டாக்டர். மோகன்ஸ் இன்டர்நேஷனல் டயாபட்டீஸ் அப்டேட் நிகழ்வை மத்திய அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்
- மருத்துவ துறைக்கும், நாட்டிற்கும் வழங்கிய பங்களிப்பிற்காக டாக்டர். ஜிதேந்திர சிங் அவர்களுக்கு DMDSC வாழ்நாள் பங்களிப்பு விருது வழங்கப்பட்டது.
- நீரிழிவு குறித்த அறிவையும், உணவுமுறை மதிப்பாய்வையும் மேம்படுத்த டாக்டர். மோகன்ஸ் – ன் இந்திய உணவுகளின் வரைபட நூலின் 2 வது பதிப்பு மற்றும் நீரிழிவு மீது டாக்டர் மோகன்ஸ் கையேட்டின் 7வது பதிப்பு வெளியிடப்பட்டது.
- நீரிழிவு மீதான அறிவையும், நிபுணத்துவத்தையும் பகிர்ந்து கொள்வதற்காக உலகளவில் புகழ்பெற்ற இந்நிகழ்வில் 10 நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்களும், சுகாதாரத்துறைப் பணியாளர்களும் பங்கேற்றனர்.
- Photo Caption: (Left to Right) - டாக்டர் ரஞ்சித் உன்னிகிருஷ்ணன் - ஏற்பாட்டுக் குழு உறுப்பினர் மற்றும் டாக்டர் மோகன்ஸ் குழும நீரிழிவு நிறுவனங்களின் துணைத் தலைவர், டாக்டர். வி. மோகன் - சர்க்கரை நோய் புதுப்பிப்பு அமைப்பின் தலைவர் மற்றும் டாக்டர் மோகனின் நீரிழிவு நோய் நிறுவனங்களின் தலைவர், டாக்டர். ஜிதேந்திர சிங், மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் (தனி பொறுப்பு) அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் & புவி அறிவியல் அமைச்சகம், டாக்டர் ஆர்.எம். அஞ்சனா - ஏற்பாட்டுக் குழு உறுப்பினர் மற்றும் டாக்டர் மோகன் குழும நீரிழிவு நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்.
சென்னை: 27 ஜுலை, 2024: நீரிழிவு சிகிச்சையில் உலகத்தரத்திலான மையமாகப் புகழ் பெற்றிருக்கும் டாக்டர். மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையம் (DMDSC), சென்னையிலுள்ள ஐடிசி கிராண்டு சோழா வளாகத்தில் டாக்டர். மோகன்ஸ் டயாபட்டீஸ் அப்டேட் மாநாட்டின் 11வது பதிப்பை இன்று தொடங்கி வைத்திருக்கிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் புவி அறிவியல் துறையின் மத்திய இணை அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார். நீரிழிவு சிகிச்சையியலை மேம்படுத்துவதில் இவர் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பு மற்றும் இந்நாட்டிற்கு வழங்கிய சேவைகளை அங்கீகரிக்கும் விதத்தில் DMDSC வாழ்நாள் பங்களிப்பு விருது டாக்டர். ஜிதேந்திர சிங் அவர்களுக்கு இந்த சிறப்பான தருணத்தில் வழங்கப்பட்டது.
இவ்விருது வழங்கும் நிகழ்விற்குப் பிறகு, நீரிழிவு குறித்த அறிவையும், உணவுமுறை மதிப்பாய்வையும் மேம்படுத்த டாக்டர். மோகன்ஸ் – ன் இந்திய உணவுகளின் வரைபட நூலின் 2 வது பதிப்பு மற்றும் நீரிழிவு மீது டாக்டர் மோகன்ஸ் கையேட்டின் 7வது பதிப்பு ஆகியவை வெளியிடப்பட்டன. நிகழ்நிலைப்படுத்தப்பட்டிருக்கு
11-வது பதிப்பாக நடைபெறும் இம்மாநாட்டு நிகழ்வில், உலகெங்கிலுமிருந்து 160-க்கும் அதிகமான மருத்துவ நிபுணர்களும், அறிவியலாளர்களும் நீரிழிவு சிகிச்சை மற்றும் அதன் மேலாண்மை குறித்த தங்கள் கண்ணோட்டங்களை பகிர்ந்து கொள்கின்றனர் மற்றும் அது குறித்த விவாதங்களை நடத்தவிருக்கின்றனர். நீரிழிவு முன்தடுப்பு மற்றும் சிகிச்சை, ஜிஎல்பி – 1 தடுப்பான்கள், நீரிழிவு மற்றும் ஊட்டச்சத்து, நீரிழிவுடன் தொடர்புடைய பாலியல் செயல்திறனிழப்பு, கர்ப்பகால நீரிழிவு, முதியோருக்கான பராமரிப்பு மற்றும் உடற்பருமனோடு தொடர்புடைய நீரிழிவு போன்ற பல்வேறு முக்கியமான தலைப்புகள் மீது சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் மற்றும் போக்குகள் குறித்து விவாதிக்கின்ற கருத்தரங்கு வடிவில் முக்கிய அமர்வுகள் இந்த ஆண்டு நிகழ்வில் இடம்பெறுகின்றன. அத்துடன், இன்சுலின் மேலாண்மை மற்றும் நீரிழிவு சார்ந்த பாத பராமரிப்பு ஆகியவை குறித்த பயிலரங்குகளும் இம்மாநாட்டு நிகழ்வில் நடைபெறுகின்றன. நீரிழிவு ஆராய்ச்சி துறையில் புகழ்பெற்ற அறிவியலாளர்கள் வழங்கும் சிறப்புரையும் மற்றும் நிபுணர்கள் பங்கேற்கும் குழு விவாதமும் இந்நிகழ்வில் சிறப்பம்சங்களாக இருக்கின்றன.
இம்மாநாட்டில், ஹார்வர்டு மெடிக்கல் ஸ்கூல், என்ஹெச்எஸ் ஃபவுண்டேஷன் ஆஃப் பெர்மிங்ஹாம், சிங்கப்பூரின் நான்யாங் டெக்னாலஜிக்கல் யுனிவர்சிட்டி, ஃபுளாரிடா இன்டர்நேஷனல் யுனிவர்சிட்டி, யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் எக்ஸ்டெர் அண்டு இம்ப்பீரியல் காலேஜ் ஆஃப் லண்டன் மற்றும் மெல்போர்னைச் சேர்ந்த பேக்கர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டயாபட்டீஸ் போன்ற உலகளவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் 15 கல்வியாளர்களோடு புகழ்பெற்ற மருத்துவர்களும், அறிவியலாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவெங்கிலும் இயங்கி வரும் பிரபலமான மருத்துவ கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 160 – க்கும் அதிகமான இந்திய கல்வியாளர்களும் பிரதிநிதிகளாக இம்மாநாட்டு நிகழ்வுகளில் பங்கேற்றிருக்கின்றனர். நீரிழிவு ஆராய்ச்சி துறையில் மிகச்சிறந்த நிபுணர்கள் மற்றும் திறமைசாலிகளின் சங்கமமாக இம்மாநாடு நிகழ்வு அமைந்திருக்கிறது.
டாக்டர். மோகன்ஸ் நீரிழிவியல் நிறுவனங்களது குழுமத்தின் தலைவரும், டயாபட்டீஸ் அப்டேட் மாநாட்டின் ஒருங்கிணைப்பு தலைவருமான டாக்டர். வி. மோகன் இது தொடர்பாக கூறியதாவது: “11வது பதிப்பாக நடைபெறும் டாக்டர் மோகன்ஸ் இன்டர்நேஷனல் அப்டேட் நிகழ்வானது, நீரிழிவு சிகிச்சை பராமரிப்பில் மிக சமீபத்திய போக்குகள் மற்றும் மேம்பாடுகள் பற்றிய தகவல்களை மருத்துவர்களுக்கும், அறிவியலாளர்களுக்கும் வழங்குகிறது. செயல்நேர்த்தியில் எமது பாரம்பரியத்தை இந்நிகழ்வு இன்னும் வலுவாக தொடர்கிறது. நீரிழிவியல் சிகிச்சையில் இயங்கும் மருத்துவப் பணியாளர்கள் மத்தியில் ஒரு மிக முக்கிய நிகழ்வாக புகழ்பெற்றிருக்கும் இம்மாநாடு, பங்கேற்பாளர்களின் கல்விசார் அனுபவத்தை மேலும் செழுமையாக்குகிறது. நோயாளிகளுக்கான சிகிச்சையை மேம்படுத்தி வழங்கவும் மற்றும் இத்துறையில் வேகமான முன்னேற்றத்தை எட்டவும் தேவைப்படுகின்ற சமீபத்திய நவீன அறிவையும், வழிமுறைகளையும் பங்கேற்பாளர்களுக்கு இம்மாநாட்டின் மூலம் நாங்கள் வழங்குகிறோம்.”
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் புவி அறிவியல் துறையின் மத்திய இணை அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங், டாக்டர். மோகன்ஸ் நீரிழிவு சிகிச்சை மையங்கள் குழுமத்தால் மேற்கொண்டிருக்கும் முயற்சிகளைப் பாராட்டி பேசியதாவது: “உலகெங்கிலும் உள்ள முன்னணி கல்வி நிறுவனங்களிலிருந்து முதன்மையான நிபுணர்களை ஓரிடத்தில் ஒருங்கிணைக்கின்ற இந்த மாபெரும் முயற்சியான, டாக்டர். மோகன்ஸ் டயாபட்டீஸ் இன்டர்நேஷனல் அப்டேட் – ன் 11-வது பதிப்பு நிகழ்வை தொடங்கி வைப்பதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். இக்குழுமத்தின் தலைவர் டாக்டர். வி. மோகன் அவர்களது தலைமையில் செயல்படும் மெட்ராஸ் டயாபட்டீஸ் ரீசர்ச் ஃபவுண்டேஷனின் ஒட்டுமொத்த குழுவினரையும், நீரிழிவு ஆராய்ச்சியின் உலக வரைபடத்தில் இந்தியாவை இடம்பெறச் செய்ததற்காக நான் மனமார பாராட்டுகிறேன். மிக ஆழமான அறிவுப்பகிர்வு மற்றும் வெவ்வேறு துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பின் வழியாக, நீரிழிவுக்கான சிகிச்சையை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய செயல்தளமாக இந்த மாநாடு அமையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.” என்று கூறினார்.
டாக்டர். மோகன்ஸ் நீரிழிவியல் நிறுவனங்களது குழுமத்தின் நிர்வாக இயக்குனரும், இம்மாநாட்டு அமைப்புக் குழுவின் உறுப்பினருமான டாக்டர். ஆர்.எம். அஞ்சனா கூறியதாவது: “இந்தியா மட்டுமல்லாது, உலகெங்கிலுமிருந்து, இத்துறையில் புகழ்பெற்ற நிபுணர்கள் பலர் இம்மாநாட்டு நிகழ்வில் பங்கேற்றனர். பல்வேறு சிறப்புரைகள், கருத்தரங்கு மற்றும் பயிலரங்குகள், நீரிழிவு மேலாண்மை மற்றும் முன்தடுப்பு செயல்பாட்டில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த துல்லியமான தகவல்களை வழங்குவதால், ஒரு முழுமையான கல்விசார் அனுபவத்தை இந்நிகழ்வு தொடர்ந்து வழங்கி வந்திருக்கிறது.”
டாக்டர். மோகன்ஸ் நீரிழிவியல் நிறுவனங்களது குழுமத்தின் துணைத் தலைவரும் மற்றும் மாநாட்டின் அமைப்புக்குழு உறுப்பினருமான டாக்டர். ரஞ்சித் உன்னிகிருஷ்ணன் பேசுகையில், “உலகெங்கிலுமிருந்து 160-க்கும் அதிகமான நிபுணர்களுடன் 4000-க்கும் கூடுதலான பிரதிநிதிகள், மாநாட்டு நிகழ்வில் பங்கேற்றனர். நீரிழிவு மேலாண்மை குறித்த தங்களது புரிதலை ஆழமாகவும், புரட்சிகரமான யோசனைகளைப் பரிமாறிக் கொள்ளவும் சமீபத்திய கருத்தாக்கங்கள் பற்றிய தகவல்களைப் பெற்று கலந்துரையாடவும் மருத்துவ நிபுணர்களுக்கும், அறிவியலாளர்களுக்கும் ஒரு நிகரற்ற வாய்ப்பை தருவதாக இந்நிகழ்வு இருக்கும் என்பதில் ஐயமில்லை.” என்று கூறினார்.
டாக்டர். மோகன்’ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையம் குறித்து:
தமிழ்நாட்டின் சென்னையில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும் டாக்டர். மோகன்’ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையமானது, 1991-ம் ஆண்டில் நிறுவப்பட்டதாகும். இந்தியாவின் முன்னணி நீரிழிவு சிகிச்சை வழங்கல் நிறுவனமாகத் திகழும் இது, நீரிழிவு நோயாளிகளுக்கு விரிவான சேவைகளை வழங்கிவருகிறது. இந்தியாவில் 50 நீரிழிவு சிகிச்சை மையங்களைக் கொண்டு நீரிழிவு சிகிச்சையில் முழுமையான சேவைகளை இது வழங்கிவருகிறது. இந்த சிகிச்சை மையங்களில் 8 லட்சத்திற்கும் அதிகமான நீரிழிவு நோயாளிகள் இம்மையங்களில் சிகிச்சைக்காக பதிவுசெய்யப்பட்டிருக்கின்றனர் மற்றும் இதுநாள்வரை 5.5 மில்லியனுக்கும் அதிகமான மருத்துவ சிகிச்சைக்கான கலந்தாலோசனைகள் செய்து முடிக்கப்பட்டிருக்கின்றன.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள சிகிச்சை மையம் இதன் முதன்மை மருத்துவமனையாக செயல்படுகிறது. இம்மையம், முழுமையான நீரிழிவு பராமரிப்பு, நீரிழிவில் கண்களுக்கான சிகிச்சை, நீரிழிவில் பாத பராமரிப்பு சேவைகள் நீரிழிவு சார்ந்த இதய சிகிச்சை, நீரிழிவு சார்ந்த வாய் / பற்களுக்கான சிகிச்சை, முன்தடுப்பு பராமரிப்பு, உணவுமுறை ஆலோசனை மற்றும் துல்லிய நீரிழிவு சிகிச்சை ஆகியவற்றில் சிறப்பு கவனமும், நிபுணத்துவமும் கொண்டிருக்கிறது. 8939110000 என்ற எண்ணை அழைப்பதன் மூலம் அல்லது www.drmohans.com என்ற வலைதளத்திலும் மருத்துவ ஆலோசனைக்கான சந்திப்புகளை முன்பதிவு செய்யலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக