மொத்தப் பக்கக்காட்சிகள்

ஸ்டார் ஹெல்த் & பாலிசிபஜார்: நீண்ட கால உடல்நல காப்பீட்டு திட்டம் 'சூப்பர் ஸ்டார்'

ஸ்டார் ஹெல்த் & பாலிசிபஜார்: நீண்ட கால உடல்நல காப்பீட்டு திட்டம் 'சூப்பர் ஸ்டார்'

 

ஸ்டார் ஹெல்த் மற்றும் பாலிசிபஜார் ஆகிய நிறுவனங்கள் ஒரு நெகிழ்வான நீண்ட கால உடல்நல காப்பீட்டு திட்டமான 'சூப்பர் ஸ்டார்' திட்டத்தை அறிமுகம் செய்கின்றன

-      வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய, உடல்நலக் காப்பீட்டில் நெகிழ்வுத்தன்மை மற்றும் தனிப்பயனாக்கம் ஆகியவற்றை மறுவரையறை செய்கிறது.

 

-      ஒரு 5 வருட பாலிசி காலத்துடன் கூடிய ஒரு நீண்ட கால உடல்நல காப்பீட்டு பாலிசி.

சென்னை, செப்டம்பர் 13, 2024: ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைட் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்) மற்றும் பாலிசிபஜார் ஆகிய நிறுவனங்கள் அதிக நுகர்வோர் மதிப்பை வழங்கும் இலக்குடன், வடிவமைப்பால் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட, தனிப்பயனாக்கப்பட்ட நீண்ட கால உடல்நலக் காப்பீட்டுத் திட்டமான 'சூப்பர் ஸ்டார்' திட்டத்தின் அறிமுகத்தை இன்று அறிவித்தன. இந்த புரட்சிகர திட்டம், பாலிசிதாரர்களின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் இணையற்ற நெகிழ்வுத்தன்மை மற்றும் தகவமைப்புத் தன்மையை வழங்குகிறது.

தனிநபர்கள் மற்றும் குடும்பங்கள் இருவருக்கும் பொருந்தக்கூடிய நீண்ட கால 5 வருட பாலிசி காலம். இந்த சூப்பர் ஸ்டார் இன்சூரன்ஸ் திட்டம், பல்வேறு வாழ்க்கையின் பல கட்டங்கள் முழுவதிலும் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு நெகிழ்வான கவரேஜை வழங்குவதன் மூலம் உடல்நலக் காப்பீட்டு சந்தையில் ஒரு முன்னுதாரண மாற்றத்தைக் குறிக்கிறது. சூப்பர் ஸ்டார் என்பது பாலிசிபஜார் இணையதளம் மற்றும் ஸ்டார் ஹெல்த் ஆன்லைன் போர்ட்டல் மூலம் இங்கே கிடைக்கும் ஒரு டிஜிட்டல் திட்டம் மட்டுமே ஆகும்.

இந்த திட்ட அறிமுகம் குறித்து கருத்து தெரிவிக்கையில், PB ஃபின்டெக் நிறுவனத்தின் கூட்டுக் குழும தலைமை நிர்வாக அதிகாரி திரு. சர்ப்வீர் சிங், "உடல்நல பராமரிப்பு செலவுகள் அதிகரித்து வருவதால், நெகிழ்வான, முழுமையான மருத்துவக் காப்பீட்டின் தேவை மிகவும் முக்கியமானதாக இருந்ததில்லை. தொழில்துறையில் உண்மையான புரட்சிகரமாக அமைக்கின்ற சூப்பர் ஸ்டார் திட்டமானது,

 

வாடிக்கையாளர்கள் தங்களுடன் விரிவடையும் கவரேஜைத் தேர்வுசெய்ய அனுமதிக்கின்றதன் மூலம் அந்தத் தேவையைப் பூர்த்தி செய்கிறது. இந்த நெகிழ்வான ஹெல்த் இன்சூரன்ஸ் தீர்வை மில்லியன் கணக்கான இந்திய குடும்பங்களுக்குக் கிடைக்கச் செய்வதற்கு வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்கள் நிதிப் பாதுகாப்பைக் கொண்டிருப்பதை உறுதிசெய்கின்ற ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் கூட்டாளியாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்." என்று கூறினார்.

ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் திரு. ஆனந்த் ராய் கூறுகையில், "ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில், பாலிசிபஜார் உடன் இணைந்து, இந்தியாவின் வளர்ந்து வரும் தேவைகளுக்கு ஒரு மாற்றியமைக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் தீர்வான சூப்பர் ஸ்டார் திட்டத்தை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் ஆழமான துறைசார் நுண்ணறிவுகளால் உந்தப்பட்ட சூப்பர் ஸ்டார் திட்டம் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கிய கட்டத்திலும் தனிநபர்கள் தங்கள் கவரேஜைத் தனிப்பயனாக்க அதிகாரம் அளிக்கின்ற இணையற்ற நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.

உங்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட, விரிவான சுகாதாரப் பாதுகாப்புடன் தனிப்பயனாக்கத்தில் ஒரு புதிய தரநிலையை அமைக்கின்ற தரமான நீண்ட கால உடல்நலப் பாதுகாப்பை அனைவருக்கும் கிடைக்கச்செய்கின்ற அதே வேளையில், சூப்பர் ஸ்டார் திட்டம் இணையற்ற மன அமைதியை உறுதியளிக்கிறது."என்று கூறினார்.

 

தனித்துவமான அம்சங்கள்

 

உங்கள் வயதை நிலையாக வைத்திருங்கள்

இந்த புரட்சிகரமான அம்சம் பாலிசிதாரர்கள் தங்கள் நுழைவு-வயது அடிப்படையிலான பிரீமியங்களை உரிமைகோரல் சமர்ப்பிக்கப்படும் வரை பராமரிக்க அனுமதிக்கிறது, இதன் விளைவாக கணிசமான நீண்ட கால சேமிப்புகள் கிடைக்கும்.

 

நுழையும் போது 50 வயது வரை நுழைவதற்கு கிடைக்கும்.

நோ க்ளைம் போனஸ் (NCB)

ஒரு வருடத்திற்கு ஒரு க்ளைம் இல்லாத பதிவைப் பராமரிக்கும் பாலிசிதாரர்கள் காப்பீட்டுத் தொகையில் 100% வரை அதிகரிக்கின்ற ஒரு 50% நோ க்ளைம் போனஸை (NCB) பெறலாம்.

 

இந்த அம்சம் விவேகமான உடல்நல மேலாண்மை தொடர்ந்து அதிக கவரேஜை ஏற்படுத்துவதை உறுதி செய்கிறது.

காப்பீடு செய்யப்பட்ட தொகையை தானாக மீட்டமைத்தல்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், காப்பீடு செய்யப்பட்ட தொகை பாலிசி ஆண்டு முழுவதும் தொடர்புடைய மற்றும் தொடர்பில்லாத நோய்களுக்காக தானாகவே மீட்டெடுக்கப்படுகிறது, இது பாலிசிதாரர்களுக்கு மன அமைதியைக் கொடுக்கின்றது.

இடைக்கால சேர்க்கை

விரிவடையும் குடும்பங்களுக்கு தடையற்ற கவரேஜை வழங்க, சமீபத்தில் திருமணமான வாழ்க்கைத் துணைவர்கள், புதிதாகப் பிறந்தவர்கள் அல்லது சட்டப்பூர்வமாக தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளைச் சேர்க்க இந்தத் திட்டம் அனுமதிக்கிறது.

ஆரோக்கிய வெகுமதிகள்

இந்தத் திட்டம், பாலிசிதாரர்கள் அவர்களின் ஆரோக்கியத்துடன் தொடர்ந்து செயல்பட ஊக்குவிக்கின்ற வகையில், புதுப்பித்தல் பிரீமியங்களில் 20% வரை ஆரோக்கிய வெகுமதிகளுடன் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கிறது.

பாலிசி காலம் 5 ஆண்டுகள் வரை

பாலிசிபஜார் பிளாட்ஃபார்மில் முதன்முறையாக, வாடிக்கையாளர்கள் ஐந்தாண்டுகள் வரையிலான ஒரு பாலிசி காலத்தைத் தேர்வுசெய்யலாம், இது வருடாந்திர புதுப்பித்தல்களின் தொந்தரவு இல்லாமல் நீண்ட கால கவரேஜை உறுதி செய்கிறது.

Co-terminus தள்ளுபடி

சூப்பர் ஸ்டார் பாலிசியை தங்களுக்கு வாங்கும் வாடிக்கையாளர்கள், அதே பாலிசியை தங்கள் பெற்றோர் அல்லது மாமியார் மாமனாறுக்கு வாங்கும் போது 7.5% வரை தள்ளுபடியை அனுபவிக்க முடியும், இது மலிவு குடும்ப கவரேஜை வழங்குகிறது.

கூடுதல் நன்மைகள்: சூப்பர் ஸ்டார் திட்டம் பல விருப்ப கவரேஜ்களை வழங்குகிறது, அவற்றுள்:

 

சூப்பர் ஸ்டார் போனஸ்

ஒவ்வொரு புதுப்பித்தலிலும் கூடுதல் 100% காப்பீட்டுத் தொகை, குவிப்பு வரம்பிற்கு எந்த வரம்பும் இல்லாமல், எப்போதும் அதிகரித்து வரும் பாதுகாப்பை வழங்குகிறது.

நுகர்பொருட்கள் காப்பு

இந்த தனித்துவமான அம்சம், கையுறைகள், முகமூடிகள் மற்றும் பிற மருத்துவ நுகர்பொருட்கள் போன்ற பிற பாலிசிகளில் பொதுவாக சேர்க்கப்படாத பல செலுத்தப்படாத பொருட்களை உள்ளடக்கியது.

ஸ்மார்ட் நெட்வொர்க் தள்ளுபடி

பாலிசிதாரர்கள் விருப்பமான மருத்துவமனைகளின் ஒரு நெட்வொர்க்கில் சிகிச்சையைத் தேர்ந்தெடுக்கும்போது, பிரீமியங்களில் ஒரு பெரிய 15% தள்ளுபடியைப் பெறலாம், இது செலவு சேமிப்பு மற்றும் தரமான பராமரிப்பு ஆகிய இரண்டையும் உறுதி செய்கிறது.

 

இந்த சூப்பர் ஸ்டார் திட்டமானது 5 லட்சம் முதல் 1 கோடி வரையிலான பல காப்பீட்டு விருப்பங்களைக் கொண்டுள்ளது மற்றும் ஒரு வரம்பற்ற SI விருப்பத்துடன் வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான ஒரு திட்டத்தைத் தேர்வுசெய்ய அனுமதிக்கிறது.

இந்த சூப்பர் ஸ்டார் திட்டம், மலிவு விலை மற்றும் விரிவான பாதுகாப்பிற்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கின்ற வகையில் இந்தியாவின் உடல்நலக் காப்பீட்டுத் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது.

 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு ஏற்ற . - பஜாஜ் ஃபின்சர்வ் ELSS வரி சேமிப்பு ஃபண்ட் .!

திரு .  எஸ் .  கார்த்திகேயன் ,  நிறுவனர் ,  https://winworthwealth.com/ மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு   ஏற்ற . ...