ஸ்ரீராம் ஏஎம்சி
2024 நவம்பர் 4 அன்று தொடங்கும் ஸ்ரீராம் லிக்விட் ஃபண்டு
· 2024 நவம்பர் 8 இந்த NFO (புதிய ஃபண்டு ஆஃபர்) முடிவுக்கு வரும்
· இதுவொரு திறந்தமுனை கொண்ட லிக்விட் திட்டமாகும். ஒப்பீட்டளவில் குறைவான வட்டி விகித இடரையும் மற்றும் மிதமான கிரெடிட் இடரையும் இது கொண்டிருக்கும்.
· பாரம்பரியமான சேமிப்பு கணக்குகளுக்கு ஒரு நிலைப்புத்தன்மையுள்ள லிக்விட் மாற்று வழிமுறையை முதலீட்டாளர்களுக்கு இது வழங்கும். குறுகிய கால நிதிகளுக்கு பாதுகாப்பு மற்றும் எளிதில் பணமாக்கக்கூடிய (லிக்விடிட்டி) வசதியையும் வழங்கும்.
சென்னை - 15 அக்டோபர் 2024: ஸ்ரீராம் குழுமத்தின் ஒரு அங்கமான ஸ்ரீராம் அசெட் மேனேஜ்மெண்ட் கம்பென லிமிடெட், 2024 நவம்பர் 4-ம் தேதியன்று ஸ்ரீராம் லிக்விட் ஃப்ண்டு என்ற திட்டத்தை அறிமுகம் செய்கிறது. குறைவானதிலிருந்து, மிதமான அளவு இடர்களுடன் மற்றும் கடன் மற்றும் பணச்சந்தை பத்திரங்களில் முதலீடு செய்வதன் மூலம் எளிதில் பணமாக்குவதற்கான அதிக திறனையும் கொண்டு சிறப்பான ஆதாயங்களை உருவாக்குவதே இந்த நியூ ஃபண்டின் நோக்கமாகும். இந்த ஃபண்டு, 91 நாட்கள் வரை சராசரி முதிர்வை பராமரிக்கும்.
இந்த புதிய ஃபண்டு ஆஃபர் (NFO), 2024 நவம்பர் 8 அன்று நிறைவிற்கு வரும்.
ஃபண்டு முதலீடு அணுகுமுறை
முதலீடுகள் மீது ஒரு முறை சார்ந்த அணுகுமுறையைப் பின்பற்றுவதன் வழியாக திட்டத்தின் ஆதாயங்கள் மீது சிறப்பான சமநிலையை எட்டும் அதே வேளையில், நிலைப்புத்தன்மை மற்றும் எளிதில் பணமாக்கும் திறன் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கும் இந்த ஃபண்டு, A1+ தரநிலை கொண்ட முறையாவணங்களில் / பத்திரங்களில் முதலீடு செய்யும். பல்வேறு துறைகளில் முதலீடுகளை செய்வதன் மூலம் மற்றும் நிலையான தர கண்ணோட்டத்தோடு சாத்தியமுள்ள மிக அதிக தரநிலையை பல காலமாக கொண்டிருக்கின்ற முறையாவணங்கள் / பத்திரங்களை தேர்வு செய்து முதலீடு செய்வதன் வழியாக இந்த ஃபண்டு அதை செய்யும். டெபாசிட் சான்றிதழ்கள், வர்த்தக ஆவணங்கள், T-பில்கள், G செக்யூரிட்டிகள் மற்றும் பணச்சந்தை NCD-கள் போன்ற கடன் பத்திரங்களின் பொருத்தமான சமநிலை, பாதுகாப்புடன் குறைவான ஏற்ற – இறக்க சாத்தியத்திறனை வழங்கும். கடன் மதிப்பாய்வு மற்றும் கடன் சுழற்சிகள் மீது ஒரு திடகாத்திர அணுகுமுறையோடு சேர்த்து வட்டி விகித சுழற்சிகளையும் கருத்தில் கொள்கிறவாறு ஆராய்ச்சியின் அடிப்படையிலான செயல்முறையைக் கொண்டு இந்த ஃபண்டின் போர்ட்ஃபோலியோ கட்டமைக்கப்படும்.
