வாடிக்கையாளர் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க நிவா பூபா காப்பீடு நிறுவனத்துடன் கைகோர்க்கும் ஏயு ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்
AU SFB-ன் ஒரு கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள், இப்போது உடல்நல காப்பீடு திட்டங்களின் விரிவான தொகுப்பிலிருந்து தங்களுக்கு தேவையானதை தேர்வு செய்யலாம்.
மும்பை / சென்னை, செப்டம்பர் 21, 2024: இந்தியாவின் மிகப்பெரிய சிறு நிதி வங்கியான ஏயு ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் ("AU SFB"), தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான உடல்நல காப்பீடு திட்டங்களை வழங்குவதற்காக நிவா பூபா ஹெல்த் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் உடன் ("Niva Bupa") கூட்டாண்மை ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவதை இன்று மகிழ்ச்சியுடன் அறிவித்திருக்கிறது. ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் (இப்போது AU SFB உடன் இணைக்கப்பட்டிருக்கிறது) நிவா பூபா உடன் ஏற்கனவே இருந்து வந்த நல்லுறவை அடித்தளமாகக் கொண்ட இந்த ஒத்துழைப்பானது, புதுப்பிக்கப்பட்ட பிசினஸ் செயல் திட்டத்தை அறிமுகம் செய்கிறது. இதன் மூலம் AU SFB அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சேவைகளின் தொகுப்பு மேலும் மேம்படுத்தப்படுகிறது.
இக்கூட்டாண்மையின் வழியாக முன்னாள் ஃபின்கேர் SFB கிளைகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் உட்பட AU SFB-ன் புதிய மற்றும் ஏற்கனவே இருந்துவரும் வாடிக்கையாளர்கள் நிவா பூபா-வின் விரிவான உடல்நல காப்பீடு திட்டங்களை இப்போது பெற முடியும். இத்தொகுப்பில் சுகாதார காப்பீடு, தனிநபர் விபத்து காப்பீடு, உயிருக்கு ஆபத்தான காப்பீடு திட்டங்கள் என அனைத்தும் உள்ளடங்கும். இந்தியாவிலுள்ள 2,414 வாடிக்கையாளர் தொடுமுனைகள் அனைத்திலும் இக்காப்பீடு திட்டங்களை வாடிக்கையாளர்கள் பெற முடியும். தொழில்நுட்பம் மற்றும் சேவை அலகுகள் வழியாக கட்டுப்படியாகக்கூடிய மிதமான கட்டணங்களில் வெளிப்படையான, மதிப்புமிக்க காப்பீடு திட்டங்களை தனது வாடிக்கையாளர்கள் பெற்று பயனடையுமாறு ஏதுவாக்க AU SFB-க்கு திறனதிகாரம் வழங்குவதே இக்கூட்டாண்மையின் நோக்கமாகும்.
இந்தியாவில் 22 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் 210 நேரடி கிளைகளை உள்ளடக்கிய நிவா பூவாவின் வலையமைப்பை, இந்தியாவெங்கும் அமைந்திருக்கும் AU SFB-ன் விரிவான கட்டமைப்போடு ஒருங்கிணைப்பதன் வழியாக இந்த இரு பெருநிறுவனங்களும் வாடிக்கையாளர் நலன் மீது முன்னுரிமை காட்டும் உடல்நல காப்பீடுக்கான பிரத்யேக தீர்வுகளை வழங்க ஒத்துழைக்கும்.
ஏயு ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்-ன் செயலாக்க இயக்குநர் மற்றும் துணை தலைமை செயலாக்க அதிகாரி திரு. உத்தம் திப்ரேவால் இக்கூட்டாண்மை குறித்து பேசுகையில், "ஏயு ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் வாடிக்கையாளர்களது நலனையே நாங்கள் முதன்மை இடத்தில் வைக்கிறோம். அவர்களது தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்கிற அவர்களது இலக்குகளை அடைய அவர்களுக்கு உதவுகிறவாறு விருப்பத்தேர்வு, நெகிழ்வுத்திறன் மற்றும் பிரத்யேக தீர்வுகளை வழங்கி திறனதிகாரம் பெறச்செய்வதில் தளராத பொறுப்புறுதியை நாங்கள் கொண்டிருக்கிறோம். நிவா பூபா ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் இந்த ஒத்துழைப்பு உடன்பாட்டை செய்திருப்பதன் வழியாக, எமது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களின் நலவாழ்வை உயர்த்துகிறவாறு தனிப்பயனாக்கப்பட்ட உடனடி காப்பீடு தீர்வுகளைக் கொண்டு எமது கிளைகளின் வங்கிச் சேவைகளை நாங்கள் மேலும் வலுப்படுத்துவோம். AU SFB-ல் எமது வாடிக்கையாளர்களுக்காக ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு சுகாதார சூழலமைப்பை நாங்கள் கட்டமைக்கிறோம். இதன் மூலம் காப்பீடு தொடர்பான பல்வேறு பலன்கள் மற்றும் சேவைகளை அவர்கள் இதன் மூலம் பெற முடியும். காப்பீடு சார்ந்த உரிமைக்கோரிக்கைகளுக்கு விரைவான தீர்வுகளையும் அவர்கள் இதனால் பெற முடியும்" என்று கூறினார்.
நிவா பூபா ஹெல்த் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்-ன் நிர்வாக இயக்குநர் & தலைமை செயலாக்க அதிகாரி திரு. கிருஷ்ணன் ராமச்சந்திரன் இது தொடர்பாக கூறியதாவது: "2047-ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் காப்பீடு என்ற தொலைநோக்கு குறிக்கோளை அடைவதற்கு, காப்பீடு திட்டங்களின் விநியோகம் மீது நாம் சிறப்பு கவனம் செலுத்துவது அவசியம். இந்நாட்டிலுள்ள ஒவ்வொரு நபரையும் இத்திட்டங்கள் சென்றடைவதை நாம் உறுதி செய்ய வேண்டும். ஏயு ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் உடனான எமது கூட்டாண்மையானது எமது விநியோக செயற்பரப்பை மேலும் விரிவாக்க எங்களுக்கு உதவும். இதன் மூலம் அவ்வங்கியின் வாடிக்கையாளர் அடித்தளத்திற்கு உடல்நல காப்பீட்டின் விரிவான தீர்வுகளை நாங்கள் நேர்த்தியாக வழங்குவதற்கு வழிவகுக்கும்".
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக