புரோக்கிங் சேவைகள் துவக்க விழாவில் மத்திய நேரடி வரிகள் வாரியம், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய முன்னாள் தலைவர் என். ரங்காச்சாரி, இந்திய காப்பீட்டு தரகர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் மற்றும் இயக்குநர் நரேந்திர குமார் பரிந்த்வால், சோழமண்டலம் எம்.எஸ். ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி முன்னாள் நிர்வாக இயக்குநர் மற்றும் எஸ்எஸ்ஜி இன்சூரன்ஸ் புரோக்கர்ஸ் அன்ட் ரிஸ்க் மேனேஜர்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் தலைவர் கோபால் ரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இதில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் வரதராஜன் தலைமையில் "உரிமைகோரல் ஆலோசனை: தரகர்களுக்கான வாய்ப்பா?'' என்ற தலைப்பில் குழு விவாதம் நடைபெற்றது.
புதிய தரகு சேவைகள் குறித்து கவர்டன் இன்சூரன்ஸ் நிறுவனர் தலைமை தொழில்நுட்ப அதிகாரி கார்த்திக் குணசேகர் மற்றும் நிறுவனர் தலைமை செயல்பாட்டு அதிகாரி இம்தியாஸ் ஷெரீப் ஆகியோர் கூறுகையில், எங்கள் நிறுவனம் காப்பீடு செய்பவர்களுக்கும் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்படுகிறது. சிறந்த தொழில் நிபுணத்துவத்துடன் விரிவான தரகு சேவைகளை வழங்கி வருகிறது மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த அணுகுமுறைகள் மற்றும் வாடிக்கையாளர் சார்ந்த சேவைகள் மூலம் இந்தியாவில் காப்பீட்டு தரகு தொழிலை உயர்த்தும் வகையில் செயல்பட்டு வருகிறோம் என்று தெரிவித்தனர்.
இந்நிறுவனத்தின் தலைமை நிதி ஆலோசகர் விஷால் சீனிவாசன் கூறுகையில், எங்கள் இன்சூரன்ஸ் தரகு சேவைகள் தொடங்கப்பட்டதன் மூலம், இன்சூரன்ஸ் திட்டங்கள் குறித்தும் அதில் எந்தெந்த திட்டங்களில் என்னென்ன இடர்பாடுகள் மற்றும் பயன்கள் கிடைக்கும் என்பது குறித்தும் நாடும் முழுவதும் உள்ள வணிக நிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்கும் சிறந்த தீர்வுகளை வழங்க இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
கவர்டன் தலைமை செயல் அதிகாரி சுவாமிநாதன் கூறுகையில், எங்கள் தரகர்கள் குழு வாடிக்கையாளர்களுக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்குவதோடு தனிப்பயனாக்கப்பட்ட, நம்பகமான மற்றும் சிறந்த பயன் அளிக்கும் கவரேஜ் திட்டங்களை அவர்களுக்கு வழங்க தயாராக உள்ளது. வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மைகளுக்கு எதிராக ஒவ்வொருவரும் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அவர் தெரிவித்தார்.
இந்த புதிய சேவைகள் மூலம் சிறந்த காப்பீட்டு நிறுவனங்களில் தங்கள் வாடிக்கையாளர்கள் காப்பீடு செய்வதற்கான உத்தரவாதத்தை கவர்டன் அளிக்கிறது. மேலும் அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் குழு மூலம் காப்பீடு செய்ய விரும்பும் ஒவ்வொருவருக்கும் அவர்கள் தேர்வு செய்ய வேண்டிய காப்பீடு முதல் அதற்கான உரிமைகோரலை அவர்கள் பெறும் வரை அதற்கான அனைத்து உதவிகளையும் இன்சூரன்ஸ் தரகு சேவைகள் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது