மொத்தப் பக்கக்காட்சிகள்

Property Approval தமிழ் நாட்டில் இனி வீடு கட்ட அரசு அனுமதி தேவையில்லை…!

Property Approval தமிழ் நாட்டில் இனி வீடு கட்ட அரசு அனுமதி தேவையில்லை…!

தமிழ்நாட்டில் நடுத்தர மக்கள் வீடு கட்டுவதை எளிதாக்க தமிழ்நாட்டில் முதல்முறையாக ஆன்லைன் மூலம் கட்டிட அனுமதி தரும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

நடுத்தர பொது மக்களின் வீடு கட்டுவதை எளிதாக்க தமிழ்நாட்டில் முதல்முறையாக ஆன்லைன் மூலம் கட்டிட அனுமதி தரும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இணையதளம் மூலம் கட்டிட அனுமதி..!

www.onlineppa.tn.gov.in என்ற இணையதளம் மூலம் கட்டிட அனுமதி பெறலாம்

அதிகபட்சம் 2,500 சதுர அடி வரையிலான வீட்டு மனையில் 3,500 சதுர அடியில் கட்டப்பட உள்ள வீடுகளுக்கு இந்த ஆன்லைன் அனுமதி திட்டம் பொருந்தும்.

நிறைவுச் சான்று..!

கட்டடப் பணிகள் முடிந்ததும், நிறைவுச் சான்று பெறுவதில் இருந்து விலக்கும், பரிசீலனை கட்டணம், கட்டமைப்பு வசதிகள் கட்டணங்களில் இருந்து 100 சதவீதம் விலக்கு அளிக்கப்படுகிறது .

தமிழகத்தில் கட்டிடம் மற்றும் மனைப் பிரிவுகளுக்கான அனுமதியை பரப்பளவு, கட்டிடத்தின் உயரம் ஆகியவற்றின் அடிப்படையில், தகுந்த உள்ளாட்சி அமைப்புகள், நகர ஊரமைப்பு இயக்ககம் (டிடிசிபி DTCP), சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ CMDA) ஆகியவை வழங்கி வருகின்றன.

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் கட்டிட அனுமதிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டு வரும் நிலையில் 2023 அக்டோபர் 2-ம் தேதி முதல் ஊராட்சிகளில் கட்டிட அனுமதிக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.

2024 பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் பட்ஜெட்டில் 2,500 சதுர அடி வரை கட்டப்படும் குடியிருப்பு கட்டுமானத்துக்கு கட்டிட அனுமதி தேவையில்லை என்றும் பணி முடிவு சான்று பெற தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டது

நடைமுறை என்ன?


இந்தத் திட்டத்தின்படி, www.onlineppa.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பதாரர் அளிக்கும் விவரத்தின் அடிப்படையில் உடனடியாக அனுமதி வழங்கப்படும்.

சம்பந்தப்பட்ட எந்த அலுவலகத்துக்கும் விண்ணப்பதாரர்கள் செல்ல வேண்டியது இல்லை.

கட்டிட பணிகள் முடிந்ததும், முடிவு சான்று பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

பரிசீலனை கட்டணம்,  உள்கட்டமைப்பு, வசதிக் கட்டணங்களில் இருந்து 100 சதவீதம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது

2,500 சதுர அடி வரையிலான மனையில், 3,500 சதுர அடியில் கட்டப்படும் வீடுகளுக்கு இத்திட்டம் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இப்போது பங்குச் சார்ந்த திட்டங்களில் எப்படி முதலீடு செய்தால் லாபம்? ச.ஶ்ரீதரன், நிதி ஆலோசகர்

இப்போது பங்குச் சார்ந்த திட்டங்களில் எப்படி முதலீடு செய்தால் லாபம்?  By திரு . ச . ஶ்ரீதரன் , நிதி ஆலோசகர் ,  https://www.walletwealth....