கரூர் வைஸ்யா வங்கி 4 புதிய கிளைகளை துவக்கம் மொத்தம் 858 கிளைகள்
சென்னை: கரூர் வைஸ்யா வங்கி (கேவிபி) 28.11.2024 அன்று நான்கு புதிய கிளைகளை தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் இரண்டு, ஆந்திரப் பிரதேசத்தில் இரண்டு என இந்த நான்கு கிளைகளையும் சேர்த்து, வங்கியின் மொத்த கிளைகளின் எண்ணிக்கை 858 ஆக உயர்ந்துள்ளது.
துவக்கப்பட்ட புதிய கிளைகள்:
855-வது கிளை: விசாகப்பட்டினம் (முரளி நகர்) - திரு. திரிநாத் ராவ், மதிப்பீட்டு அதிகாரி, சிம்ஹாசலம் தேவஸ்தானம், மண்டல இணை ஆணையர், அறநிலையத் துறை, ஆந்திரப் பிரதேச அரசு அவர்கள் திறந்து வைத்தார்
856- வது கிளை: கடப்பா (செவன் ரோட்ஸ்) – திரு. ஜான் இர்வின் பாலபர்த்தி, வருவாய் கோட்ட அலுவலர் & சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட், கடப்பா அவர்கள் திறந்து வைத்தார்
857வது கிளை: சென்னை (கொடுங்கையூர்) - மாண்புமிகு நீதிபதி எம்.துரைசாமி, B.Com, B.L., தலைவர், தமிழ்நாடு ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டு தீர்ப்பாயம், சென்னை அவர்கள் திறந்து வைத்தார்
858வது கிளை: சென்னை (நொளம்பூர்) - டாக்டர் எஸ். ராஜன், MF, M.Ch, FRCS, தலைவர், இதய அறுவை சிகிச்சை பிரிவு, சென்னை மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் அவர்கள் திறந்து வைத்தார்
இப்புதிய கிளைகள் சில்லறை மற்றும் வணிக பரிவர்த்தனை, காப்பீடு போன்ற முழுமையான வங்கி சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும். மேலும் இக்கிளைகளில் ஏடிஎம், பணம் செலுத்தும் இயந்திரம் மற்றும் பாஸ்புக் பிரிண்டர் ஆகிய வசதிகள் வாடிக்கையாளர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளது.
இணையதளம் மற்றும் மொபைல் மூலமாகவும், வங்கி சேவைகளை வழங்குகிறது. KVB DLite என்ற மொபைல் பேங்கிங் செயலியின் மூலம் 150க்கும் அதிகமான நிதி மற்றும் நிதி அல்லாத சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு கேவிபி வழங்குகிறது. இந்த செயலி வாடிக்கையாளர்களுக்கு மேலும் உதவும் வகையில் சமீபத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
கரூர் வைஸ்யா வங்கி பற்றி: கரூர் வைஸ்யா வங்கிக்கு நாடு முழுவதும் 858 கிளைகள் மற்றும் 2200+ ஏடிஎம்கள் மற்றும் பணத்தை மறுசுழற்சி செய்யும் வகையில் டச் பாயின்ட்கள் உள்ளன. கேவிபி அதன் வலுவான நிதி ஆதாரத்துடன் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. 30.09.2024 அன்று வங்கியின் மொத்த வணிகம் ரூ. 1,76,138 கோடி ஆகவும், வைப்புத் தொகை ரூ. 95,839 கோடி ஆகவும் மற்றும் வழங்கப்பட்ட கடன் தொகை ரூ. 80,299 கோடி ஆகவும் உள்ளது. வங்கி இதுவரை இல்லாத அதிகபட்ச நிகர லாபமான ரூ. 1,605 கோடியை கடந்த நிதியாண்டில் பெற்றுள்ளது மற்றும் வங்கியின் நிகர NPA 0.28% ஆக உள்ளது. நடப்பு நிதியாண்டின் அரையாண்டில் வங்கியின் லாபம் ரூ. 932 கோடி ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக