மொத்தப் பக்கக்காட்சிகள்

குறைந்தபட்ச முதலீடு ரூ. 1,000: ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் நிஃப்டி மெட்டல் இடிஎஃப் அறிமுகம் - ICICI Prudential Nifty Metal ETF

 

ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட், ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் நிஃப்டி மெட்டல் இடிஎஃப் அறிமுகம்

புதிய ஃபண்ட் வெளியிடு ஆகஸ்ட் 1, 2024 இல் ஆரம்பித்து ஆகஸ்ட் 12, 2024 அன்று நிறைவடைகிறது

முக்கிய அம்சங்கள்:

-          முதலீட்டாளர்களுக்கு உலோகத் துறையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது,

-          - இரும்பு மற்றும் இரும்பு அல்லாத உலோகங்கள் இரண்டிலும் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளில் இந்த இ.டி.எஃப் முதலீடு செய்யும்,

-          புதிய ஃபண்ட் வெளியீடு 2024 ஆகஸ்ட் 1 தொடங்கு ஆகஸ்ட் 12 வரை

மும்பை, ஆகஸ்ட்01, 2024: ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் (ICICI Prudential Mutual Fund) நிறுவனம், அதன் ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் நிஃப்டி மெட்டல் இடிஎஃப் (ICICI Prudential Nifty Metal ETF) அறிமுகத்தை அறிவித்துள்ளது. இந்த ஃபண்ட், நிஃப்டி மெட்டல் இண்டெக்ஸ் (Nifty Metal Index)-ன் வருமானத்தை வழங்கும். இந்த வருமானம் கண்காணிப்பு பிழையை (tracking error) பொறுத்து இருக்கும். நிஃப்டி மெட்டல் இண்டெக்ஸ்-ல்  இரும்பு மற்றும் இரும்பு அல்லாத உலோகங்கள் இரண்டிலும் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் பங்குகள் இடம் பெற்றிருக்கும்.

நிஃப்டி மெட்டல் இண்டெக்ஸ்  என்பது உலோகத் துறையை (சுரங்கம் உள்ளிட்டது)  பிரதிபலிப்பதாக இருக்கிறது. தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிஃப்டி மெட்டல் இண்டெக்ஸ் அதிகபட்சமாக 15 நிறுவனப் பங்குகளைக் கொண்டுள்ளது. இந்த நிறுவனங்கள் நிஃப்டி 500 இலிருந்து அவற்றின் சந்தை மதிப்பின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன, இது துறையின் பரந்த பிரதிநிதித்துவத்தை உறுதி செய்கிறது. குறியீட்டு அமைப்பு எந்த ஒரு நிறுவனத்திற்கும் 33% க்கும் அதிகமான வெயிடேஜ்-ஐ கொண்டிருக்கவில்லை என்பதை உறுதி செய்கிறது, மேலும் முதல் மூன்று நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக குறியீட்டின் 62% ஐ விட அதிகமாக இல்லை.

திட்ட அறிமுகம் குறித்து பேசுகையில் ஐசிஐசிஐ புருடென்ஷியல் ஏஎம்சியின் முதலீட்டு உத்தி முதன்மை அதிகாரி சிந்தன் ஹரியா, கூறும் போது, “ஐசிஐசிஐ புருடென்ஷியல் நிஃப்டி மெட்டல் இடிஎஃப் திட்டமானது முதலீட்டாளர்களுக்கு தொழில்துறை வளர்ச்சியின் முதுகெலும்பாக இருக்கும் முக்கியமான துறைகளில் ஒன்றை அணுகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலோகத் துறையானது, எஃகு, அலுமினியம் மற்றும் தாமிரம் போன்ற முக்கியமான தொழில்களை உள்ளடக்கியது. இவை உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஒருங்கிணைந்ததாகும். அதிகரித்து வரும் தேவை மற்றும் நுகர்வு, குறிப்பாக இந்தியா போன்ற வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தில், இந்தத் துறை ஒரு நிச்சய நீண்ட கால முதலீட்டு வாய்ப்பை வழங்குகிறது.

எங்கள் மெட்டல் இ.டி.எஃப், குறைந்த வட்டி விகிதங்கள், அதிக உலகளாவிய பணவீக்கம் ஆகியவற்றின் பாதிப்பிலிருந்து முதலீட்டாளர்களை பயனடைய அனுமதிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது." என்றார்,

ஐசிஐசிஐ புருடென்ஷியல் நிஃப்டி மெட்டல் இடிஎஃப்-ல் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?

நிஃப்டி மெட்டல் டிஆர்ஐ கடந்த பத்தாண்டு காலத்தில் ஐந்து முறை நிஃப்டி 500 டிஆர்ஐயை விஞ்சியுள்ளது, இது நல்ல வருமானத்தை வழங்குவதற்கான அதன் திறனை வெளிப்படுத்துகிறது. ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் நிஃப்டி மெட்டல் இடிஎஃப் இல் முதலீடு செய்வது ஏன் என்பதற்கான காரணங்கள்

1.   பொருளாதார வளர்ச்சியின் முக்கியத் துறையில் முதலீடு.

2.   உலக அளவில் சிறந்த நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு.

3.   தேவை  மற்றும் நுகர்வு அதிகரித்து வரும் குறியீட்டில் முதலீடு

4.   குறைந்தபட்சம் ஒரு யூனிட் கூட முதலீடு செய்ய முடியும்.

நிஃப்டி மெட்டல் டி.ஆர்.ஐ குறியீட்டின் வருமானம் செயல்பட்டு (%)

கடந்த 10 ஆண்டு காலத்தில், நிஃப்டி மெட்டல் டி.ஆர்.ஐ குறியீடு, நிஃப்டி 500 டி.ஆர்.ஐ விட 5 மடங்கு சிறப்பாக வருமான செயல்பாட்டை கொண்டுள்ளது.


வெயிட்டேஜ் அடிப்படையில் டாப் 10 பங்குகள்

வெயிட்டேஜ் (%)

டாடா ஸ்டீல் லிமிடெட்

20.97

ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்

14.82

ஜே.எஸ்.டபிள்யூ  ஸ்டீல் லிமிடெட்.

12.99

அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட்

12.18

வேதாந்தா லிமிடெட்

9.38

ஜிண்டால் ஸ்டீல் & பவர் லிமிடெட்.

5.61

என்எம்டிசி லிமிடெட்

4.11

ஏபிஎல் அப்பல்லோ டியூப்ஸ் லிமிடெட்

4.04

ஜிண்டால் ஸ்டெயின்லெஸ் லிமிடெட்.

3.86

ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட்.

3.14

நிஃப்டி மெட்டல் இண்டெக்ஸ் ஆண்டுக்கு இருமுறை அப்டேட் செய்யப்பட்டு துறையின் செயல்திறனை துல்லியமாக பிரதிபலிக்கிறது மற்றும் மேலே உள்ள வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளபடி, தொடக்கத்திலிருந்தே பரந்த சந்தை குறியீடுகளை விஞ்சி, நல்ல வருமானத்தை வழங்குவதற்கான அதன் திறனை வெளிப்படுத்துகிறது.

புதிய ஃபண்ட் வெளியீட்டின் (NFO) போது குறைந்தபட்ச முதலீடு ரூ. 1,000 (மற்றும் ரூ.1 –ன் மடங்குகளில்).

இந்த இ.டி.எஃப் திட்டத்தின் பெஞ்ச்மார்க் நிஃப்டி மெட்டல் டிஆர்ஐ ஆகும்,

மேலும் திரு. நிஷித் படேல் (Mr. Nishit Patel) மற்றும் திருமதி பிரியா ஸ்ரீதர் (Ms. Priya Sridhar) ஆகியோர் இடிஎஃப் இன் நிதி மேலாளர்களாக (Fund Managers) உள்ளனர்.

கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீட்டுக்கு தொடர்பு கொள்ளவும்



திரு. சிவகாசி மணிகண்டன்

 நிறுவனர்,

http://www.aismoney.com/

+ 91 98405 77675

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, நிதி ஆலோசனை, ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு எடுக்க  திரு. சிவகாசி மணிகண்டன் அவர்களை அணுகலாம் 

நாணயம் விகடன் வெளியாகி உள்ள  திரு. சிவகாசி மணிகண்டன் கட்டுரைகளை படிக்க

https://www.vikatan.com/author/aismoneycom

யூடியூப் வீடியோக்கள் பார்க்க 

https://www.youtube.com/channel/UC7-lJ58kPJoRdmDipteAexA


தலைமை அலுவலகம்

சிவகாசி மணிகண்டன், MBA (F&M), [MBA, I & FP], 

FChFP, CIS, AMFI, CII (London)

Managing Director - AISMONEY

No. 21, MBT Road, (Opp) Indian Bank, Walajapet  - 632 513
Ranipet Dt. TN, India.

+ 91 98405 77675
+ 91 96777 66393  (Office)
 
support@aismoney.com

http://www.aismoney.com/

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இப்போது பங்குச் சார்ந்த திட்டங்களில் எப்படி முதலீடு செய்தால் லாபம்? ச.ஶ்ரீதரன், நிதி ஆலோசகர்

இப்போது பங்குச் சார்ந்த திட்டங்களில் எப்படி முதலீடு செய்தால் லாபம்?  By திரு . ச . ஶ்ரீதரன் , நிதி ஆலோசகர் ,  https://www.walletwealth....