டெங்கு நோய் பற்றிய விழிப்புணர்வு
டாக்டர் அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
தமிழ் நாட்டில் தற்போது மழைக்காலம் துவங்கியுள்ளது
அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழைப் பொழிவு இருக்கிறது
இந்த பருவ காலத்தில்
பல நோய்கள் மக்களிடையே பரவும்
அதிலும் குறிப்பாக
இன்ஃப்ளூயன்சா எனும் சீசனல் ஃபீவர் அதிகமாகப் பரவி வருவதை
வெளிநோயாளிகள் பிரிவில் உணர முடிகின்றது
இத்தகைய சாதாரண நிலை வைரஸ் காய்ச்சுலுக்கு நடுவே
டெங்கு , பன்றிக் காய்ச்சல் எனும் H1N1 போன்றவையும்
கொரோனா தொற்றும் கூட கலந்து கட்டி பரவும் நிலை இருக்கிறது
எனவே இந்தப் பதிவில் டெங்கு வைரஸ் தொற்று ஏற்பட்டால்
காய்ச்சல் எவ்வாறு இருக்கும்?
எப்போது அலர்ட் ஆக வேண்டும் என்பதைப் பார்ப்போம்
காரணம் டெங்கு என்பது பெரியவர் சிறியவர் வித்தியாசம் பார்க்காமல் பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடிய நோய்
காலந்தாழ்த்தினால் மரணத்தைக் கூட பரிசளிக்கக்கூடிய அளவு ஆபத்தானது
எனவே டெங்கு நோயின் போக்கு குறித்து அறிவது நம் அனைவரின் கடமையாகிறது
கீழ்க்காணும் படத்தை நன்றாக கவனித்தால் டெங்கி காய்ச்சலோட போக்கு புரியும்
முதல் மூன்று நாட்கள் உடல் கொதி கொதி என்று கொதிக்கும்
மூட்டுகள் அவிழுமாறு வலி எடுக்கும்
கண்களுக்குப் பின்புறம் வலி இருக்கலாம்
அடுத்த மூன்று நாட்களோ உடல் ஜில்லென்று குளிர்ந்திடும்
ஆனா அப்பதான் பிரச்சனை ஆரம்பிக்குது பாருங்க...
ரத்தக்கசிவு நடக்க ஆரம்பிக்கறதே 4,5,6 நாட்கள்ல தாங்க..
காய்ச்சலோட போக்க பாருங்க
முதல் மூன்று நாள் 103-104 டிகிரி இருக்கும் காய்ச்சல் , 4வது நாள் சட்டுனு குறையுது , ரெண்டு நாள் குறையுற காய்ச்சல் திடீர்னு 6வது நாள் 100 டிகிரி அளவுக்கு ஏறுது..
ஆக, நாம் ஜாக்கிரதையா இருக்க வேண்டியது 4,5,6 நாட்கள் தான்
முதல் மூன்று நாட்கள்ல , உடல் உஷ்ணத்தால உடம்புல இருக்குற நீர் சத்து குறையுது ...
நா வரண்டு போறதும் , சிறுநீர் சரியா போகாம இருக்குறது , இதெல்லாம் முதல் மூன்று நாட்கள் இருக்கும்
அடுத்த மூன்று நாட்கள் தான் நமக்கு போர் காலம் ... CRITICAL PHASE
இதுல தான் ரத்த கசிவு நடக்க வாய்ப்பு இருக்கிறது. ரத்த கசிவு வெளியே பல்லில் ஈறுகளில் இருந்து வெளியேறலாம் .. மலம் கருப்பாக வெளியேறுவது இதெல்லாம் இந்த 4,5,6 நாட்களில் தான் நடக்கும் . வயிற்று வலி இருக்கலாம்.
பெரும்பாலும் குழந்தைகளை காய்ச்சல் குணமாகி விட்டது என்று பள்ளிக்கு இந்த மூன்று நாட்களில் அனுப்பி விட்டு காலந்தாழ்த்துவது நடக்கிறது
கால் பாதமும் உள்ளங்கையும் சில்லென்று குளிர்ந்தால்
குழந்தை முன்பை விட மிக சோர்வாக இருந்தால்
சிறுநீர் சரியாக கழிக்காமல் இருந்தால்
வயிற்று வலி என்று கூறினால்
கருப்பாக மலம் கழித்தால்
பல் ஈறுகளில் ரத்தம் கசிந்தால்
உடனே அலர்ட் ஆக வேண்டும்
ரத்த டெஸ்ட்களில் முதல் மூன்று நாட்கள் எந்த பாதிப்பும் வெளியே தெரியாது ஆனால் 4 ஆம் நாளின் தொடக்கத்தில் இருந்து தட்டணுக்கள் சரிவதைக் கண்டுபிடிக்கலாம் , 5 ஆம் நாளும் 6 ஆம் நாளும் அதனினும் குறைந்து பிறகு மீளும்
ஆகவே டெங்கிவை தெரிஞ்சுக்க ஈசியான மூணு ரூல்ஸ்
ரூல் நம்பர் ஒன்னு
டெங்கி ஜுரம் அடிக்கிறது முதல் மூனு நாள். நாலாவது நாள் சட்டுனு குறைஞ்சுச்சுனா அலர்ட் ஆயிடணும்.
உள்ளங்கை பாதம் ஜில்லென்று ஆவது.
அதிகமாக தாகம் எடுத்துக் கொண்டே இருப்பது..
தலைசுற்றல்
பிதற்றல் நிலை
அடிக்கடி வாந்தி
அதீத வயிற்று வலி
கருப்பு நிறத்தில் மலம் செல்வது
ஈர்ப்பகுதியில் ரத்தக் கசிவு
வயிறு வீங்குதல்
ஆகியவை அபாய அறிகுறிகளாகும்
ரூல் நம்பர் டூ
நீர் சத்துதான் டெங்குவோட டார்கெட் , சோ முடிஞ்ச அளவு தண்ணி , ஓ.ஆர்.எஸ் ORS ORAL REHYDRATION SOLUTION SALT , இளநீர், மோர்னு குடிச்சுட்டே இருக்கணும்.
சிறுநீரின் நிறம் அடர் மஞ்சளாகவோ சிறப்பாகவோ மாற விடக்கூடாது .
கட்டாயம் வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டும். வெளியில் சுற்றக் கூடாது.
ரூல் நம்பர் 3
இதுதான் முக்கியமான விசயம்
காய்ச்சல் அடிச்சா இந்த முக்கியமான முதல் மூனு நாள கவுண்டர்ல மருந்து சாப்புட்டு வீணாக்கிட்டு, 4,5,6 ஆவது நாள் ரத்தக்கசிவு நடக்கும் போதும் கண்டுக்காம இருந்தா, எந்த ஆஸ்பத்திரில சேந்தாலும் காப்பாத்துறது சிரமம் .
கட்டாயம் மருத்துவரோட சிகிச்சையில் இருக்கணும்.
தினசரி ரத்த தட்டணுக்கள் மற்றும் இதர அணுக்கள் குறித்த பரிசோதனை செய்து பார்க்கப்படும்.
டெங்கு ஜூரம் கண்டறியப்பட்ட நபரை
கொசு வலைக்குள் வைத்து ஆறு நாட்கள் வரை ( காய்ச்சல் விட்டு இரண்டு நாட்கள்) பராமரிக்க வேண்டும். காரணம் அவரைக் கடித்த கொசுக்கள் ஆரோக்கியமான நபர்களைக் கடிப்பதால் டெங்கு பரவும்.
இந்த மூணு ரூல்ஸயும் தெரிஞ்சிருந்தா டெங்கி போட்ற ஸ்கெட்ச்ல சிக்காம ஈசியா தப்பிச்சுறலாம்
Dr.A.B.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக