குமார் வேம்பு நிறுவிய முதல் பார்ட்னர்ஸ் நிறுவனத்திடமிருந்து 33 மில்லியன் ரூபாய் நிதி பெறும் பான்ஹெம் வென்ச்சர்ஸ்
· துணிவுடன் இடர்களை எதிர்கொள்ள முதல் தலைமுறையையும் & இம்மாநிலத்தையும் சேர்ந்த தொழில்முனைவோர்களுக்கு முதலீட்டிற்கான ஆதரவுத்தூணாக திகழ உறுதியேற்பு
சென்னை: நவம்பர் 20, 2024: $1 டிரில்லியன் யுஎஸ் டாலர் பொருளாதாரமாக வளர்ச்சியடைவது என்ற இலட்சியத்தை நோக்கி தமிழ்நாடு மாநிலம் முன்னேறி வரும் நிலையில், ஸ்டார்ட்அப் தமிழா என்பதன் படைப்பாளிகளான பான்ஹெம் வென்ச்சர்ஸ், அதற்கான தனது பங்களிப்பை தொடர்ந்து செய்து வருகிறது. தொழில்நுட்ப துறையின் தலைவர்களுள் ஒருவரான திரு. குமார் வேம்பு அவர்களால், சமீபத்தில் நிறுவப்பட்ட "முதல் பார்ட்னர்ஸ்" என்ற முதலீட்டு நிறுவனத்திடமிருந்து ரூ.33 மில்லியன் என்ற புதிய முதலீட்டு நிதியை பான்ஹெம் வென்ச்சர்ஸ் பெற்றிருக்கிறது. திரு. குமார் வேம்பு அவர்களால் இப்போது முதலீடு செய்யப்பட்டிருக்கின்ற பான்ஹெம் வென்ச்சர்ஸ் நிறுவனத்தை இந்த ஆண்டு தொடக்கத்தில் திரு. L. ஹேமச்சந்திரன், திரு. R. பாலச்சந்தர் ஆகியோர் இணைந்து தொடங்கினர். உறுதியான குறிக்கோள் உணர்வுகொண்ட அடுத்த தலைமுறை புத்தாக்குனர்களாகவும் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்குனர்களாகவும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் தலைமுறை தொழில்முனைவோர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு ஆதரவும், ஊக்கமும் அளித்து வளர்ச்சி காண செய்வதே இந்த முதலீட்டு நிறுவனத்தின் குறிக்கோளாகும். இந்நிறுவனம் முதன் முறையாக தொடங்கியிருக்கும் பிரபல பிசினஸ் ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியான ஸ்டார்ட்அப் தமிழா, பல்வேறு தொழில்துறை தலைவர்களிடமிருந்து மூன்று சீசன்களுக்கு ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்காக ரூ.200 கோடிக்கும் அதிகமான முதலீட்டிற்கான வாக்குறுதியை ஏற்கனவே பெற்றிருக்கிறது.
ஆரம்ப நிலையிலும் மற்றும் வளர்ச்சி நிலையிலும் இருக்கின்ற, தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த முதல் தலைமுறை தொழில்முனைவோர்களை அடையாளம் கண்டு, அவர்களை இந்நிகழ்ச்சியில் அறிமுகம் செய்வது இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும். ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்யுமாறு அதிக நிதி வசதியுள்ள தனிநபர்கள் (HNI) முன்வருமாறு அவர்களின் மனப்பான்மையில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும் வினையூக்கியாகவும் இந்நிகழ்ச்சி செயல்படும்;
இம்மாநில மக்கள் மற்றும் அதன் பொருளாதார முன்னேற்றம் ஆகிய இரண்டையும் முன்னெடுத்துச் செல்ல புதிய சிந்தனைகளை உருவாக்கி செயல்படுத்தவும் மற்றும் பிசினஸ் நிறுவனங்களை உருவாக்கவும் ஆர்வமுள்ள முதல் தலைமுறை தொழில்முனைவோர்களை ஊக்குவிப்பதும் இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்.
முதல் பார்ட்னர்ஸ் – ஐ நிறுவியது குறித்து கருத்து தெரிவித்த திரு, குமார் வேம்பு, "எதிர்காலத்திற்காக தமிழ்நாட்டின் கிராமப்புறங்களைச் சேர்ந்த மற்றும் முதல் தலைமுறை தொழில்முனைவோர்களை உருவாக்குவது என்ற தனித்துவ நோக்கத்துடன் தொடங்கப்பட்டிருக்கும் பான்ஹெம்ஸ் – ன் குறிக்கோள் என்னை பெரிதும் ஈர்த்திருக்கிறது; வெற்றிகரமான ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உருவாக்குவதற்கான பான்ஹெம் – ன் அறிவியல் ரீதியிலான அணுகுமுறை சிறப்பானது, இந்த புதுமையான முயற்சியில் முதலில் இணையும் நபராக இருப்பது என்று நான் முடிவு செய்தது இந்த காரணத்திற்காகவே; முதல் பார்ட்னர்ஸ் என்ற நிறுவனம் நிறுவப்படுவதற்கு இதுவே வழிவகுத்தது." என்று குறிப்பிட்டார்.
பான்ஹெம் – ன் நிறுவனர்களான திரு. L. ஹேமச்சந்திரன் & R. பாலச்சந்தர் இது தொடர்பாக கூறியதாவது: "பிசினஸ் நிறுவனங்களைத் தொடங்குவதற்கும் மற்றும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும் முதல் தலைமுறை தொழில்முனைவோர்களுக்கு நிதி ஆதரவு என்பது மிக முக்கியமான அம்சமாகும். இத்தகைய தொழில்முனைவோர்கள், அவர்களது திறன்களை வெளிப்படுத்தவும், அவர்களது சிந்தனைகளை வெற்றிகரமான பிசினஸ் நிறுவனங்களாக மாற்றவும் உதவுவதற்கு நம்பகமான ஆதாரவளமாக இருப்பதே பான்ஹெம் – ல் எமது செயல்திட்டமாக இருக்கிறது. திரு. குமார் வேம்பு அவர்கள், முதலீட்டாளர்களாக எங்களோடு இணைந்திருப்பது எமது செயல்திட்டத்தை இன்னும் அதிக ஆழமானதாகவும் ஆக்கியிருக்கிறது. எமது புத்தம் புதிய ஐ.பி(IP) செயல்திட்டமான ஸ்டார்ட்அப் தமிழா வழியாக, தொழில்முனைவோர்களாக உருவெடுக்க விரும்பும் நபர்கள், அவர்களது கனவுகளை நிஜமாக்குவதற்கு உதவவும் மற்றும் இதன் வழியாக தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்கவும் மற்றும் இம்மாநிலத்தில் நிலைத்து நீடிக்கும் தொழில்முனைவு கலாச்சாரத்தை இன்னும் மேம்படுத்தவும் நாங்கள் எங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறோம்"
இதையொட்டி திரு, குமார் வேம்பு மேலும் கூறியதாவது: "தாராளமயமாக்கலின் முதல் அலையானது, அந்நிய பன்னாட்டு நிறுவனங்கள் வழியாக, உலகளாவிய நிபுணத்துவத்தை பெறுவதற்கு இந்திய பட்டதாரிகளுக்கு திறனதிகாரத்தை வழங்கியது; எண்ணற்ற தொழில்முனைவோர்களுக்கு உத்வேகமளித்து, உலகெங்கிலும் செழிப்பாக வளரக்கூடிய ஸ்டார்ட்அப் சூழலமைப்புக்கு உதவுகின்ற ஒரு இயக்கத்தை தொடங்கி வைத்தது.
இன்றைக்கு ஸ்டார்ட்அப் இந்தியா, ஸ்டார்ட்அப் தமிழ்நாடு தொழில்முனைவுத்திறன் பிரிவுகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான அடைகாப்பு மையங்கள் போன்ற முன்னெடுப்புகள் கல்லூரிகளைச் சேர்ந்த மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றுகின்ற இன்றைய இளம் தலைமுறையினர், அவர்களது சொந்த தொழில்முனைவு பயணங்களை தொடங்குவதற்கு உத்வேகத்தையும், ஆதரவையும் வழங்கி வருகின்றன.
நிதிதிரட்டலை எளிதாக்குகின்ற மற்றும் வெற்றி விகிதங்களை அதிகமாக்குகின்ற ஸ்டார்ட்அப் தமிழாவின் தொலைநோக்குத் திட்டம் பற்றி நான் கேள்விபட்டபோது, தமிழ்நாட்டின் ஸ்டார்ட்அப் சூழலமைப்பில் ஒரு நிலை மாற்றத்தைக் கொண்டு வரும் அதன் சாத்தியத்திறன் மிகத் தெளிவாகத் புலப்பட்டது. முதலீட்டாளர்களோடு ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் நிறுவனர்களை இணைப்பதன் வழியாக, வளர்ச்சியை ஸ்டார்ட்அப் தமிழா விரைவுபடுத்தும்; தொழில்முனைவோர்களின் ஒரு புதிய தலைமுறைக்கு உத்வேகமளிக்கும்; தொழில்முனைவுக்கான சக்தி வாய்ந்த மையமாக மாறுவது என்ற இலக்கை நோக்கி தமிழ்நாட்டை அழைத்துச் செல்லும்.
திரு. பாலச்சந்தர் மற்றும் திரு. ஹேமச்சந்திரன் ஆகியோரின் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமைத்துவத்தில் நிர்வகிக்கப்படும் பான்ஹெம் வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆல் நிர்வகிக்கப்படும் ஸ்டார்ட்அப் தமிழா திட்டத்திற்கு முதல் பார்ட்னர் ஆதரவளிப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, தமிழ்நாட்டின் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை வெற்றிகரமாக உருவாக்க இயலும் என்று நம்புகிறோம்."
ஒரு முன்னணி பொது பொழுதுபோக்கு சேனலில் ஒளிபரப்பப்படவிருக்கும் இந்நிகழ்ச்சியானது, நம்பிக்கையை வெளிப்படுத்துகின்ற தொழில்முனைவோர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு ஆலோசனையுடன் அவசியமான நிதி ஆதரவையும் வழங்கும். தமிழ்நாடு மாநிலத்தின் வெற்றிகரமான தொழில்முனைவு பாரம்பரியத்தை இது மேலும் வலுப்படுத்தும் என்று நிச்சயமாக நம்பலாம்.