1 கோடி+ கிளைம் முதல் மருத்துவக் காப்பீட்டு நிறுவனம்
- ரூ. 44,000 கோடி மதிப்புள்ள கிளைம்களைச் செட்டில் செய்கிறது
- 1 கோடி கிளைம்களைச் செட்டில் செய்து சாதனை படைத்த இந்தியாவின் முதல் மருத்துவக் காப்பீட்டு நிறுவனம்
இந்தியா, 6 மார்ச் 2024: ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைட் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்), இந்தியாவின் மிகப்பெரிய ரீடெய்ல் மருத்துவக் காப்பீட்டு நிறுவனமானது, 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து 1 கோடிக்கும் அதிகமான கிளைம்களைச் செட்டில் செய்துள்ள முதல் தன்னிச்சையான மருத்துவக் காப்பீட்டு நிறுவனமாக மாறியுள்ளது. இந்த காப்பீட்டு நிறுவனம் நாடு முழுவதும் ரூ. 44,000+ கோடிகளுக்கும் அதிகமான கிளைம் பேமெண்ட்டைச் செய்துள்ளது. இதில் கேஷ்லெஸ் மற்றும் ரீஇம்பர்ஸ்மெண்ட் கிளைம்கள் இரண்டும் அடங்கும். இந்த வரலாற்றுச் சாதனையானது நிறுவனம் அதன் வாடிக்கையாளர் மீது செலுத்தும் கவனத்திற்கு ஒரு சான்றாகும். இது வாடிக்கையாளர்கள் அதன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.
இந்த பான் இந்தியா நிறுவனம் இந்தியா முழுவதும் 877 கிளைகளைக் கொண்டுள்ளது. இது மகாராஷ்டிராவில் அதிகளவிலான கிளைம்களைச் செட்டில் செய்தது, அதைத் தொடர்ந்து தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் டெல்லியில்.
இந்தக் காலகட்டத்தில், 14% கிளைம்கள் மூத்த குடிமக்களுக்காகவும், 61% மற்ற பெரியவர்களுக்காகவும், 25% மொத்த கிளைம்கள் குழந்தைகளுக்காகவும் செட்டில் செய்யப்பட்டுள்ளன. இது ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸின் பலதரப்பட்ட வாடிக்கையாளர் தளத்தை அனைத்து வயதுள்ள மக்கள் தரப்பிலும் எடுத்துக்காட்டுகிறது மற்றும் ஒவ்வொரு வாழ்க்கை நிலையிலும் மருத்துவக் காப்பீட்டின் அத்தியாவசியத் தேவையை வலியுறுத்துகிறது. இன்றைய உலகில் மருத்துவக் காப்பீடு ஓர் அடிப்படைத் தேவையாக அதிகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் கிளைம் செட்டில்மெண்ட்களுக்கான முக்கிய காரணங்களாக இருந்தன, இது செட்டில் செய்யப்பட்ட மொத்த கிளைம்களின் எண்ணிக்கையில் 20% ஆகும். பொது மருத்துவம், காஸ்ட்ரோஎன்டாலஜி மற்றும் எலும்பியல் ஆகியவற்றுக்கான கிளைம்களும் குறிப்பிடத்தக்கவை.
விரைவான மருத்துவ முன்னேற்றங்களுடன், 2008ஆம் ஆண்டிலிருந்து மருத்துவமனைகளில் நோயாளிகள் தங்கியிருக்கும் சராசரி நாட்களின் எண்ணிக்கை 20% வரை குறைந்துள்ளது. இருப்பினும், சராசரி கிளைம் அளவு நான்கு மடங்கு உயர்ந்துள்ளது, இது குறிப்பிடத்தக்க மருத்துவ பணவீக்கம் மற்றும் உபகரணங்கள் மற்றும் சிகிச்சையின் அதிநவீன விலை உயர்வு ஆகியவற்றைக் குறிக்கிறது.
சந்தை ஆதிக்கம்
ஜனவரி 2024 நிலவரப்படி, ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் இந்தியாவில் 33 சதவீத சந்தைப் பங்குடன் ரீடெய்ல் மருத்துவக் காப்பீட்டுச் சந்தையில் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்தக் காப்பீட்டு நிறுவனம் 6.84 லட்சம் முகவர்களைக் கொண்ட விரிவான விநியோக நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது, இது காப்பீட்டுத் துறையில் மிகப்பெரிய ஒன்றாகும். கூடுதலாக, நிறுவனம் தனது புராடக்ட்டுகளை விநியோகிக்க டிஜிட்டல் தளங்கள், நேரடி விற்பனைகள், கார்ப்பரேட் கூட்டாண்மைகள், புரோக்கர்கள், வங்கிகள் மற்றும் மாற்று சேனல்கள் உள்ளிட்ட பல்வேறு சேனல்களைப் பயன்படுத்துகிறது. இந்த பரவலான விநியோக நெட்வொர்க் ஆனது நிறுவனத்திற்கு ஒரு தனித்தன்மையான அடையாளத்தை வழங்குகிறது.
இந்த முக்கியமான நிகழ்வில் கருத்து தெரிவித்த ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைட் இன்சூரன்ஸ் கோ. லிமிடெட் நிறுவனத்தின் MD மற்றும் CEO, திரு. ஆனந்த் ராய் கூறியதாவது, "பெயர் அறியப்படாத ஸ்டார்ட்-அப் காப்பீட்டு நிறுவனமாக இருந்து இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவக் காப்பீட்டு நிறுவனமாக மாறிய எங்களது பயணம் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மைல்கல் சாதனையானது எங்களின் மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள் மீது நாங்கள் வைத்திருக்கும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுவதுடன், அவர்களின் விருப்பமான மருத்துவக் காப்பீட்டு நிறுவனமாக எங்களின் நிலையை மேம்படுத்துகிறது."
"ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தில், நாங்கள் எங்கள் முயற்சிகளை பான் இந்தியாவில் உள்ள நடுத்தர-வருமானக் குழுக்களைச் சார்ந்த மக்களின் நோக்கிச் செயல்படுத்தி வருகிறோம், ஏனெனில் இந்தப் பிரிவினருக்குத்தான் மருத்துவக் காப்பீடு மிகவும் தேவையான ஒன்று. எங்கள் முன்கூட்டிய மருத்துவ பராமரிப்பு மற்றும் மருத்துவச் சேவைகள் மூலம் ஆரோக்கியமான வாடிக்கையாளர்களை உருவாக்குவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். எங்களின் வலுவான தரவு பகுப்பாய்வுகளைப் பயன்படுத்தி, எங்கள் வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளைக் கணிக்கவும் அவற்றை விரைவாகப் பூர்த்தி செய்யவும் எங்களால் முடியும்" என்று ராய் மேலும் கூறினார்.
70%க்கும் அதிகமான அனைத்து கிளைம்களும் 14500+ எம்பேனல் செய்யப்பட்ட மருத்துவமனைகளில் நிறுவனத்தின் வலுவான நெட்வொர்க் மூலம் செட்டில் செய்யப்பட்டன. வாடிக்கையாளர்கள் மீது தாங்கள் வைத்திருக்கும் அர்ப்பணிப்பைக் கருத்தில் கொண்டு, நிறுவனம் கிட்டத்தட்ட அனைத்து கேஷ்லெஸ் கிளைம்களையும் 2-3 மணி நேரத்திற்குள் செட்டில் செய்தது. இந்த நிறுவனம் 580+ சிறப்பு மருத்துவ நிபுணர்களைக் கொண்ட கிளைம் செட்டில்மெண்ட் குழுவைக் கொண்டுள்ளது. வசதி மற்றும் பன்முகத்தன்மை கொண்ட சேவையை வழங்கும் தனது முயற்சிக்கு உண்மையாக இருந்து, ஸ்டார் ஹெல்த் நிறுவனம் தன் கிளைம் செட்டில்மெண்ட் குழுவில் மட்டும் 58% பெண்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. நிறுவனம் அனைத்து வாடிக்கையாளர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட 24x7 வாடிக்கையாளர் தொடர்பு மையத்தைக் கொண்டுள்ளது. மேலும், கிளைம் மோசடியைக் குறைக்க, ஸ்டார் ஹெல்த் நிறுவனம் AI-உதவி செயல்முறையைச் செயல்படுத்தியுள்ளது, இது சந்தேகத்திற்குரிய மோசடி கிளைம்களைக் கோடியிட்டுக் காட்டும்.
About Star Health and Allied Insurance:
Star Health and Allied Insurance Co Ltd (BSE:543412 | NSE:STARHEALTH) is the largest retail health insurance company in India. The Company commenced operations in 2006, as India's first Standalone Health Insurance Company with business interests in Health, Personal Accident and Overseas Travel Insurance. The company uses its vast resources to focus on service excellence and product innovation to deliver the best to its customers. Star Health has introduced many industry-first and innovative health insurance products to individuals, families and corporates. Star Health is also a prominent Bancassurance player with long standing relationship with many financial institutions.
As of 31 December 2023, Star Health has 877 branch offices Pan-India. The company has 14,203 network hospitals pan India. The company has a wide distribution network of 6.84 lakh agents, which is among the largest in the insurance sector. In FY23, Star Health had a gross written premium of INR 12,952 crore and a net worth of INR 5,430 crore.
For more information, please visit www.starhealth.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக