ரூ.1000 கோடியில் நிறுவப்பட்டுள்ள ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் 2 தொழிற்சாலைகள்:முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
–––––––
ஈரோடு மற்றும் திருப்பூரை சுற்றியுள்ள பகுதிகளில் 7 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு
–––––
தமிழ்நாடு, ஆகஸ்ட் 22,2024: சென்னையில் இன்று தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் 'தமிழ்நாடு முதலீட்டு மாநாடு 2024' நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின், ஜவுளித் துறையில் முன்னணி நிறுவனமாக திகழும் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் 1000 கோடி ரூபாயில் நிறுவியுள்ள 2 தொழிற்சாலைகளை திறந்து வைத்தார். ஈரோடு மற்றும் திருப்பூரில் அமைக்கப்பட்டுள்ள இந்த தொழிற்சாலைகள் மூலம் 7,000 பேருக்கு வேலை வழங்கப்படுவதோடு, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியிலும் இந்த தொழிற்சாலைகள் முக்கிய பங்களிக்கும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ராம்ராஜ் காட்டன் நிறுவனம் உற்பத்தி வசதிகளை விரிவுபடுத்துதல், தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்துதல் மற்றும் அனைத்து செயல்பாடுகளிலும் நிலையான நடைமுறைகளை மேம்படுத்துதல் ஆகியவற்றில் அதிக அளவில் முதலீடு செய்து வருகிறது. உயர்தர, ஜவுளி உற்பத்திக்கான மையமாகத் திகழும் தமிழ்நாட்டின் தொலைநோக்குப் பார்வையுடன் இத்திட்டம் இணைந்துள்ளது மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு விருப்பமான இடமாக திகழும் தமிழகத்தின் நிலையை மேலும் உயர்த்தும் வகையில் இது அமைந்துள்ளது.
தமிழகம் அமைதியான மாநிலமாக இருப்பதால் ஏராளமான தொழில் அதிபர்களும் நிறுவனங்களும் இங்கு முதலீடு செய்வதற்கும், புதிய நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளை திறப்பதற்கும் மிகுந்து ஆர்வம் காட்டுகின்றனர் என்று இந்த மாநாட்டை துவக்கி வைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய ராம்ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் தலைவர் கே.ஆர். நாகராஜன் கூறுகையில், உள்ளூர் சமூக வளர்ச்சி மற்றும் இந்தியாவின் வளமான கலாச்சாரத்திற்கான எங்கள் அர்ப்பணிப்பு எப்போதும் எங்கள் எண்ணங்களில் ஊடுருவி உள்ளது. பல ஆண்டுகளாக, 50,000 க்கும் மேற்பட்ட நெசவாளர் குடும்பங்களை பெருமையுடன் ஆதரித்து வருகிறோம், நமது தேசத்தின் கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய கைவினைத்திறனைப் பாதுகாத்துள்ளோம். எங்களின் இந்த புதிய முதலீட்டின் மூலம், எங்களது உற்பத்தி திறன்களை விரிவுபடுத்துவது மட்டுமின்றி, கூடுதலாக 7 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளோம். இந்தியாவில் ஜவுளித் தொழில் சிறப்பாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் நாங்கள் நெசவாளர்களுக்கும் உள்ளூர் திறமையாளர்களுக்கும் எங்களின் ஆதரவை தொடர்ந்து வழங்கி வருகிறோம் என்று பேசினார்.
உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பு – III என அழைக்கப்படும் தமிழ்நாடு முதலீட்டு மாநாடு 2024 இன்று நடைபெற்றது. இதில் வணிகத் தலைவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் முதலீட்டாளர்கள் கலந்து கொண்டு, தமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கத்தில் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதித்தனர். மாநாட்டில், 51,000 கோடி ரூபாய் முதலீடுகள் அறிவிக்கப்பட்டன, இது மாநிலத்தின் தொழில்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும். தொழில்துறைக்கு ஆதரவான சூழல் நிலவுவதால் ஏராளமான நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்க மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
About Ramraj Cotton: Ramraj Cotton is a leading name in the traditional Indian wear industry, celebrated for its quality cotton and linen apparel. Ramraj Cotton is highly regarded in the market for its exceptional range of dhotis, shirts, and sarees, embodying the "Culture of India" through superior craftsmanship and quality. The brand has been recognized as "India's Most Trusted Dhoti Brand" and "India's Most Attractive Dhoti Brand" in 2024. The company is recognized as the world's largest dhoti producer and marketer, offering over 4000 varieties. Ramraj Cotton operates with 50,000+ weavers' families, Ramraj Cotton's geographical presence spans across South India (Tamil Nadu, Kerala, Andhra Pradesh, Telangana, Karnataka), North India (Delhi, Uttar Pradesh), West India (Maharashtra), and East India (Odisha). For further details, please visit https://ramrajcotton.in/.
Ramraj Cotton Group is also committed to socio-environmental activities, including yoga, education, tree plantation, and supporting coconut tree farmers through the TENEERA initiative.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக