நான் கடந்த வாரத்தில் இங்கிலாந்தில் இருந்தேன், அப்போது அங்கு வேட்டிக்கு அந்த நாட்டில் உள்ள மரியாதை மற்றும் இந்தியர்களுக்கு வேட்டியின் கலாச்சார முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதில் அங்குள்ள மக்கள் எப்படி மகிழ்ச்சி அடைகிறார்கள் என்பதை நான் நேரில் பார்த்தேன்.
அதே நேரத்தில், சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவை நான் பார்த்தேன். அதில் பக்கீரப்பா என்னும் ஒரு விவசாயி தனது சொந்த நாடான இந்தியாவிலுள்ள பெங்களூர் நகரில் வேட்டி கட்டியதன் காரணமாக ஒரு வணிக வளாகத்தின் உள்ளே நுழைய மறுக்கப்பட்டது குறித்து தெரிவித்துள்ளார்.
இதைப் பார்த்த நான் கலங்கிய மனதுடனும் கனத்த இதயத்துடனும் எனது உணர்வுகளை இந்தக் கடிதத்தின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒவ்வொரு இந்தியனும் வேட்டி அணிவதற்கு பெருமைப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
வேட்டி என்பது வெறும் ஆடை அல்ல; இது நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் அடையாளம் ஆகும். இது இந்தியாவின் தனித்துவமான பாரம்பரியம் மற்றும் பெருமையின் சின்னமாக உள்ளது.
மேலும் நமது நாட்டின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளது.
நமது தேசத் தந்தை மகாத்மா காந்தி, வேட்டியை அணிந்து, தன்னம்பிக்கையின் அடையாளமாக திகழ்ந்ததோடு சுதந்திரப் போராட்டத்திலும் புரட்சி செய்தார். வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களைப் புறக்கணிக்கவும், வறுமையில் வாடிவந்த தென்னிந்திய மக்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கவும் காந்தி வேட்டியை தேர்வு செய்தார்.
அதன் காரணமாக இது இந்தியாவின் சுதந்திரம் மற்றும் சுயமரியாதைக்கான போராட்டத்தின் அடையாளமாக மாறியது.
பல நூற்றாண்டுகளாக, ஏராளமான இந்தியர்கள் வேட்டியை அணிந்து வருகின்றனர், இது நமது கலாச்சாரத்தின் எளிமை, நேர்த்தி மற்றும் செழுமை ஆகியவற்றை பிரதிபலிக்கிறது.
ஜிடி வேர்ல்ட் மாலில் நடந்த சம்பவம், நமது பல்வேறு கலாச்சார நடைமுறைகளுக்கு அதிக விழிப்புணர்வு மற்றும் மரியாதை தேவை என்பதை நினைவூட்டுகிறது. இந்தச் சம்பவத்தை கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் இதுபோன்ற பாரபட்சமான நடைமுறைகள் நடக்காமல் இருக்க, சம்பந்தப்பட்ட மால் அதிகாரிகளும் அதைச் சார்ந்த நிறுவனங்களும் சரியான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஆடை அடிப்படையிலான பாகுபாடு என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் ஒரு சமூகமாக நாம் விரும்பும் சமத்துவம் மற்றும் மரியாதை மதிப்புகளுக்கு அது எதிரானது.
நெசவாளர்களின் மேல் ஏற்பட்ட அனுதாபமும்,
வேட்டி அணிந்ததினால்
எனக்கு ஏற்பட்ட அவமானமும் தான்
*ராம்ராஜ் காட்டன்*
வளர்ச்சிக்கே காரணம்.
வேட்டி அணிவது அவமானமல்ல……
நம் இந்தியர் ஒவ்வொருவருடைய
அடையாளம்….!!!
நன்றி.
K.R. நாகராஜன்
நிறுவனர் - தலைவர்
ராம்ராஜ் காட்டன்.
*CULTURE OF INDIA *
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக