தமிழ்நாட்டில் பஞ்சாயத்து அப்ரூவல் என்கிற பெயரில் போடப்பட்ட லேஅவுட் களில் வீடு கட்ட டிடிசிபி அல்லது சிஎம்டிஏ அனுமதி பெற்று தான் வீடு கட்ட வேண்டும். 2016 அக்டோபருக்கு முன்னால் பதிவு செய்யப்பட்ட பஞ்சாயத்து மனைகளுக்கு இந்த விதிமுறை பொருந்தும் என தமிழ்நாட்டில் இருந்தது.
இந்த நிலையில் 2500 அடிமனை வரை தரைத்தளம் மற்றும் முதல் தளம் கொண்ட 3 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பிலான வீடுகளுக்கு கட்டட அனுமதி அதாவது பில்டிங் அப்ரூவல் பெற தேவையில்லை என தமிழக அரசு இன்று மார்ச் 13 2024 தினத்தந்தி உள்ளிட்ட பத்திரிக்கை விளம்பரங்கள் வாயிலாக அறிவித்துள்ளது.
இந்த அனுமதி சுய சான்று அடிப்படையில் உடனடியாக வழங்கப்படும்.
கட்டட முடிவு சான்றிதழ் கம்ப்ளிஷன் சர்டிபிகேட் பெற தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
எட்டு குடியிருப்புகள் அடுக்குமாடி குடியிருப்புகள் அல்லது 750 சதுர மீட்டருக்கு மிகாத புது குடியிருப்புகளுக்கு முடிவு சான்றிதழ் அவசியமில்லை.
தரை தளத்துடன் இரண்டு தளங்கள் அல்லது தூண்தளம் stilt மற்றும் மூன்று தலங்கள் கொண்ட குடியிருப்புகளுக்கான பக்கத்து விட setback அளவுகளில் மாறுதல் இன்றி உயரக் கட்டுப்பாடு 12 மீட்டர் இல் இருந்து 14 மீட்டர் ஆக உயர்த்தப்படுகிறது.
மனை பிரிவு அனுமதிக்கு தேவையான அணுகு சாலையின் அகலம் 7 மீட்டர் என்பது கிராமங்களில் ஆறு மீட்டர் பேரூராட்சிகளில் 6.5 மீட்டர் என குறைக்கப்படுகிறது.
தமிழக அரசின் இந்த அறிவிப்பால் விற்காமல் வீடு கட்ட முடியாமல் கிடந்த பல லட்சம் கணக்கான பஞ்சாயத்து அப்ரூவல் வீட்டு மனைகளில் வீடு கட்டப்படும். விற்பனை அதிகரிக்கும். விலை உயரும். தமிழ்நாட்டில் ரியல் எஸ்டேட் சூடு பிடிக்கும் எனலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக