மொத்தப் பக்கக்காட்சிகள்

முதியோர்களுக்காக மகாபலிபுரம் அருகே வேத பாரம்பரியத்தில் 14 ஏக்கரில் 800 குடியிருப்புகள் Golden Planet Senior Heritage Homes Pvt. Ltd,

 

ஓய்வு காலத்தை மகிழ்ச்சியுடன் கழிக்க விரும்பும் முதியோர்களுக்காக மகாபலிபுரம் அருகே வேத பாரம்பரியத்தில் 14 ஏக்கரில் 800 குடியிருப்புகள்: கோல்டன் பிளானட் சீனியர் ஹெரிடேஜ் ஹோம்ஸ் நிறுவனம் கட்டுகிறது

------

~ ஜகத்குரு சங்கராச்சார்யா ஜோதிஸ்பீடேஷ்வர் ஸ்வாமி முக்தேஸ்வரானந்த் சரஸ்வதி கோசாலைக்கு அடிக்கல் ~

 

சென்னை, அக். 17- 2024: முதியோர் தங்கள் ஓய்வு காலத்தை இந்தியாவின் ஆன்மீக மற்றும் கலாச்சார மரபுகளுடன் மகிழ்ச்சியாக கழித்திடும் வகையில் மகாபலிபுரம் அருகே வேத பாரம்பரியத்தில் நவீன வசதிகளுடன் கூடிய வீடுகள் மற்றும் வில்லாக்களை கட்ட இருப்பதாக கோல்டன் பிளானட் சீனியர்  ஹெரிடேஜ் ஹோம்ஸ் (Golden Planet Senior Heritage Homes Pvt. Ltd,) நிறுவனம் இன்று அறிவித்தது. 14 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள இங்கு 800க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. இவை பண்டைய இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்துடன் அமைதியான சூழலை பிரதிபலிக்கும் வகையில் கட்டப்பட இருப்பதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இங்கு வேத பாடசாலை, கோசாலை, ஆன்மீக தலைவர்களுக்கான குடியிருப்புகள் மற்றும் சடங்கு மண்டபங்களும் கட்டப்பட உள்ளன. பாரம்பரியம் மற்றும் அமைதியான சூழலில் வளமான வாழ்க்கையைத் தேடும் முதியவர்களுக்கான ஆன்மீக வாழ்விடமாக இது இருக்கும் என்று கோல்டன் பிளானட் சீனியர்  ஹெரிடேஜ் ஹோம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

இங்கு அமைய உள்ள கோசாலைக்கு சங்கராச்சாரியார் பூஜ்ய ஜகத்குரு சங்கராச்சாரியா ஜோதிஸ்பீடேஷ்வர் ஸ்வாமி அவிமுக்தேஷ்வரனந்த் சரஸ்வதி அடிக்கல் நாட்டி, அந்த இடத்தை ஆசீர்வதித்து, பசுக்களை பாதுகாக்க இந்நிறுவனம் மேற்கொண்டு வரும் நடவடிக்கை குறித்து பாராட்டினார். ஆன்மீக நல்வாழ்வின் சின்னமாக பசு பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தும் அவர் எடுத்துரைத்தார், மேலும் இந்த உன்னதமான காரியத்தில் பங்கேற்று பலம் சேர்க்குமாறு அனைவருக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.

 

கோல்டன் பிளானட் ஹெரிடேஜ் சீனியர் லிவிங் நிறுவனத்தின் தனித்துவமான இந்த குடியிருப்புகள், முதியவர்களுக்கு நவீன வசதிகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், ஆன்மீகம், கலாச்சாரம் குறித்து அறிந்து கொள்ளவும், நிலையான வாழ்க்கை மற்றும் பரபரப்பு இல்லாத அமைதியான சூழலையும் வழங்கும்.

 

இது குறித்து கோல்டன் பிளானட் சீனியர் ஹெரிடேஜ் ஹோம்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஹரிஹரன் கூறுகையில், இந்தியாவின் புனித மரபுகளை மதிக்கும் அதே வேளையில், நவீன வசதியுடன் மிக உயர்தர குடியிருப்புகளை வழங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இந்த இடம், இயற்கை, ஆன்மீகம் மற்றும் நமது கலாச்சார வேர்களுடன் முதியவர்களுக்கான அமைதியான வாழ்விடமாக இருக்கும் என்று தெரிவித்தார்.

 

For Further Information please contact: www.mygoldenplanet.com Rishi @ 6384 04 05 06

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இப்போது பங்குச் சார்ந்த திட்டங்களில் எப்படி முதலீடு செய்தால் லாபம்? ச.ஶ்ரீதரன், நிதி ஆலோசகர்

இப்போது பங்குச் சார்ந்த திட்டங்களில் எப்படி முதலீடு செய்தால் லாபம்?  By திரு . ச . ஶ்ரீதரன் , நிதி ஆலோசகர் ,  https://www.walletwealth....