ஸ்ரீராம் அசெட் மேனேஜ்மெண்ட் கம்பெனி லிமிடெட் – ன் நிர்வாக இயக்குனர் & தலைமை செயல் அதிகாரி திரு, கார்த்திக் L ஜெயின் இந்த ஃபண்டு அறிமுகம் குறித்து கூறியதாவது: "முதலீட்டாளர்களுக்கு நிதிசார் நெகிழ்வுத்திறனை மேம்படுத்துகின்ற தீர்வுகளை வழங்குகின்ற எமது செயல்திட்டத்திற்கு இணக்கமானதாக ஸ்ரீராம் லிக்விட் ஃபண்டு இருக்கிறது. ரீடெய்ல் மற்றும் கார்ப்பரேட் ஆகிய இருதரப்பு முதலீட்டாளர்களுக்கும் பொருத்தமான விருப்பத்தேர்வாக ஆக்கும் விதத்தில் நிலைப்புத்தன்மை, எளிதாக பணமாக்கும் திறன் மற்றும் ஆதாயம் பெறுவதற்கான சாத்தியம் ஆகியவற்றின் சமச்சீரான கலவையை வழங்குகின்ற SLR அணுகுமுறையை பயன்படுத்துவதாக இந்த ஃபண்டு நிர்வகிக்கப்படும். இலாபமீட்டாமல் இருக்கும் சேமிப்பு வங்கிக்கணக்குகளில் இருப்பதை விட சிறப்பான வருவாயை ஈட்டுவதற்கு ரீடெய்ல் முதலீட்டாளர்களுக்கு இந்த ஃபண்டு உதவிகரமாக இருக்கும். அத்துடன், குறைவான ஏற்ற இறக்கத்துடன் எளிதில் பணமாக்கும் திறனையும் இத்திட்டம் வழங்கும என்பதால், கார்ப்பரேட் நிறுவனங்களின் பண மேலாண்மை நோக்கங்களுக்கும் இது பொருத்தமானதாக இருக்கும். தங்களது அவசரநிலை நிதித்தொகைகளை பாதுகாப்பாகவும், திறம்படவும் பராமரிக்க உதவுகின்ற முதலீட்டாளர்களுக்கும் இதுவொரு பொருத்தமான தேர்வாக இருக்கும். இந்த புதிய திட்டத்தினால், எமது வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளை எதிர்கொள்ள எமது போர்ட்போலியோவை நாங்கள் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறோம். வாடிக்கையாளர்களது நிதிசார் இலக்குகளை எட்டுவதற்கு உதவ நம்பகமான, ஆராய்ச்சியின் ஆதரவில் மேற்கொள்ளப்படும் முதலீட்டு விருப்பத்தேர்வுகளுக்கு அவர்களுக்கு அணுகுவசதி இருப்பதை இது உறுதிசெய்யும்."
ஸ்ரீராம் ஏஎம்சி – ன் ஃபண்டு மேலாளர் திரு. சுதிப் மோர் பேசுகையில், "குறைந்த காலஅளவின்போது வருவாயை ஈட்ட விரும்புகின்ற முதலீட்டாளர்களுக்கென ஸ்ரீராம் லிக்விட் ஃபண்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது; மிக உயர்ந்த தரத்திலான, பத்திரங்களில் முதலீடு செய்வதன் வழியாக ஸ்திரத்தன்மை, எளிதில் பணமாக்கும் திறன் மற்றும் இலாப ஆதாயங்களுக்கிடையே சமநிலையை இந்த ஃபண்டு வழங்கும். 75% முதல் 80% முதலீடுகள், டெபாசிட் சான்றிதழ்கள் (CD) மற்றும் வர்த்தக ஆவணங்கள் (CP) செய்யப்படும் ஒதுக்கீட்டு முறையை இந்த ஃபண்டு கொண்டிருக்கும். ஓவர்நைட் ஆவணங்கள் என்பதில் 5%, டெபாசிட் சான்றிதழ்களில் 25%, வர்த்தக ஆவணங்களில் 50% மற்றும் அரசின் கருவூல (T-bills) பில்களில் 20% என இதன் மாதிரி ஒதுக்கீடு இருக்கும். இத்திட்டத்தின் தகவல் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்து ஒதுக்கீடு முறையியலுக்கு இணக்கமானதாக இது இருக்கும். இவைகளின் விகிதாச்சாரமானது, மாறுபட்ட சூழ்நிலைகளைச் சார்ந்து மாறுபடக்கூடும். உயர்தர கடன் மற்றும் பணச்சந்தை ஆவணங்கள் மீது கூர்நோக்கத்துடன் மற்றும் வட்டி விகிதம் மற்றும் கடன் இடர்ப்பாடுகளை குறைப்பதன் மீது கவனம் செலுத்தும் நாங்கள், குறைவான ஏற்ற இறக்கத் தன்மையுடன் நிலையான செயல்திறனை வழங்குவதை இலக்காகக் கொண்டிருக்கிறோம்."