ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் - இந்தியாவின் முதல் பிரெய்லி காப்பீட்டு பாலிசி
- 40% அல்லது அதற்கு மேற்பட்ட குறைபாடுள்ளவர்களுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்குகின்ற தொழில் துறை முதல் பிரெய்லி பதிப்பான ஸ்பெஷல் கேர் கோல்ட் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.
- காப்பீட்டுத் துறையில் வருமான வாய்ப்புகளின் மூலம் பார்வை குறைபாடுள்ள நபர்களுக்கு அதிகாரம் அளிக்க ஒரு நீண்ட கால உள்ளடக்கிய மற்றும் பன்முகத்தன்மை முன்முயற்சியைத் தொடங்குகிறது.
சென்னை, செப்டம்பர் 4, 2024 - இந்தியாவின் மிகப்பெரிய சில்லறை உடல்நல காப்பீட்டு நிறுவனமான ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைட் இன்சூரன்ஸ் கோ. லிமிடெட் (ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்) இன்று பிரெய்லி இல் தொழில்துறை முதல் காப்பீட்டு பாலிசியின் அறிமுகத்தை அறிவித்தது. ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பன்முகத்தன்மை மற்றும் அணுகல்தன்மைக்கான உறுதிப்பாட்டை வலுப்படுத்துகின்ற வகையில் பார்வைத்திறன் குறைபாடுள்ளவர்கள் மற்றும் பார்வையற்ற நிலவரத்திலிருந்து மீண்டவர்கள் தகவல்களை அணுகி அவர்களின் உடல்நலம் மற்றும் நிதி தொடர்பான விஷயங்களில் சுயாதீனமாக முடிவெடுப்பதை உறுதிசெய்வதில் இது ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாக இருக்கிறது. இந்தியாவில் 34 மில்லியன் பார்வைத் திறன் குறைபாடுள்ள /பார்வையற்ற நிலவரத்திலிருந்து மீண்ட தனிநபர்களின் வருமானம் ஈட்டும் வாய்ப்புகளுடன் பொருளாதார ரீதியாக வலுவூட்டுவதற்காக ஒரு பன்முகத்தன்மை மற்றும் நிதி உள்ளடக்கிய முயற்சியையும் ஸ்டார் ஹெல்த் தொடங்கியுள்ளது. சமூகத்தின் இந்த சேவை செய்யப்படாத, பின்தங்கிய பிரிவினரை நிறுவனத்தின் உடல்நல காப்பீட்டு முகவர்களாக பணியாற்றுவதற்கு பயிற்சி மற்றும் திறன் மேம்படுத்துதலுடன் ஆதரவளிக்க இது உறுதிபூண்டுள்ளது. இந்த வடிவமைப்பின்
அற்புதமான விஷயம் என்னவென்றால், இது அவர்கள் விரும்பும் வேகத்தில், அவர்களுக்குப் பழக்கமான சூழலில் வேலை செய்ய மற்றும் அவர்களின் சொந்த வாழ்க்கையை வாழவும் உதவும்.
ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி திரு. ஆனந்த் ராய் கூறுகையில் "பிரெய்லி யில் 'ஸ்பெஷல் கேர் கோல்ட்' பாலிசியின் அறிமுகத்தை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். சமூகத்தின் அனைத்துப் பிரிவினர் முழுவதிலும் மருத்துவக் காப்பீட்டிற்கான சமமான அணுகலை வழங்குவதற்கான எங்கள் பணியில் இது ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையாக இருக்கிறது. மாற்றுத்திறனாளி தனிநபர்கள் அவர்களுக்குத் தேவையான முழுமையான ஆதரவையும் காப்பையும் பெறுவதை உறுதிசெய்வதற்கான எங்கள் உறுதிப்பாட்டை உள்ளடக்குகின்ற வகையில் இந்த பாலிசி பாரம்பரியக் காப்பீட்டை விஞ்சுகிறது. குறிப்பாக இந்தியாவில் பார்வைக் குறைபாடுள்ள 34 மில்லியன் தனிநபர்களுக்கு சேவை செய்கின்ற ஒரு மிகவும் உள்ளடக்கிய காப்பீட்டுத் துறையை உருவாக்குவதை நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம். IRDAI இன் 'அனைவருக்கும் காப்பீடு' என்ற தொலைநோக்கிற்கிணங்க, தரமான உடல்நல காப்பீட்டை அனைவருக்கும் கிடைக்கச்செய்வதை உறுதி செய்வதற்கு நாங்கள் அர்ப்பணித்துள்ளது மாத்திரமல்ல, அதோடு கூட சமூகத்தின் இந்த சேவை செய்யப்படாத மற்றும் பின்தங்கிய பிரிவினருக்கு நிலையான வருமானத்தை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் நிதி உள்ளடக்கத்தை செயல்படுத்துவத்தை விரிவுபடுத்தவும் நாங்கள் அர்ப்பணித்துள்ளோம். இந்த இயக்கத்தை பிரகடனம் செய்ய சமுதாயத்தில் ஒரு ஆற்றல்மிக்க சக்தியான ஸ்ரீகாந்த் பொல்லா வை விட சிறந்தவர் யார் உண்டு ."என்றார்.
பொல்லன்ட் இண்டஸ்ட்ரீஸ் இன் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு. ஸ்ரீகாந்த்பொல்லா கூறுகையில், "சிறப்புத் திறன்களைக் கொண்ட தனிநபர்கள் எதிர்கொள்ளும் சவால்களை அனுபவித்த ஒருவர் என்ற முறையில், இந்த தொழில்துறை முதல் உள்ளடக்கிய முயற்சிக்காக ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தை நான் பாராட்டுகிறேன். ஸ்பெஷல் கேர் கோல்ட் என்பது பிரெய்லி யில் உள்ள காப்பீட்டு பாலிசி மட்டுமல்ல; இது அதிகாரம் மற்றும் சம வாய்ப்பு ஆகியவற்றிற்கான ஒரு வெளிப்பாடாகவும் இருக்கிறது. சிறப்புத் திறன்களைக் கொண்டவர்களுக்கும் மற்ற எவரையும் போலவே உடல்நலப் பாதுகாப்பிற்கான உரிமை உண்டு
என்பதை இது அங்கீகரிக்கிறது, மேலும் இது நமது சமூகத்தில் உண்மையான உள்ளடக்கத்தை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகவும் இருக்கிறது. நானும் எனது குடும்பமும் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸின் பெருமைக்குரிய வாடிக்கையாளர்களாக இருக்கிறோம் - இப்போது ஸ்டார் ஹெல்த் இன் உரிமம் பெற்ற ஒரு உடல்நல காப்பீட்டு முகவராக மாறுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் அவர்களின் சொந்த எதிர்காலத்தை உருவாக்க அவர்களுக்கு உதவுவதற்கு இந்த முக்கியமான ஆதரவு தேவைப்படுபவர்களை அடைய இதை மேலும் பரம்பச் செய்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்."என்றார்.
பார்வைத்திறன் குறைபாடு கொண்ட தொழில்முனைவோரும், பொல்லன்ட் இண்டஸ்ட்ரீஸ் இன் இணை நிறுவனர் மற்றும் தலைவருமான புகழ்பெற்ற தொழிலதிபர் திரு. ஸ்ரீகாந்த்பொல்லா, ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி, திரு.ஆனந்த் ராய் உடன் இணைந்து இந்த வெளியிட்டு நிகழ்வை சிறப்பித்தார்.
'ஸ்பெஷல் கேர் கோல்ட்' பாலிசியானது, மாற்றுத்திறனாளிகளின் (PWD) தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக குறிப்பாக வடிவமைக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டில், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் இந்தியாவில் 34 மில்லியன் மக்கள் அல்லது மக்கள்தொகையில் 2.5% பேர் பார்வைக் குறைபாடுடையவர்கள் என்று அறிவித்தது. இந்தியன் ஜேர்னல் ஆஃப் அப்தால்மொலஜி ஆல் வெளியிடப்பட்ட ஒரு 2022 ஆய்வு, பார்வைக் குறைபாடு, INR 9,192 இன் ஒரு தனிநபர் வருமான இழப்புடன் உற்பத்தித் திறனில் INR 646 பில்லியன் இன் ஒரு பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது என்று மதிப்பிட்டுள்ளது. இந்த பாலிசியானது, வாடிக்கையாளர்களின் முக்கியமான ஆனால் சேவை செய்யப்படாத பிரிவினருக்கு உள்ளடக்கிய மற்றும் முழுமையான உடல்நல காப்புக்கான ஒரு முக்கியமான தேவையை பூர்த்தி செய்கிறது. ஸ்பெஷல் கேர் கோல்ட் திட்டமானது, பெரும்பாலும் கவனிக்கப்படாத நிலைமைகளில் உள்ளவர்கள் உட்பட அனைவருக்கும் தரமான உடல்நலப் பாதுகாப்பு அணுகக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்கின்ற ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது.
ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் இந்த புதிய பணியமர்த்தப்பட்டவர்களுக்கு முழு நிதியுதவியுடன் கூடிய தேர்வுக்கான முன்னேற்பாடுகள், ஆடியோ பயிற்சி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்வு எழுதுபவர் (PWD) உள்ளிட்ட முழுமையான ஆதரவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தொடர்ச்சியான உதவிகளை வழங்குவதற்கும் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கும் முகவர்களுக்கான ஒரு பிரத்யேக ஹாட்லைன் எண் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த முன்முயற்சி, விளிம்புநிலை சமூகங்களுக்கு அணுகக்கூடிய மற்றும் அவர்களின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப வருமானத்தை உருவாக்குகின்ற வகையில், அவர்களின் விரும்புகின்ற வேகத்தில் மற்றும் அவர்களின் வீடுகளின் வசதியிலிருந்து வேலை செய்வதற்கான நெகிழ்வுத்தன்மையை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த "ஸ்பெஷல் கேர் கோல்ட்" பாலிசி ஆவணத்தின் பிரெய்லி பதிப்பு, தேசிய பார்வையற்றோர் சங்கம் (National Association of the Blind (NAB) உடன் இணைந்து தயாரிக்கப்பட்டது. இந்த பாலிசியானது, உடல், உணர்வு அல்லது அறிவாற்றல் குறைபாடுகள் உள்ளவர்கள் உட்பட, 40% அல்லது அதற்கு மேற்பட்ட குறைபாடுள்ள தனிநபர்களுக்கு, தனிப்பயனாக்கப்பட்ட கவரேஜை வழங்குகிறது. இது அத்தியாவசிய மருத்துவ சிகிச்சைகள் மற்றும் ஆதரவு சேவைகளை உள்ளடக்குகிறது.
மேலும் தகவலுக்கு www.starhealth.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
ஆங்கிலத்தில் படிக்க
https://www.myreality.co.in/2024/09/star-health-insurance-launches-indias.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக