''கூட்டுவட்டி (Power of Compounding) என்னும் மேஜிக் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் இருப்பதால், இலக்குகளை சுலபமாக அடைய முடியும். நீங்கள் முதலீடு செய்யும் தொகையை பொறுத்து நீண்ட காலத்தில் கோடிகளைச் சேர்க்க வாய்ப்பு உண்டு'' என இந்தக் கூட்டத்தில் பேசிய சோம.வள்ளியப்பன்.
மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவின் சீனியர் மேனேஜர் கோபிநாத் சங்கரன், "இன்றைய நிலையில் பெரும்பாலானோர் இலக்கு (Goal) அடிப்படையில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை மேற்கொள்கிறார்களா என்றால், இல்லை. இலக்கு இல்லாத பயணம் பயனற்றது'' என்றார்.
தற்போது, இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டில் ரூ 60 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இன்றைய இளைஞர்கள் தங்களின் திறமையால் இரண்டே வருடத்தில் 10 வருடத்துக்கான சம்பளத்தைப் பெற்றுவிடுகிறார்கள். ஆனால், அதை முறையாகச் சேமிக்காமல், செலவு செய்துவிடுகிறார்கள். இனி வரும் காலத்தில் இந்தியப் பொருளாதாரமும், கார்ப்பரேட் நிறுவனங்களும் சிறப்பாகச் செயல்படும் என்ப தால், தயங்காமல் முதலீட்டை ஆரம்பியுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக