ஆனந்த் ஸ்ரீனிவாசன்: பணம் எனும் மந்திரம் Alchemy of Money
Alchemy of Money எனும் திரு. ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்களின் ஆங்கில நூலின் தமிழ் மொழியாக்க நூல் "பணம் எனும் மந்திரம்".
இந்த நூல் நிதி (Finance) அடிப்படைகளைப் புரிந்து கொள்வதற்கான ஒரு எளிய வழிகாட்டி, சேமிப்பு, பணத்தின் வரலாறு, மூலதனம், சொத்து, கடன், செலவு, வட்டி, பணவீக்கம், கூட்டுவட்டி, தங்கம், பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் போன்ற தலைப்புகளின் அடிப்படைகளைப் புரிந்து கொள்ளும் வகையில், எளிமையான தமிழில் எழுதப்பட்டிருக்கும் இந்த நூல், ஓர் எளிய பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் பணத்தை விளக்குகிறது.
புதிதாக வேலையில் சேரும் இளைஞர்கள், பெண்களுக்கு இந்த நூல் ஒரு நிதி அரிச்சுவடியைப் போல துணை நிற்கும். பணம் குறித்த பெரிய அளவிலான விழிப்புணர்வு இல்லாத இந்தியாவைப் போன்ற நாடுகளில் இது போன்ற நூல்கள் தான் மிகப்பெரிய நம்பிக்கையாக, பண பயணத்தின் வழித்துணையாக இருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை.