பிஜிஐஎம் இந்தியா மல்ட்டி கேப் ஃபண்ட் PGIM India Multi Cap Fund.
பிஜிஐஎம் இந்தியா மியூச்சுவல் ஃபண்டு தொடங்கும்
பிஜிஐஎம் இந்தியா மல்ட்டி கேப் ஃபண்ட்
மும்பை / சென்னை ஆகஸ்ட் 22, 2024: லார்ஜ் – கேப், மிட் – கேப் மற்றும் ஸ்மால் – கேப் பங்குகளில் முதலீடு செய்யும் ஈக்விட்டி திட்டமான பிஜிஐஎம் இந்தியா மல்ட்டி கேப் ஃபண்டு, தொடங்கப்படுவதை பிஜிஐஎம் இந்தியா மியூச்சுவல் ஃபண்டு இன்று அறிவித்திருக்கிறது. நிஃப்ட்டி 500 மல்ட்டிகேப் 50:25:25 டிஆர்ஐ – க்கு எதிராக, இந்த ஃபண்டு பெஞ்ச் மார்க் செய்யப்படுகிறது.
இதற்கான நியூ ஃபண்டு ஆஃபர் (NFO) 2024 ஆகஸ்ட் 22 அன்று சப்ஸ்கிரிப்ஷனுக்காக தொடங்குகிறது. 2024 செப்டம்பர் 05 முடிவுக்கு வருகிறது.
பிஜிஐஎம் இந்தியா அசெட் மேனேஜ்மென்ட்டின் தலைமை செயல் அலுவலர் திரு. அஜித் மேனன் இப்புதிய NFO குறித்து கூறியதாவது: "ஈக்விட்டி சந்தைகளில் குறுகிய காலத்தில் விலைகள் விரைவாக மாற்றம் கண்டு வருகிற நிலையில் நாம் எதிர்கொள்கிற ஒரு வழக்கமான கேள்வி என்பது, "பங்குச் சந்தைகள் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்பதாகும். இக்கேள்விக்குப் பதிலளிப்பது என்பது சிரமமானது மற்றும் இது குறித்து யூகிக்க மட்டுமே முடியும். எனினும், இந்த முதல் கேள்வியைத் தொடர்ந்து இரண்டாவது கேள்வி ஒன்றும் பொதுவாக உருவாகிறது: "நடப்பு சந்தை சூழ்நிலைகளில் எங்கு நாம் முதலீடு செய்யவேண்டுமென நீங்கள் நினைக்கிறீர்கள்?" ஒவ்வொரு தனிநபரின் குறிப்பான சூழ்நிலை மற்றும் நம்பகமான நிதி ஆலோசகரின் இலக்குகளுக்கேற்ப இக்கேள்விக்கு சிறப்பாக பதிலளிக்கலாம். எனினும், ஓர் ஒழுங்குமுறையான வடிவத்தில் அனைத்து சந்தை மூலதன வகையினங்களிலும் முதலீடு செய்வதென்பது ஒரு எளிய நடவடிக்கையாக இருக்கும். மல்ட்டிகேப் எனப்படும் பல்வேறு மூலதன வகை நிறுவனங்களது பங்குகளில் முதலீடு செய்யும் உத்தி ஒரு ஒழுங்குமுறையான அணுகுமுறையாக இருக்கும். வெவ்வேறு வகையினத்தைச் சேர்ந்த நிறுவனங்களது பங்குகளில் பல்வகைப்படுத்தலுடன் முதலீடு செய்வதே சரியான வழிமுறையாக இருக்கும்."
"நல்ல தரமான மற்றும் அதிக வளர்ச்சி கண்டு வரும் பல்வேறு நிறுவனங்களை உள்ளடக்கிய போர்ட்போலியோவில் முதலீடு செய்வதற்கு இது ஒரு சிறந்த நேரம் என்று நாங்கள் நம்புகிறோம். ஏனெனில், கடந்த சில ஆண்டுகளில் அவைகளின் உள்ளார்ந்த மதிப்பீடுகளில் வலுவான வளர்ச்சி இருந்தபோதிலும் கூட, இவைகள் கணிசமான அளவு உரிய திறனளவை விட குறைவாகவே செயலாற்றியிருக்கின்றன. நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும் மற்றும் பேங்க் ஆஃப் ஜப்பானின் நிதிக்கொள்கையின் கடந்த சில மாதங்களில் ஏற்பட்ட மாற்றத்திற்குப் பிறகும் இந்த உத்தி சிறப்பாக செயல்பட்டிருப்பதன் ஆரம்ப அறிகுறிகளை நாங்கள் பார்த்திருக்கிறோம்." என்று பிஜிஐஎம் இந்தியா அசெட் மேனேஜ்மெண்ட் – ன் முதன்மை முதலீட்டு அதிகாரி திரு. வினய் பஹாரியா கூறினார்.
இச்செயல்திட்டமானது, பெரிய, நடுத்தர மற்றும் சிறிய மூலதன நிறுவனங்களது பங்குகள் பிரிவுகள் ஒவ்வொன்றிலும் குறைந்தது 25% முதலீடு செய்யும். எஞ்சியிருக்கும் 0 - 25% நிதியானது, ஏதாவது ஒரு வகையினத்தின் அல்லது இந்த மூன்று வகையினங்களிலும் நல்ல வாய்ப்புகள் இருக்கும்போது முதலீடு செய்யப்படும். கடன் பத்திரங்களில் 25% வரை முதலீடு செய்வதற்கான வசதியையும் மற்றும் REITs மற்றும் InvITs – ல் 10% வரையும் மற்றும் வெளிநாட்டு ETFs உட்பட, வெளிநாட்டு பத்திரங்களில் 20% வரை முதலீடு செய்யும் வசதியையும் இத்திட்டம் கொண்டிருக்கிறது.
இந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தில் ஈக்விட்டி பங்குகள் மீதான முதலீடு நடவடிக்கையானது திரு. விவேக் ஷர்மா, அனந்த பத்மநாபன் ஆஞ்சிநேயன் மற்றும் உத்சவ் மேத்தா ஆகியோரால் நிர்வகிக்கப்படும். கடன் பத்திரங்கள் மீதான மூலதன நடவடிக்கையை திரு. புனீத் பால் நிர்வகிப்பார்.
"இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருந்து வரும் நிலையில், பல்வேறு சந்தை மூலதனப் பிரிவுகளில் நீண்டகால அடிப்படையில் நல்ல வாய்ப்புகள் இருந்து வருகின்றன. நமக்குத் தேவைப்படுவதெல்லாம் கவனமாக நல்ல நிறுவனங்களது பங்குகளை தேர்வு செய்வது மற்றும் இதில் ஆதாயம் பெறுவதற்கு சமச்சீரான போர்ட்ஃபோலியோவை கொண்டிருப்பதே. அனைத்து நேரங்களிலும் பல்வேறு வகையின மூலதன நிறுவனங்களில் முதலீடு வெளிப்பாட்டைக் கொண்டிருப்பது இன்றியமையாதது. கிடைக்கக்கூடிய வாய்ப்புகளுக்கேற்ப இந்த முதலீடுகள் உரியவாறு மாற்றப்படும். பிஜிஐஎம் இந்தியா மல்ட்டி கேப் ஃபண்டு இதை செய்வதற்காகவே தொடங்கப்பட்டிருக்கிறது." என்று பிஜிஐஎம் இந்தியா அசெட் மேனேஜ்மெண்ட் –ன் ஈக்விட்டிக்கான முதுநிலை ஃபண்ட் மேலாளர் திரு. விவேக் ஷர்மா கூறினார்.
நடுத்தர மற்றும் சிறிய மூலதன நிறுவனங்கள் தளத்தில் நன்கு நிலைநாட்டப்பட்ட மற்றும் வேகமாக வளர்ச்சி கண்டு வரும் துறைகளில் முதலீட்டிற்காக ஒரு சமச்சீரான அணுகுமுறையானது மல்ட்டி – கேப் உத்தியில் பின்பற்றப்படுகிறது. மாறுபட்ட சந்தை மூலதன நிறுவனங்களில் வெற்றியாளர்கள் தொடர்ந்து சுழற்சிமுறையில் மாறிக்கொண்டே இருப்பதால், அந்நிறுவனங்களின் அளவு எதுவாக இருப்பினும், மாறுபட்ட சந்தை மூலதன வகையின நிறுவனங்களில் ஒழுங்குமுறை கட்டுப்பாட்டுடன் கூடிய வெளிப்படல் திறனை மல்ட்டிகேப் ஃபண்டு வழங்குகிறது. 31 டிசம்பர் 2005 – லிருந்து, 31 ஜுலை 2024 வரை கடந்த 19 ஆண்டுகள் காலஅளவில் 11 ஆண்டுகளில் நிஃப்ட்டி 500 மல்ட்டிகேப் 50:25:25 TRI, நிஃப்ட்டி 500 TRI – ஐ விட சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியிருக்கிறது.
இந்த முதலீட்டிற்கான போர்ட்ஃபோலியோ கட்டமைப்பு அணுகுமுறை கீழிருந்து மேல் மற்றும் சிறந்த பன்முகத்தன்மை கொண்டதாக இருக்கிறது. நியாயமான விலையில் வளர்ச்சி (GARP) கூர்நோக்க உத்தியை இந்த ஃபண்டு கடைப்பிடிக்கிறது. சந்தை நிலைமைகளின் அடிப்படையில் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால வளர்ச்சி வாய்ப்புகளுக்கு இடையே தேவைக்கேற்ப மாற்றியமைக்கும் நெகிழ்வுத்திறனை இந்த உத்தி கொண்டிருக்கிறது. நடுத்தர காலஅளவு முதல், நீண்ட காலஅளவு வரை வருவாய் வளர்ச்சி மற்றும் உத்வேகத்தை வெளிப்படுத்தும் பங்குகள் மற்றும் நிகழ்வுகளால் முன்னெடுக்கப்படும் வாய்ப்புகள் ஆகியவை உள்ள பங்குகளிலும் இது நிதியை ஒதுக்கீடு செய்யும். உடல்நல பராமரிப்பு, நிதிநிலையாக்கல், போக்குவரத்து, நுகர்வு, புதிய ஆற்றல் ஆகிய துறைகளில் முதலீடு செய்ய இந்த ஃபண்டு திட்டமிட்டிருக்கிறது. இந்திய பொருளாதாரத்தில் தற்போது நடைபெற்று வரும் கட்டமைப்பு சார்ந்த மாற்றங்களின் காரணமாக, மேற்குறிப்பிடப்பட்ட துறைகள் வளர்ச்சி கண்டு வருகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக