மத்திய பட்ஜெட் 2024-25: பங்கு, மியூச்சுவல் ஃபண்ட் வருமான வரி உயர்வு..!
மத்திய பட்ஜெட் 2024-25 ஐ நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தாக்கல் ஜூலை 23, 2024 அன்று செய்தார்.
நீண்ட கால மூலதன ஆதாய வரி (long-term capital gains (LTCG) 10 சதவிகிதத்தில் இருந்து 12.5 சதவிகிதமாக உயர்த்தப்படுகிறது.
பட்டியலிடப்பட்ட நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் அதாவது ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு குறுகிய கால மூலதன ஆதாய வரி (short term capital gains - STCG) 15 சதவிகிதத்தில் இருந்து 20 சதவிகிதமாக உயர்த்தப்படுகிறது.
பட்டியலிடப்பட்ட நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளுக்கு ஓராண்டுக்கு மேற்பட்ட நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு நிதியாண்டில் ரூ.1 லட்சம் வரி இல்லை என்பது ரூ.1.25 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தை மியூச்சுவல் ஃபண்டுகள் நீண்ட கால மூலதன ஆதாய வரி கணக்கிடும் காலம் ஓராண்டாக தொடர்கிறது. ரியல் எஸ்டேட் முதலீட்டில் நீண்ட கால மூலதன ஆதாய கணக்கிடும் காலம் 2 ஆண்டுகளாக தொடர்கிறது. தங்கத்தில் நீண்ட கால மூலதன ஆதாயம் கணக்கிடும் காலம் மூன்று ஆண்டுகளிலிருந்துஇ 2 ஆண்டுகளாக குறைக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக