சீனாவில் லஞ்சம் ஒழிக்கப்பட்டது எப்படி?
1722 ஆம் ஆண்டு சீனாவின் பேரரசராக யென்ஷின் *யாங்ஜெங்* என்ற பெயரில் முடிசூட்டிக் கொண்டார் அவருடைய தந்தையார் காங்சி மிக நீண்ட காலம் அதாவது 1661 முதல் 1722 ஆம் ஆண்டு வரை அரசாண்டவர் ..யாங்ஜெங்முடி சூட்டிக் கொள்ளும் பொழுது அவருக்கு வயது 40 கடந்து விட்டது ..
ஆனால் தனது தந்தையின் கீழ் இளவரசராக நீண்ட காலம் பணியாற்றியதால் அவருக்கு மிகுந்த அரசியல் நிர்வாக அனுபவம் இருந்தது ஆனால் அவர் முடி சூட்டிக் கொள்ளும் பொழுது கஜானா காலியாக இருந்தது காரணம்
..*லஞ்சம்*எப்படி என்றால் அந்தக் காலத்து சீன அரசு அதிகாரிகள் அரசாங்கம் வசூலிக்க சொன்ன வரி தொகைகளுக்கு மேலாக அவர்களாகவே தனித்தனியாக வரிகளை விதித்து அதை வசூலித்து வந்தார்கள் இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு ஒன்று அவர்களுடைய சம்பளம் அவர்கள் வாழ்க்கைச் செலவுகளுக்கு போதவில்லை
இரண்டாவதாக அவர்களது பகுதிகளில் நடைபெறும் மராமத்து போன்ற பணிகளுக்கு அரசாங்கம் போதுமான தொகை ஒதுக்குவதில்லை இதை ஈடு கட்டுவதற்காக அவர்கள் அரசு வரிகளுக்கு மேலாக தனியாக மக்களிடம் வரி வசூலித்து வந்த னர்..பலர் அதை அப்படியே சாப்பிடுவதும் உண்டு பல அதிகாரிகள் நேர்மையான முறையில் அதை அந்த பகுதிகளில் சாலை போடுவது நீர் நிலைகளை பராமரிப்பது படகு போக்குவரத்து விடுவது போன்ற மக்கள் நலத்திட்டங்களுக்கு செலவிட்டு வந்தார்கள் ஆனால் இதற்கு கணக்கு வழக்கு கிடையாது இந்த லஞ்ச வரி விதிப்பு முறை நீண்ட காலமாக நடைபெற்று வந்தது பேரரசர் யாங் ஜெங்குக்கு தெரியவந்தது
அவர் கண்டுபிடித்த தீர்வு முற்றிலும் வித்தியாசமானது ..அவர் அரசு அதிகாரிகள் விதித்த கூடுதல் வரிகளை ஆமோதித்து அரசு வரிகளாக அறிவித்து விட்டார் !!அவ்வளவுதான் !!பொதுப் பணிகளுக்கு வேண்டிய பணம் இந்த கூடுதல் வரிகளில் இருந்து கிடைத்தது அரசு அதிகாரிகளின் தலைவலி தீர்ந்தது..
அதுமட்டுமல்ல இன்னொரு வித்தியாசமான முறையை சீனப் பேரரசர் யாங்ஜெங் கடை பிடித்தார்.. அதாவது நேர்மையான அரசு அதிகாரிகள் என்று பெயர் வாங்குபவர்களுக்கு "நேர்மை போனஸ்" என்ற கொடையை அறிவித்து நேர்மையாக பணியாற்றும் அரசு அதிகாரிகளுக்கு நேர்மைக்கு* நேர்மை போனஸ்* வழங்கினார்.. உலகில் முதலில் அரசு அதிகாரிகளுக்கு நேர்மைக்கு போனஸ் வழங்கிய பேரரசர் யாங்ஜெங் தான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக