மொத்தப் பக்கக்காட்சிகள்

வேளாண் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடுகோரமண்டல் இன்டர்நேஷனல் செயல் தலைவர் அருண் அழகப்பன் வரவேற்பு



மத்திய பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு
கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் செயல் தலைவர் அருண் அழகப்பன் வரவேற்பு

மத்திய அரசின் பட்ஜெட்டில் வேளாண் துறையில் ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதற்கு கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் செயல் தலைவர் அருண் அழகப்பன் வரவேற்றுள்ளார்.
மக்களவையில் மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்கிழமை தாக்கல் செய்தார். அதில் வேளாண் துறையில் ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு,  கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் செயல் தலைவர் அருண் அழகப்பன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விவசாயம் இருக்கிறது. மத்திய பட்ஜெட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும், விவசாயத்தில் மீள் திறன் மற்றும் உற்பத்தி திறனை உருவாக்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம்.

மத்திய அரசின் முன்மொழியப்பட்ட விரிவான வேளாண் ஆராய்ச்சி மறு ஆய்வு என்பது உற்பத்தி திறனை மேம்படுத்துதல் மற்றும் காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப தாங்கி வளரும் பயிர்களை உருவாக்குதல் ஆகியவை இந்திய வேளாண்மை பருவநிலை மாற்ற விளைவுகளை எதிர்கொள்ளும் வவகையில் உறுதி செய்யும் விதமாக உள்ளது. மத்திய அரசின் இந்த முன்முயற்சி வேளாண் துறை ஆராய்ச்சியில் அரசு மற்றும் தனியார் நிபுணர்களை ஒன்றிணைக்க தேவையான ஊக்கத்தை அளிக்கும்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் 1 கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்துதல் மற்றும் பெரிய அளவிலான தோட்டக் கலை உற்பத்தியை ஊக்குவிக்கும் மத்திய அரசின் முயற்சி விவசாய உற்பத்தி திறன், நீடித்த தன்மையை பெரிய அளவில் அதிகரிக்கும். அதேபோல இயற்கை விவசாயத்தை விவசாயிகளிடையே ஊக்குவிக்கும் வகையல் 10 ஆயிரம் உயிரி வள மையங்கள் நிறுவப்பட உள்ளன. மேலும் பருப்பு வகைகளின் உற்பத்தி, சேமிப்பு மற்றும் விற்பனை ஆகியவற்றை வலுப்படுத்துவதில் முனைப்பு மற்றும் இறால் வளர்ப்புக்கு நிதியுதவி ஆகியவை பன்முக விவசாய நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக அமைந்துள்ளது.
வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது மத்திய அரசு முக்கிய துறையாக மாற்ற முக்கியத்துவம் அளித்திருப்பது தெரிகிறது.

இன்றைய காலத்தில் தொழில்நுட்பம் விவசாயத்தை மாற்றி அமைத்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டில் 400 மாவட்டங்களில் காரிப் பருவ விவசாயிகளிடம் இருந்து  டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பை செயல்படுத்தவும், 109 வறட்சி போன்ற பருவநிலையைத் தாங்கி வளரும் புதிய பயிர் ரகங்கள், விதைகளை வெளியிடவும் அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில் விவசய உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கும், விவசாய சமூகத்திற்கு உதவும் இந்த கொள்கைகளை செயல்படுத்த கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளது.
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

காப்பீடு - செயற்கை நுண்ணறிவு மூலம் மேம்பாடு..! AI

காப்பீடு - செயற்கை நுண்ணறிவு மூலம் மேம்பாடு..! செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் காகிதமில்லாத (paperless) மற்றும் 100% ரொக்கமில்லா (Cashles...