மொத்தப் பக்கக்காட்சிகள்

ஐடிஎன்டி தினம் iTNT தமிழ்நாடு தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் டாக்டர்பழனிவேல் தியாக ராஜன்

 


மாண்புமிகு தமிழ்நாடு தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாக ராஜன் மாநிலத்தின் வளர்ந்து வரும் மற்றும் ஆழ்நிலை தொழில்நுட்ப  புத்தாக்க எழுச்சிக்கான தொலைநோக்குப் பார்வையை எடுத்துரைத்ததார்

 

சென்னை, ஜூலை 11, 2024: 15.05.2023 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் (ஐடிஎன்டி மையம்),    அதன் முதலாவது ஐடிஎன்டி  தினத்தை வியாழக்கிழமையன்று சென்னையில் கொண்டாடியது. தமிழ்நாடு தொழில்நுட்ப மையம், இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்,  தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, மற்றும் தொழில் நிறுவனங்களின் ஆதரவுடன்  கூட்டாக  நிறுவப்பட்டது.

இந்த நிகழ்வானது, உருமாறும் உலகளாவிய புத்தாக்கத்தினை ஊக்குவிப்பதற்காக, தமிழ்நாடு தொழில்நுட்ப மையத்துடன் இணைந்து, அதன் முதல் வகையான ஆழ்நிலை தொழில்நுட்ப புத்தாக்க வலையமைப்பை இந்நாட்டில் கட்டமைக்கும் வகையில் அமைந்த, சர்வதேச பங்குதாரர்கள், தொழில் முன்னோடிகள், பிரபல கல்வியாளர்கள், புத்தாக்கத்தோர், புத்தொழில் நிறுவனர்கள் மற்றும் அரசு துறைத் தலைவர்கள்  ஆகியோரின் சங்கமம் ஆகும். இந்நிகழ்வு 2024-25 ஆம் ஆண்டிற்குரிய புதுமையான முயற்சிகளுக்கு வலுவூட்டுவதாக அமைந்தது.

மாண்புமிகு தமிழ்நாடு அரசின் தகவல் தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாக ராஜன் அவர்கள் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு, தனது உரையில் தமிழ்நாட்டின் ஆழ்நிலை தொழில்நுட்பம் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப புத்தொழில் முனைவு சுற்றுச்சூழல் அமைப்பின் வல்லமையை எடுத்துரைத்தார். தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவர் டாக்டர். ஜே. ஜெயரஞ்சன் அவர்கள்,  தமிழ்நாட்டை  புத்தாக்கம் சார்ந்த பொருளாதாரமாக நிலைநிறுத்துவதில் ஐடிஎன்டி மையத்தின் பங்கினை வலியுறுத்தினார்.


இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் திரு. S. கிருஷ்ணன், I.A.S., அவர்கள், புத்தாக்க வளர்ச்சிக்கு உகந்த சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க, விரைவில் வெளியிடப்படவுள்ள தேசிய ஆழ்நிலை தொழில் நுட்ப புத்தொழில் முனைவுக் கொள்கை குறித்து, அவரது நுண்ணறிவுத் திறன்களைப் பகிர்ந்து கொண்டார்.   தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்,  திரு. தீரஜ் குமார், I.A.S. அவர்கள்தமிழ்நாட்டின் வளர்ந்து வரும் மற்றும் ஆழ்நிலை தொழில்நுட்ப நிலப்பரப்பை வலுப்படுத்த, துறை மேற்கொண்ட முன்னெடுப்புகளை பங்குதாரர்களின் கூட்டத்தில் எடுத்துரைத்தார்.

 தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் (ஐடிஎன்டி மையம்), சீமென்ஸ் உடன் இணைந்த தமிழ்நாடு சீர்மிகு மற்றும் மேம்படுத்தப்பட்ட உற்பத்தி நிறுவனம் (TANSAM); டசால்ட் சிஸ்டம்ஸ் உடன் இணைந்த தமிழ்நாடு மேம்படுத்தப்பட்ட உற்பத்திக்கான சிறப்பு மையம் (TANCAM); தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதி மேலாண்மைக் கழகம் (TNIFMC); இந்திய அமேசான் இணைய சேவைகள் (AWS); மைக்ரோசாப்ட் இந்தியா; மற்றும் டி லேப்ஸ் இன்குபேட்டர் அசோசியேஷன்; இந்தியா ஸ்கூல் ஆஃப் பிசினஸ் (ISB), டி-ஹப் மற்றும் டி-வொர்க்ஸ், ஹைதராபாத் ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.

மாண்புமிகு தமிழ்நாடு அரசின் தகவல் தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் அவர்கள் முன்னிலையில், ஐடிஎன்டி மையத்தின் "JIGSAW" இணையதளத்தின் மூலம் இரண்டு "தொழில்நுட்ப பரிமாற்றங்கள்" வசதி செய்யப்பட்டது ஒரு முக்கிய அம்சமாகும். JIGSAW" இணையதளம், தொழில்-கல்வித்துறை ஒத்துழைப்பை வளர்ப்பதற்காக, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களால் இவ்வாண்டின் ஆரம்பத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.  ஐடிஎன்டி  மையம்,  பல்வேறு வளர்ந்து வரும் மற்றும் ஆழ்நிலை தொழில்நுட்ப புலத்திலிருந்து 4,100-க்கும் மேற்பட்ட கல்வி ஆராய்ச்சியாளர்களை இவ்விணையதளத்தில் இணைத்துள்ளது.

தொழில்நுட்ப பரிமாற்றத்தை மதிப்பிடுவதற்காக சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்களை உள்ளடக்கிய ஆர்வத்தை வெளிப்படுத்தும் ஒப்பந்தம் டாக்டர். மஞ்சுளா, உதவி பேராசிரியர், இயற்பியல் துறை மற்றும் ஆஸ்ட்ரோமெடா ஸ்பேஸ் பிரவேட் லிமிடெட் ஆகியோருக்கிடையே கையெழுத்திடப்பட்டது. இரண்டாவது,  டாக்டர் பார்த்தசாரதி, விஞ்ஞானி E, மருந்து கண்டுபிடிப்பு மற்றும் மேம்பாட்டு மையம் மற்றும் வைவாஜென் Dx லேப்ஸ்(OPC) பிரவேட் லிமிடெட் ஆகியோரிடையே கையெழுத்தான தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகும் .

ஐடிஎன்டி மையத்தின் தலைமை செயல் அலுவலர் திருமதி வனிதா வேணுகோபால், "ஆழ்நிலை தொழில் நுட்ப புத்தாக்கத்திற்கான அறிவுசார் சொத்து மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் – கல்வித்துறை, புத்தொழில் முனைவோர், அரசு மற்றும் தொழில் நிறுவனத்தின் பங்கு" என்ற தலைப்பில் ஓர் அறிவூட்டும் குழுவிவாதத்தை நடத்தினார். அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் ஆர்.வேல்ராஜ்;, காப்புரிமைகள், வடிவமைப்புகள் மற்றும் வர்த்தக முத்திரைகளின் தலைமை கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தின் இணை கட்டுப்பாட்டாளர் திரு. தங்கபாண்டியன்,; தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதி மேலாண்மைக் கழகத்தின் தலைமை செயல் அலுவலர் திரு. கிருஷ்ண சைதன்யா;   மற்றும் திரு. P. பத்மகுமார், CII SR திறன் பணிக்குழுவின் தலைவர் & நிர்வா க இயக்குநர் ஆகியோர் அதில் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

 

கல்வியியல் ஆராய்ச்சியாளர்கள், புத்தாக்கத்தோர் மற்றும் மாணவ தொழில்முனைவோருக்கு ஆதரவளிப்பதன் மூலம் வளாகத்தில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்புகளை வளர்ப்பதற்காக 50 உயர் கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (GoI) மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை (தமிழ்நாடு) ஆகிய துறைகளின் தலைவர்களும் இந்த நிகழ்வில் உரையாற்றினார்கள்.

 

ஐடிஎன்டி மையத்தை பற்றி:

தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் (iTNT Hub), இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்,  தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, மற்றும் தொழில் நிறுவனங்களின் ஆதரவுடன் நிறுவப்பட்டது. இந்த மையம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் 15.05.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டு,  சென்னை கோட்டூர்புரம் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சர் சி வி ராமன் அறிவியல் கட்டடத்தின் 3வது தளத்தில் செயல்பட்டுவருகிறது. ஐடிஎன்டி மையமானது, புத்தொழில் முனைவோர், புத்தாக்க முனைவோர், ஆராய்ச்சியாளர்கள், தொழில் வளர்காப்பகத்தோர், கல்வியாளர்கள், அரசு மற்றும் சர்வதேச பங்குதாரர்களின் ஒருங்கிணைந்த பலத்தை பயன்படுத்தி, அதன் முதல் வகையான ஆழ்நிலைத் தொழில்நுட்ப புத்தாக்க வலையமைப்பை உருவாக்கி வருகிறது.

இம்மையம் கவனம் செலுத்தும் துறைகளுள், செயற்கை நுண்ணறிவு, இணைய உலகம், விண்வெளித் தொழில் நுட்பம்,  எந்திர மனிதவியல், சுகாதார தொழில்நுட்பம், இணைய பாதுகாப்பு, படைப்புத் தொழில்நுட்பம் மற்றும் உயர் மதிப்பு மென்பொருள் சேவை ஆகியவை அடங்கும். வளர்தொழில்காத்தல், தொழில்முடுக்கிவிடுதல், புத்தொழில் முனைவோருக்கு வசதி செய்து கொடுத்தல் மற்றும் தமிழ் நாடு முழுவதும் உள்ள ஆழ்நிலை தொழில் வளர்காப்பகம் மூலம் வளர்க்கப்பட்டவர்களுக்கு கூட்டு-வளர்தொழில்காத்தல் ஆகியவற்றுடன்,  ஐடிஎன்டி மையம், நிர்ணயிக்கப்பட்ட துறைகளில் புத்தாக்கம் மற்றும் முதலீட்டினை விரைவுபடுத்தும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. மாண்புமிகு தகவல் தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாக ராஜன் அவர்கள், வரவு-செலவுத் திட்ட  மானிய கோரிக்கையின் போது, தமிழ்நாடு ஆழ்நிலை தொழில் நுட்பக் கொள்கையை தமிழ்நாடு அரசு விரைவில் வெளியிடும் என்று அறிவித்தார். இந்தியாவில் வேறெந்த மாநிலமும் அறிவிப்பதற்கு முன்னதாக, இக்கொள்கையை  ஐடிஎன்டிமையம் முதலில் தொகுத்து வழங்கும். www.itnthub.tn.gov.in

 

 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு ஏற்ற . - பஜாஜ் ஃபின்சர்வ் ELSS வரி சேமிப்பு ஃபண்ட் .!

திரு .  எஸ் .  கார்த்திகேயன் ,  நிறுவனர் ,  https://winworthwealth.com/ மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு   ஏற்ற . ...