மொத்தப் பக்கக்காட்சிகள்

மீண்டும் பயன்படுத்தக்கூடிய ‘ரூமி 1’ ஹைப்ரிட் ராக்கெட்: 24-ந்தேதி சென்னை Reusable Hybrid Rocket

ஸ்பேஸ் சோன் இந்தியா - மார்ட்டின் குழுமம் இணைந்து இந்தியாவில் முதல் முறையாக

 

மீண்டும் பயன்படுத்தக்கூடிய 'ரூமி 1' ஹைப்ரிட் ராக்கெட்: 24-ந்தேதி சென்னை ஈசிஆர் மொபைல் லாஞ்ச் பேடிலிருந்து 3 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்கிறது

 

திட்ட இயக்குனராக டாக்டர் ஆனந்த் மேகலிங்கம் சிறப்பான செயல்பாடு



 

சென்னை, ஆகஸ்ட், 20,2024: விண்வெளி தொழில்நுட்பத்தில் புதிய உச்சம் தொடும் வகையில், தமிழ்நாட்டை சேர்ந்த வளர்ந்து வரும் விமான தொழில்நுட்ப நிறுவனமான ஸ்பேஸ் சோன் இந்தியா நிறுவனம், இந்திய விண்வெளித் துறையில் அதன் முதல் திட்டமான 'மிஷன் ரூமி 2024' திட்டத்தை இன்று அறிவித்தது. இதன் மூலம் இந்நிறுவனம் இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட்டை ஒரு மொபைல் லாஞ்ச்பேடில் இருந்து விண்ணில் செலுத்த உள்ளது. இது நவீன தொழில்நுட்பத்தில் திரவ ஆக்சிஜனேற்றம் மற்றும் திட எரிபொருள் உந்து சக்தியை ஒன்றிணைத்து செயல்திறனை மேம்படுத்துவதோடு, இதற்கான செயல்பாட்டு செலவுகளையும் வெகுவாக குறைக்கிறது. இந்த ராக்கெட் வரும் 24-ந்தேதி சென்னை ஈசிஆரில் 3 செயற்கைகோளுடன் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

 

காஸ்மிக் கதிர்வீச்சு, புற ஊதா கதிர்வீச்சு, காற்றின் தரம் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய வளிமண்டல நிலைகளை கண்காணிக்கவும் அது குறித்த விவரங்களை சேகரிக்கவும் வடிவமைக்கப்பட்ட 3 கியூப் செயற்கைக்கோள்களை ரூமி 1 ராக்கெட் சுமந்து சென்று வளிமண்டலத்தில் அவற்றை நிலை நிறுத்திய பின்னர் மீண்டும் பூமிக்கு திரும்புகிறது. இதற்கு முன் செயற்கைகோள்களை சுமந்து செல்லும் ராக்கெட்டுகள் அவற்றை வளிமண்டலத்தில் நிலை நிறுத்திய பின் பூமிக்கு திரும்பும்போது அவை செயல் இழந்துவிடும். மீண்டும் அவற்றை பயன்படுத்த முடியாது. ஆனால் ரூமி 1 அவ்வாறு இல்லாமல் அதை மீண்டும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

மேலும் இந்த ராக்கெட் 50 வெவ்வேறு சிறிய எடை கொண்ட செயற்கைக்கோள்களையும் விண்ணில் நிலைநிறுத்துகிறது. இவை ஒவ்வொன்றும் அதிர்வு, முடுக்கமானி அளவீடுகள், உயரம், ஓசோன் அளவுகள், நச்சு உள்ளடக்கம் மற்றும் இயற்கை மற்றும் செயற்கை மூலக்கூறு பிணைப்பு போன்ற வளிமண்டல நிலைகளின் பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்ய உள்ளன. இவை சுற்றுச்சூழல் செயல்பாடுகள் பற்றிய நமது புரிதலை மேம்படுத்த உதவும்.

 

இந்நிகழ்ச்சியில் பேசிய ஸ்பேஸ் சோன் இந்தியா நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ஆனந்த் மேகலிங்கம் கூறுகையில்,  விண்வெளி கண்டுபிடிப்புகளில் உலகளாவிய தலைவராக இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த முக்கியமான துறையில் நமது நாடு தொடர்ந்து முன்னேறி வருவதால், நிலையான மற்றும் செலவு குறைந்த தீர்வுகளின் தேவை என்பது மிகவும் அவசியமாகிறது. அதை மனதில் கொண்டு எங்களின் மிஷன் ரூமி 2024 திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஹைபிரிட் ராக்கெட்டை அறிமுகப்படுத்துவதன் மூலம், விண்வெளி ஆராய்ச்சியில் செலவை குறைப்பது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் பாதிப்பையும் குறைக்க இருக்கிறோம். இந்த பணியானது விண்வெளி பயணங்களை மேலும் எளிமைப்படுத்தும் விதமாகவும் எதிர்காலத்தில் சுற்றுச்சூழல் மாசு இல்லாத ஒரு நிலையை உருவாக்கும் எங்கள் எண்ணத்தையும் பிரதிபலிக்கிறது என்று தெரிவித்தார்.

 

 

"இந்தியாவின் சந்திர மனிதன்" என்று அன்புடன் அழைக்கப்படும் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை இந்த திட்டம் குறித்து கூறுகையில், எங்கள் ஹைட்ராலிக் மொபைல் ஏவுதளத்தின் மூலம் ஹைப்ரிட் ராக்கெட்டை ஏவுவது, விண்வெளி தொழில்நுட்பத்தில் ஒரு புதிய சாதனை முயற்சியாகும்.

 

 

இந்த புதுமை திட்டம் இணையற்ற நெகிழ்வுத்தன்மை மற்றும் செயல்திறனை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் விண்வெளிப் பயணங்களின் பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் ஒட்டுமொத்த வெற்றியை மேம்படுத்தும் முன்னோடி தீர்வுகளுக்கான எங்கள் உறுதிப்பாட்டிற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. இந்த அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம், ஸ்பேஸ் சோன் இந்தியா ராக்கெட் ஏவுவதை புரட்சிகரமாக மாற்றத் தயாராக உள்ளது, மேலும் அவை மிகவும் ஆற்றல்மிக்கதாகவும், எதிர்காலத் தேவைகளுக்குப் பதிலளிக்கக் கூடியதாகவும் இருக்கும் என்று தெரிவித்தார்.

 

மார்ட்டின் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், இந்த முயற்சி குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கையில், தொழில்நுட்பத்தின் எல்லைகளைத் தாண்டி சிறந்த எதிர்காலத்திற்கு பங்களிக்கும் புதுமையான முயற்சிகளில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். கார்ப்பரேட் சமூகப் பொறுப்பிற்கான எங்கள் அர்ப்பணிப்பு, தொழில்துறைகளை மாற்றியமைக்கும் மற்றும் ராக்கெட் அறிவியல் மற்றும் விண்வெளித் தொழில்நுட்பத்தில் மாணவர்களை ஊக்குவிக்கும் திறன் கொண்ட அதிநவீன முன்னேற்றங்களை ஆதரிக்க எங்களை தூண்டுகிறது. விண்வெளி தொழில்நுட்பத்தில் நிலைத்தன்மை மற்றும் சிறந்து விளங்குவதற்கான அவர்களின் அர்ப்பணிப்பு உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது. மிஷன் ரூமி-2024- ஆதரிப்பதன் மூலம், நாங்கள் ஒரு புதிய விண்வெளி பயணத்தை ஆதரிப்பது மட்டுமல்லாமல், தகுதியான மாணவர்களை அறிவூட்டும் கல்வி மற்றும் ஆராய்ச்சி அடிப்படையிலான திட்டங்கள் மூலம் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை மேம்படுத்துகிறோம். இந்த குறிப்பிடத்தக்க பயணத்தில் நாங்களும் இணைந்து இருப்பதில் பெருமிதம் கொள்கிறோம். இந்த திட்டம் நிச்சயம் வெற்றிபெறும் என்று தெரிவித்தார்.

 

ஆகஸ்ட் 24ந்தேதி சனிக்கிழமை அன்று செங்கல்பட்டு திருவிடந்தை கடற்கரை கிராமத்தில் இருந்து ரூமி ராக்கெட் ஏவப்பட உள்ளது. இது இந்தியாவின் விண்வெளி ஆய்வு பயணத்தில் குறிப்பிடத்தக்க சாதனையாக இருக்கும்.

 

ஸ்பேஸ் சோன் இந்தியா பற்றிஸ்பேஸ் சோன் இந்தியா என்பது விண்வெளித் துறையில் குறைந்த செலவில், நீண்ட கால தீர்வுகளை வழங்கும் இலக்குடன் சென்னையில் உள்ள ஒரு விண்வெளி நிறுவனமாகும். இது ஏரோடைனமிக் கொள்கைகள், செயற்கைக்கோள் தொழில்நுட்பம், ட்ரோன் தொழில்நுட்பம் மற்றும் ராக்கெட் தொழில்நுட்பம் பற்றிய பயிற்சி அனுபவத்தை வழங்குகிறது. இது தொடர்பான தொழில் வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வையும் இந்நிறுவனம் ஏற்படுத்தி வருகிறது. தனியார் கல்வி நிறுவனங்கள், பொறியியல் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், தனியார் மற்றும் அரசு பள்ளிகளுடன் இணைந்து இந்நிறுவனம் செயல்படுகிறது. இங்கு செயற்கைக்கோள் தொழில்நுட்பம், ராக்கெட் தொழில்நுட்பம், ட்ரோன் தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகளில் நிபுணத்துவமிக்க வல்லுனர்கள் பணிபுரிகின்றனர்.

 

மார்ட்டின் குழும நிறுவனங்கள் பற்றி: மார்ட்டின் குழுமம், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், சாண்டியாகோ மார்ட்டினால் நிறுவப்பட்டது, இந்தியாவின் வணிகத் துறையில் இந்நிறுவனம் முன்னணி நிறுவனமாக உள்ளது. இந்த குழுமம் சுகாதாரம், கல்வி, மாற்று எரிசக்தி, ஊடகம், ரியல் எஸ்டேட், ஜவுளி, விருந்தோம்பல், பரோபகாரம், விவசாயம், மென்பொருள் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் கட்டுமானம் என 12க்கும் மேற்பட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகிறது.

 

மேலும் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பை வெறும் கடமையாக எண்ணாமல் அதை ஒரு முக்கியக் கொள்கையாக இக்குழுமம் கருதுகிறது.

 

Photo Caption:

 

Left to Right - Dr. Anand Megalingam, Founder & CEO, Space Zone India, Dr.Mylswamy Annadurai, Moon Man of India and Mr.Jose Charles Martin, MD, Martin Group

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு - வ.நாகப்பன், சி.சரவணன்

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு Category: பிஸினஸ் - முதலீடு - சேமிப்பு Author: வ.நாகப்பன், சி.சரவணன் Book Code: 1054 Availability: In...