மொத்தப் பக்கக்காட்சிகள்

பிறப்பிற்கும்* *இறப்பிற்கும் இடையில், *நீ செய்யும்* *பாவம்* *புண்ணியம்*மட்டுமே

*பிறப்பிற்கும்* 
*இறப்பிற்கும் இடையில், 
*நீ செய்யும்* *பாவம்*
*புண்ணியம்*மட்டுமே*
*உனக்கு மிஞ்சும்...*
*உன்னுடன் கடைசி* 
*வரை வருவதும்*   *இதுவே...!!*

1) பெற்றோர்களை  
     நோகடிக்காதே...
     நாளை உன் பிள்ளையும்
     உனக்கு அதை தான்
     செய்யும்...!!
2) பணம் பணம் என்று 
     அதன் பின்னால்
     செல்லாதே...
     வாழ்க்கை போய்   
     விடும்...
     வாழ்க்கையையும்
     ரசித்துக் கொண்டே  
     போ...!!
3) நேர்மையாக இருந்து
     என்ன சாதித்தோம்
     என்று நினைக்காதே...
     நேர்மையாக இருப்பதே
     ஒரு சாதனை தான்...!!
4) நேர்மையாக 
     இருப்பவர்களுக்கு
     சோதனை வருவது
     தெரிந்ததே, அதற்காக
     நேர்மையை கை விட்டு
     விடாதே...
     அந்த நேர்மையே
     உன்னை 
     காப்பாற்றும். ..!!
5) வாழ்வில் சின்ன சின்ன 
     விஷயத்திற்கெல்லாம்
     கோபப்படாதே...
     சந்தோஷம் 
     குறைவதற்கும்,
     பிரிவினைக்கும் இதுவே
     முதல் காரணம்...!!
6) உனக்கு உண்மையாக
     இருப்பவர்களிடம்...
     நீயும் உண்மையாய் 
     இரு...!!
7) அடுத்தவர்களுக்கு தீங்கு
     செய்யும் போது
     இனிமையாகத்தான் 
     இருக்கும்...
     அதுவே உனக்கு வரும்
     போது தான், அதன்
     வலியும் வேதனையும்
     புரியும்...!!
8)ஒருவன் துரோகி
      என்று தெரிந்து 
      விட்டால்...
      அவனை விட்டு
      விலகியே இரு...!!
9)எல்லோரிடமும் 
      நட்பாய் இரு...
      நமக்கும் நாலு
      பேர் தேவை...!!
10)நீ கோவிலுக்கு
      சென்று தான்
      புண்ணியத்தை
      சேர்க்க வேண்டும்
      என்பதில்லை...
      யாருக்கும் தீங்கு
      செய்யாமல்
      இருந்தாலே...
      நீ கோவில்
      சென்றதற்கு சமம்...!!
11)நிறை குறை இரண்டும்
      கலந்தது தான்
      வாழ்க்கை...
      அதில் நிறையை மட்டும்
      நினை...
      நீ வாழ்க்கையை
      வென்று விடலாம்...!!
12)எவன் உனக்கு உதவி
      செய்கிறானோ,
      அவனுக்கு மட்டும்
      ஒரு நாளும் துரோகம்
      செய்யாதே...
      அந்த பாவத்தை நீ
      எங்கு போனாலும்
      கழுவ முடியாது...!!
13)அடுத்தவர்களைப்
      போல் வசதியாக
      வாழ முடியவில்லை 
      என்று நினைக்காதே...
      நம்மை விட  
      வசதியற்றவர்கள்
      கோடி பேர்
      இருக்கிறார்கள் 
      என்பதை மனதில்
      கொள்...!!
14)பிறப்பிற்கும் 
      இறப்பிற்கும் இடையில்,
      நீ செய்யும் பாவம்
      புண்ணியம் மட்டுமே
      உனக்கு மிஞ்சும்...
      உன்னுடன் கடைசி
      வரை வருவதும் 
      இதுவே...!!
                        
  *விதி*
*வினை விதைத்தவன் வினையை அடைவான்.!
*நல்லதை விதைத்தவன் 
நன்மை அடைவான்.!

அருட்பெருஞ்ஜோதி 
தனிப்பெரும்கருனை 
எல்லா உயிர்களும்
இன்புற்று வாழ்க.
கொல்லா நெறி 
குருவருள் நெறி.

🔥சுத்த சன்மார்க்கம்🔥
🔥திருச்சிற்றம்பலம்🔥 
🔥அருட்தந்தையர்🔥 
🔥திரு வள்ளலார்🔥 
🔥திரு வள்ளுவர்🔥திருவடிகளை தயவோடு தன் முடிமேல் ஏத்து வணங்கி வாழ்த்தி 
போற்றி மகிழ்கின்றேன்.

அக விழிப்புணர்வில்
அக அனுபவத்தில்  
அக உள்முகப்பயணம் 
அக அறிவே மெய்யறிவு.

ஆனந்தம் பரமானந்தம் ஆனந்தமாக இருங்கள் 
அருட் சத்குரு தயவு அடியேன் 
ஆன்ம நேயன் 
அன்புத் தமிழன் 
அருள் வீராச்சாமி🙏🙏
ஆனந்தக்குடில் தேனி.
9442025394.
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு ஏற்ற . - பஜாஜ் ஃபின்சர்வ் ELSS வரி சேமிப்பு ஃபண்ட் .!

திரு .  எஸ் .  கார்த்திகேயன் ,  நிறுவனர் ,  https://winworthwealth.com/ மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு   ஏற்ற . ...