யாசீன் சாஹர், நிதி நிபுணர்
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யும் 5 கோடி இந்தியர்கள்.. 21 கோடி முதலீட்டுக் கணக்குகள்..!
மியூச்சுவல் ஃபண்ட் செப்டம்பர் 2024 க்கான ஆம்ஃபி (AMFI) தகவல்கள்..!
இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையின் நிகர AUM (நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துகள்) செப்டம்பர் 2024 இல் ₹67,09,259.24 கோடியாக உயர்ந்து உள்ளது. ஆகஸ்ட் 2024 இல் இது ₹66,70,305.14 கோடி ஆகும்.
செப்டம்பர் 2024 இல் 5,01,22,609 பிரத்யேக முதலீட்டாளர்கள் (unique investors), இந்திய மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்துள்ளார்கள்.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக் கணக்குகளான ஃபோலியோக்கள் (Folios) செப்டம்பர் 2024 இல் 21,05,15,684 ஆக எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்தன
சிறு முதலீட்டாளர் மியூச்சுவல் ஃபண்ட் ஃபோலியோகள் (ஈக்விட்டி + ஹைப்ரிட் + தீர்வு சார்ந்த திட்டங்கள்) ஆகஸ்ட் 2024 மாதத்திற்கான 16,35,50,846 உடன் ஒப்பிடும்போது, செப்டம்பர் 2024 இல் 16,81,61,366 ஆக உயர்ந்தது.
மார்ச் 2021 முதல் பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் தொடர்ந்து 43-வது மாதம் முதலீடு அதிகரித்துள்ளது.
செப்டம்பர் மாதத்திற்கான குரோத்/ஈக்விட்டி சார்ந்த திட்டங்களின் முதலீடு ₹34,419.26 கோடிகள் ஆகும்.
புதிய எஸ்.ஐ.பிகள்..!
செப்டம்பர் 2024 இல் பதிவு செய்யப்பட்ட புதிய SIP -களின் எண்ணிக்கை 66,38,857 ஆகும். ஆகஸ்ட் 2024 இல் ₹13,38,944.73 கோடிகளுடன் ஒப்பிடும்போது, செப்டம்பர் 2024 இல் SIP AUM ஆனது இதுவரை இல்லாத அளவுக்கு ₹13,81,703.94 கோடியாக அதிகரித்துள்ளது.
ஆகஸ்ட் 2024 இல் ₹ 23,547.34 கோடியாக இருந்த SIP பங்களிப்பு செப்டம்பர் 2024 இல் இதுவரை இல்லாத அளவு ₹24,508.73 கோடியாக உயர்ந்துள்ளது. ஆகஸ்ட் 2024 இல் 9,61,36,329 ஆக இருந்த SIP கணக்குகளின் எண்ணிக்கை செப்டம்பர் 2024 இல் 9,87,44,171 ஆக அதிகரித்துள்ளது.
செப்டம்பர் 2024 இல் மொத்தம் 27 புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டன, இவை அனைத்தும் ஓப்பன் எண்டெட் திட்டத்தின் வகையைச் சேர்ந்தது, மொத்தம் ₹ 14,575 கோடிகள் திரட்டப்பட்டன.
Mr. Yaseen Sahar has been reached at rahas84@gmail.com and 98433 13512
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக