அலர்ட் பியிங் விருது வழங்கும் விழா:
நிஜ வாழ்க்கை ஹீரோக்கள் விருது வழங்கி கவுரவிப்பு
~ ரத்தன் டாடாவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
~ உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய 41 பேரை காப்பாற்றிய 'ரேட் ஹோல் வீரர்களுக்கு' அலர்ட் பியிங் ஐகான் விருது வழங்கப்பட்டது.
~ தூத்துக்குடி வெள்ளத்தின் போது ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கித் தவித்த 500க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு சேவை செய்ததற்காக புதுக்குடி மேலூர் மக்களுக்கு அலர்ட் பியிங் ஐகான் விருது
~ நிஜ வாழ்க்கை ஹீரோக்களுக்கு ஆர். சேஷசாயி மற்றும்
பத்மஸ்ரீ டாக்டர் மோகன் காமேஸ்வரன் ஆகியோர் விருதுகளை வழங்கி கவுரவித்தனர்
சென்னை, பிப். 9-
நிஜ வாழ்க்கையில் சூப்பர் ஹீரோக்களாக விளங்கியவர்கள் 'அலர்ட் பியிங்' விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர். 7வது ஆண்டாக 'அலர்ட் பியிங்' விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
அலர்ட் என்ற தன்னார்வ லாப நோக்கற்ற அமைப்பானது, இந்தியாவில் 'வாழ்க்கை உரிமை'யை நடைமுறைப்படுத்த அர்ப்பணிப்புடன், விருது வழங்கும் விழாவை ஏற்பாடு செய்து, உயிரைக் காப்பாற்ற அல்லது பாதுகாக்க உதவிய கீழ்க்கண்ட தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் என 13 நிஜ வாழ்க்கை ஹீரோக்களுக்கு விருதுகளை வழங்கியது.
இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அடையாறு புற்று நோய் மைய மற்றும் ஏஷியன் பெயிண்ட்ஸ் தலைவர் சேஷசாயி மற்றும் சென்னை இஎன்டி ஆராய்ச்சி அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் பத்மஸ்ரீ. டாக்டர். மோகன் காமேஸ்வரன் ஆகியோர் நிஜ வாழ்க்கை ஹீரோக்களுக்கு விருதுகளை வழங்கினார்கள்.
தனி நபர் பிரிவில் இந்த விருதுகள் தங்கள் உயிரை பணயம் வைத்த 5 நிஜ வாழ்க்கை ஹீரோக்களுக்கு வழங்கப்பட்டது. வெள்ளத்தின் போது குழந்தையைப் பெற்றெடுக்க உதவிய தூத்துக்குடியைச் சேர்ந்த செவிலியர் ஜெயலட்சுமிக்கு, கடமையைத் தாண்டி பணியாற்றியதற்காக வழங்கப்பட்டது. நிறுவனங்களுக்கான பிரிவில், நிஜாம்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் பார் இ ஐசியூ, யுனைடெட் வே ஆப் சென்னை, தாரா சன்ஸ்தான் மற்றும் தரணி ஜியோடெக் என்ஜினியர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகியவையும் விருதுகளைப் பெற்றன. அலர்ட் பியிங் ஐகான் விருது உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 பேரை காப்பாற்றிய ரேட் ஹோல் வீரர்களுக்கும், தூத்துக்குடி வெள்ளத்தின் போது ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கித் தவித்த 500க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு சேவை செய்ததற்காக புதுக்குடி மேலூர் மக்களுக்கும் வழங்கப்பட்டது.
இதற்கான நடுவர்களாக நேச்சுரல் குரூப் சலூன்ஸ் நிறுவனர் வீணா குமாரவேல், தலைமை தகவல் ஆணையர், டிஜிபி (ஓய்வு) முகமது ஷகீல் அக்தர், ஆற்காடு இளவரசரின் வாரிசு மற்றும் திவான் நவாப்சாதா முகமது ஆசிப் அலி, லைப்லைன் மருத்துவமனைகள் தலைவர் மற்றும் தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜே.எஸ். ராஜ்குமார், மாற்றம் அறக்கட்டளை நிறுவனர் சுஜித்குமார் மற்றும் தொழில் அதிபர் ஆனந்தகிருஷ்ணன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
அலர்ட் அறங்காவலர் குழுவால் வழங்கப்பட்ட, வாழ்நாள் சாதனைக்கான அலர்ட் பியிங் விருது, வணிகத்தில் சிறந்து விளங்கியதற்காகவும், சிறப்பாக சமூகத் தொண்டாற்றியதற்காகவும் ரத்தன் என் டாடாவிற்கு வழங்கப்பட்டது.
இது குறித்து அலர்ட் தலைவர் மைக் முரளிதரன் கூறுகையில், நல்ல சமாரியன் சட்டம் அமலில் இருப்பதால், பயிற்சி பெற்ற தன்னார்வலர்களின் எண்ணிக்கையை 3 லட்சம் பேரிலிருந்து வரும் 2028-ம் ஆண்டுக்குள் 1 கோடியாக உயர்த்த இருக்கிறோம். கொரோனா காலத்தில் பயிற்சியின் வேகம் குறைந்த போதிலும், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பிற சமூகங்களைத் தவிர, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தங்கள் மாணவர்களுக்கு ஆபத்து காலங்களில் உதவிடும் பயிற்சியை அளிப்பதன் மூலம், இப்போது அது மீண்டும் வேகம் எடுக்கத் துவங்கி உள்ளது. இந்த தன்னார்வலர்களே எங்களின் பலம் என்று கூறிய அவர், அவசர காலங்களில், பெரும்பாலான மக்களுக்கு உதவ மனம் இருக்கிறது, ஆனால் அதை எப்படி செய்வது என்று தெரியவில்லை. விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்ற அவசரகாலத்தில் உதவுவதற்கு அதிகமான மக்களுக்கு பயிற்சி அளிப்பதே இதன் நோக்கம், கவனக்குறைவால் எந்த உயிரும் போகக்கூடாது என்று தெரிவித்தார்.
விருது பெற்றவர்கள் பற்றி நிறுவன அறங்காவலர் கலா பாலசுந்தரம் பேசுகையில், அலர்ட் பியிங் விருதுகளின் 7வது பதிப்பு, இரக்கம் மற்றும் சேவையின் உணர்வை உள்ளடக்கிய நிஜ வாழ்க்கை ஹீரோக்களின் சிறப்பான செயல்பாட்டை குறிக்கும் விதமாக உள்ளது. இந்த நிகழ்வின் மூலம், அவர்களின் தன்னலமற்ற செயல்களுக்கு மதிப்பளிப்பது மட்டுமல்லாமல், பரவலான விழிப்புணர்வு மற்றும் அவசரநிலைகளைக் கையாள்வதில் தயார்நிலையின் முக்கியமான தேவையை வலியுறுத்துகிறோம்.
அலர்ட் இணை நிறுவனரும் நிர்வாக அறங்காவலருமான ராஜேஷ் ஆர் திரிவேதி பேசுகையில், இந்தியா முழுவதிலும் இருந்து ஒவ்வொன்றும் மிக அசாதாரண மற்றும் துணிச்சலான சம்பவங்களைக் கொண்ட பல்வேறு நிகழ்வுகள் எங்களுக்கு வரப்பெற்றன. அதில் குறிப்பாக உத்தரகாண்ட் சுரங்க தொழிலாளர்கள் மீட்பு சம்பவமாக இருக்கட்டும், புதுக்குடி மேலூர் மக்களாகட்டும், செவிலியர் ஜெயலட்சுமி போன்ற கடமையைத் தாண்டிய தனிமனிதர்களாக இருக்கட்டும், மனிதனாக இருப்பதற்கு கருணையை வெளிப்படுத்துவதை விட பெரிதாக எதுவும் இல்லை. ரத்தன் டாடாவின் மனிதநேய செயல்பாடுகளை போற்றி கவுரவிக்கும் விதமாக அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இந்த விருது வழங்கும் விழாவில் பஹ்வான் சைபர்டெக், அசோக் லேலண்ட் மற்றும் விஜிஎன் குழும நிறுவனங்கள், மார்க் மெட்ரோ அன்ட் டெசோல்வ், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், நாகா புட்ஸ், சைதன்யா பில்டர்ஸ், டிஎன்கேஜி அறக்கட்டளை ஆகியவை ஆதரவு அளித்தன. பெண்கள் விருதை நேச்சுரல்ஸ் குழுமம் நிறுவியது. இதில் பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, எத்திராஜ் மகளிர் கல்லூரி, ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி, ஆவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குமாரராணி மீனா முத்தையா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆசான் நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் பிரின்ஸ் குழுமக் கல்லூரிகள் இதில் பங்குதாரர்களாக உள்ளன. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பெர்சனல் மேனேஜ்மென்ட் அவுட்ரீச் பங்குதாரராகவும், சூரியன் எப்எம் டிஜிட்டல் மீடியா பங்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக