பை-பேக் வருமானத்துக்கு முதலீட்டாளர்கள் அதிக வரி கட்ட வேண்டும்!
பங்கு டிவிடெண்ட் வருமானத்துக்கு ஒருவர் எந்த வரி வரம்பில் வருகிறாரோ அதற்கு ஏற்ப அதிக வரிக் கட்ட வேண்டும். இந்த நிலையில் பங்கு முதலீட்டாளர்கள் அதிக வரிக் கட்டுவதை தவிர்க்க நிறுவனங்கள் அவற்றின் முதலீட்டாளர்களிடமிருந்து பங்குகளை திரும்ப வாங்கிக் (Buy-back) கொண்டு அதற்கு சந்தை விலையை விட அதிக தொகையை நிறுவனங்கள் வழங்கி வருகின்றன..
பை பேக் தொகைக்கு முதலீட்டாளர்கள் வருமான வரி எதுவும் செலுத்த தேவையில்லை. இந்த நிலையில் நிறுவனம் 20% வரிக் கட்டியது.
இப்போது முதலீட்டாளர் பெறும் தொகைக்கு வரி வரம்புக்கு ஏற்ப டிவிடெண்ட் போல் அவர்கள் வரிக் கட்ட வேண்டும் என கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனால், அதிக வருமான வரி வரம்பில் வருபவர்கள் அதிகமாக வரிக் கட்ட வேண்டி வரும். மேலும், பங்கை வாங்கிய விலை மூலதன இழப்பாகவும் (கேப்பிட்டல் லாஸ்) அதை இதர மூலதன ஆதாயத்தில் ஈடுகட்டிக் கொள்ளலாம். அந்த நிதியாண்டில் அப்படி லாபத்தில் ஈடுகட்ட முடியவில்லை என்றால் அடுத்து வரும் ஆண்டுகளுக்கு எடுத்து செல்லலாம்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக