உயிர், உடைமைகளை காக்கும் காப்பீடுகள்!
ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, கடன் காப்பீடு, வாகனக் காப்பீடு, சொத்து காப்பீடு ஏன் எடுக்க வேண்டும் என்பதை விளக்கி சொல்லும் நாணயம் விகடன் நடத்தும் உயிர், உடைமைகளை காக்கும் காப்பீடுகள்! என்கிற ஆன்லைன் நிகழ்ச்சி நடக்கிறது.
ஆயுள் காப்பீட்டு ஆலோசகராக தனது நிதிச் சேவையை தொடங்கிய, எஸ்.கார்த்திகேயன், சார்டர்ட் ஃபைனான்ஸியல் படிப்பை முடித்து நிதி ஆலோசகராக உள்ளார். மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தரும் கூட. கடந்த 30 ஆண்டுகளாக பல்வேறு நிதி நிறுவனங்கள், வங்கிகள் மூலமாக வீடு, மனை வாங்க வீட்டுக் கடன், வீட்டு அடமானக் வாங்க சேவையும் ஆலோசனையும் வழங்கி வருகிறார். அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இலங்கை, ஹாங்காங் மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கு பயணம் செய்து நிதி மற்றும் வணிகம் தொடர்பான கருத்தரங்குகளில் பேசி வருகிறார்.
காப்பீடுகளின் நோக்கம், ஆயுள் காப்பீடு ஏன் அவசியம்?, யாருக்கு எந்த ஆயுள் காப்பீடு பாலிசி ஏற்றது?, மருத்துவச் செலவுகளை குறைக்கும் காப்பீடு, கடன் வாங்கும் போது ஏன் காப்பீடு எடுக்க வேண்டும்? வாகன காப்பீடு எடுக்கவில்லை என்றால் என்ன ஆபத்து?, சொத்து காப்பீட்டின் பலன் இன்னும் பல பயனுள்ள இன்ஷூரன்ஸ் அம்சங்கள் விளக்கி சொல்லப்படுகிறது.
கட்டணம் ரூ. 300 ஆகும். முன் பதிவு செய்ய: https://bit.ly/3OK9L4s
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக