SBI 7.6% வட்டி: எஸ்பிஐ அம்ரித் கலாஷ், விருஷ்டி டெபாசிட்..!
எஸ்.பி.ஐ (SBI) வங்கி, 400 நாட்களை முதிர்வு காலமாக கொண்ட எஸ்.பி.ஐ அம்ரித் கலாஷ் (SBI Amrit Kalash) திட்டத்திற்கு 60 வயதுக்கு உட்பட்ட பொதுப் பிரிவினருக்கு 7.1% வட்டியும், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்தக் குடிமகன்களுக்கு 7.6% வட்டியும் வழங்குகிறது.
இந்த வங்கி 444 நாள்களை முதிர்வு காலமாக கொண்ட அம்ரித் விருஷ்டி எஸ்.பி.ஐ (SBI Amrit Vrishti) திட்டத்திற்கு பொது பிரிவினருக்கு 7.25% வட்டியும், சீனியர் சிட்டிசன்களுக்கு 7.75% வட்டியும் வழங்குகிறது.
இந்த இரண்டு திட்டங்களிலும் மார்ச் 31 2025 -ம் வரை முதலீடு செய்யலாம்.