ஐசிஐசிஐ புருடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் அறிமுகம்:
ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் நிஃப்டி200 வேல்யூ 30 ஈடிஎஃப் & ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் நிஃப்டி200 வேல்யூ 30 இண்டெக்ஸ் ஃபண்ட்
முக்கிய அம்சங்கள்:
- புதிய ஃபண்ட் வெளியீடு (NFO) 2024 செப்டம்பர் 30-ம் தேதி ஆரம்பிக்கிறது, அக்டோபர் 14 நிறைவு பெறுகிறது.
- நிஃப்டி 200 குறியீட்டில் மதிப்பு குறைந்த பங்குகளில் முதலீடு
- ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் நிஃப்டி200 வேல்யூ 30 ஈடிஎஃப் & ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் நிஃப்டி200 வேல்யூ 30 இண்டெக்ஸ் ஃபண்ட் புதிய ஃபண்ட் வெளியீட்டின் போது குறைந்தபட்ச முதலீடு ரூ. 100 ஆகும்.
- இப்போது வரைக்கும் நிஃப்டி200 வேல்யூ 30 டிஆர்ஐ, நிஃப்டி 200 டிஆர்ஐ குறியீட்டை 10 -க்கு 6 முறை விஞ்சி உள்ளது.
மும்பை, செப்டம்பர் 30, 2024:
ஐசிஐசிஐ புருடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் (ICICI Prudential Mutual Fund) நிறுவனம், ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் நிஃப்டி200 வேல்யூ 30 ஈடிஎஃப் (ICICI Prudential Nifty200 Value 30 ETF) திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. நிஃப்டி200 வேல்யூ 30 குறியீட்டை (Nifty200 Value 30 Index) பின்பற்றும் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யக் கூடிய யூனிட்களை விற்க கூடிய ஓப்பன் எண்டெட் ஃபண்டாக இது உள்ளது.
ஐசிஐசிஐ புருடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் நிஃப்டி200 வேல்யூ 30 இண்டெக்ஸ் ஃபண்ட் (ICICI Prudential Nifty200 Value 30 ETF) என்கிற திட்டத்தையும் அறிமுகப்படுத்தி உள்ளது. இதுவும் நிஃப்டி200 வேல்யூ 30 குறியீட்டை பின்பற்றும் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யக் கூடிய யூனிட்களை விற்க கூடிய ஓப்பன் எண்டெட் ஃபண்டாக இது உள்ளது.
இந்த இரு ஃபண்டுகளும் ஸ்மார்ட் பீட்டா வகையின் கீழ் வருகின்றன, முதலீட்டாளர்களுக்கு குறைந்த விலை, மதிப்பீடு சார்ந்த முதலீட்டு அணுகுமுறையை வழங்குவதற்கான காரணி (factor) அடிப்படையிலான உத்தியில் கவனம் செலுத்துகிறது.
நிஃப்டி200 வேல்யூ 30 இண்டெக்ஸ் ஃபண்ட் ஆனது நிஃப்டி200 வேல்யூ 30 இண்டெக்ஸ் -லிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 30 நிறுவனப் பங்குகளைக் கொண்டுள்ளது, இது ஒரு 'மதிப்பீட்டு மதிப்பெண்' (Value Score) அடிப்படையில். முக்கிய மதிப்பீட்டு காரணிகளைப் பயன்படுத்தி முதலீட்டு வாய்ப்புகளை எளிதாகக் கண்டறிய உதவும் மதிப்பெண் ஆகும். நிலையான நீண்ட கால வளர்ச்சிக்கான நல்ல திறனை வெளிப்படுத்தும் நிறுவனங்களை இந்தக் குறியீடு கொண்டுள்ளது.
ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் ஏஎம்சியின் முதன்மை முதலீட்டு உத்தி அதிகாரி சிந்தன் ஹரியா, (Chintan Haria, Principal – Investment Strategy at ICICI Prudential AMC) கூறும் போது, "
முதலீட்டாளர்கள் நீண்ட கால முதலீட்டு வளர்ச்சிக்கு பலதரப்பட்ட உத்திகளை நாடும் நேரத்தில், மதிப்பு முதலீடு என்பது நன்கு போர்ட்ஃபோலியோவின் முக்கிய அங்கமாக உள்ளது. இந்த நிஃப்டி200 வேல்யூ 30 ஈ.டி.எஃப் மற்றும் இண்டெக்ஸ் ஃபண்டை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது முதலீட்டாளர்களுக்கு மதிப்பு அடிப்படையிலான முதலீட்டுக்கான இலக்கு அணுகுமுறையை வழங்குகிறது, இது நீண்ட கால முதலீட்டு வளர்ச்சியை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது." என்றார்.
இந்தக் குறியீடு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மறுசீரமைக்கப்படுகிறது, எனவே, இது முற்றிலும் சந்தை போக்குகள் மற்றும் மதிப்பீட்டுக் கொள்கைகளுடன் ஒத்துப்போகும் எனலாம்.
முதலீட்டாளர்கள் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?
- மதிப்பு அடிப்படையிலான முதலீடு: இந்தத் திட்டங்கள் மதிப்பு முதலீட்டின் கருத்தை அடிப்படையாகக் கொண்டவை, இது குறைவான மதிப்பீடு கொண்ட பங்குகளை இலக்காகக் கொண்டது.
- பல்வகைப்படுத்தல்: பல்வேறு துறைகளைச் சேர்ந்த 30 நிறுவனங்களில் முதலீட்டாளர்களை முதலீடு செய்ய வைக்கிறது. இது பங்கு போர்ட்ஃபோலியோவை பன்முகப்படுத்துகிறது.
- வெளிப்படைத்தன்மை மற்றும் குறைந்த செலவு: இரண்டு திட்டங்களும் முதலீட்டாளர்களுக்கு குறைந்த டேர்ன் ஓவர் கொண்ட போர்ட்ஃபோலியோ வழங்குகிறது.
துறை சார்ந்த வெளிப்பாடு:
நிஃப்டி200 மதிப்பு 30 குறியீடு, நிதிச் சேவைகள், எண்ணெய், எரிவாயு மற்றும் நுகர்வு எரிபொருள்கள், உலோகங்கள் மற்றும் சுரங்கம், மின்சாரம், கட்டுமானப் பொருட்கள், ரசாயனங்கள் மற்றும் தொலைத்தொடர்பு ஆகிய துறை சார்ந்த பங்குகளை கொண்டுள்ளது. நிறுவனங்களின் மதிப்பீடு அடிப்படையில் இந்த வெளிப்பாடு மாறுகிறது. நிறுவனங்களின் மதிப்பீட்டின் அடிப்படையில் இந்த வெளிப்பாடு மாறுகிறது.
வருமான செயல்பாடு:
இப்போது வரைக்கும் நிஃப்டி200 வேல்யூ 30 டிஆர்ஐ, நிஃப்டி 200 டிஆர்ஐ குறியீட்டை 10 -க்கு 6 முறை விஞ்சி உள்ளது. சில சந்தை நிலைமைகளின் கீழ் முதலீட்டாளரின் போர்ட்ஃபோலியோவிற்கு மதிப்பீடு அடிப்படையிலான முதலீடு என்பது சாத்தியமான உத்தி என்று குறிப்பிடுகிறது..
சந்தையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப செயல்படுதல்..!
குறியீட்டில் இடம் பெறும் நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தையில் நிலவும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப சீரமைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் குறியீட்டில் நிதிச் சேவைகளில் அதிக வெயிட்டேஜ் கொண்டதாக இருந்தது. ஏனெனில் இந்தத் துறை பங்குகளின் மதிப்பு மதிப்பெண் அதிகமாக இருந்தது ஆகும். இந்த நெகிழ்வுத்தன்மை, பல்வேறு துறைகளுக்கான வெளிப்பாடு, அளவு அடிப்படையில் கிடைக்கும் மதிப்பு வாய்ப்புகளுக்கு ஏற்ப தொடர்ந்து அளவீடு செய்யப்படுவதை உறுதி செய்கிறது.
என்எஸ்இ 200 என்பது மிட்கேப் நிறுவன பங்குகளையும் கொண்டுள்ளது. மதிப்பீடு ஸ்கோரைப் பயன்படுத்துவதால், மிட்கேப் பங்குகளுக்கான வெளிப்பாடு நிலைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, மிட்கேப் பங்குகள் 2022 இல் அதிக மதிப்பைக் கொண்டிருந்தன, ஆனால் 2019 இல், மிட்கேப் பங்குகளின் வெளிப்பாடு கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகக் குறைவாக இருந்தது.
முதலீட்டுக் கலவை விவரங்கள்:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக