மொத்தப் பக்கக்காட்சிகள்

Ducatz FinServ மெட்ராஸ் போரூர் ரோட்டரி கிளப்:: 2024 உங்கள் நிதி நல்வாழ்வை மேம்படுத்துதல் பயிலரங்கம்

 Ducatz FinServ மெட்ராஸ் போரூர் ரோட்டரி கிளப்:: 2024 உங்கள் நிதி நல்வாழ்வை மேம்படுத்துதல் பயிலரங்கம் 

Ducatz FinServ, மெட்ராஸ் போரூர் ரோட்டரி கிளப் உடன் இணைந்து நடத்திய பயிலரங்கம்

"2024-ல் உங்கள் நிதி நல்வாழ்வை மேம்படுத்துதல் "

தனிநபர்களின் நிதி நிர்வாகத்தினை மேம்படுத்துவதற்கான கூட்டு முயற்சியில், Ducatz FinServ,   மெட்ராஸ் போரூர் ரோட்டரி கிளப் உடன் இணைந்து "2024-ல் உங்கள் நிதி நல்வாழ்வை மேம்படுத்துதல் " என்ற தலைப்பில் ஒரு அற்புதமான பயிலரங்கை  ஏற்பாடு செய்தது. சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, 50க்கும் மேற்பட்ட ரோட்டரி கிளப் உறுப்பினர்களை வெகுவாக ஈர்த்தது. பயிலரங்கில் Ducatz FinServ இன் நிறுவனர் மற்றும் முதன்மை தனிநபர் நிதியியல் நிபுணரான திரு. சீனிவாசன் சுப்ரமணியன், நிதி நல்வாழ்வுக்கான 9-படி நிலைகள் மூலம்  உறுப்பினர்களின்  நிதி நிர்வாகத்தினை மேம்படுத்துவதற்கான நடைமுறை செயல்திட்டத்தினை அறிமுகப்படுத்தினார்.

 


முழுமையான நிதி அணுகுமுறை:

      தனிநபர் நிதியின்  (Personal Finance) பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து, நிதி நல்வாழ்வுக்கான முழுமையான அணுகுமுறையை இந்தப் பயிலரங்கம்  எடுத்துரைத்தது. 9-படி நிலைகள் மூலம் ஒரு விரிவான வழிகாட்டியாக செயல்பட்டது எனலாம்.

இது குடும்ப பட்ஜெட் மற்றும் சேமிப்பு முதல் முதலீட்டு உத்திகள் மற்றும் இடர் மேலாண்மை (அவசரக் கால தொகுப்பு நிதி, ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு) வரை முக்கியமான அம்சங்களை  உள்ளடக்கியது.

 


நிதி நெருக்கடிகளை வழிநடத்துதல்

      நிகழ்ச்சியன் ஒரு முக்கிய அங்கமாக, நிதி நெருக்கடிகளை வழிநடத்துவதில் உள்ள சிக்கல்களின் மூலம் பங்கேற்பாளர்களுக்கு வழிகாட்டுவதற்கு அர்ப்பணிக்கப்பட்டது. நிதி நெருக்கடிகளை  எதிர்கொள்ள நடைமுறை சாத்தியமான  மற்றும் எளிமையான வழிமுறைகள் கொண்ட செயல் திட்டத்துடன் கூடிய அணுகுமுறை பங்கேற்பாளர்களை பெரிதும் கவர்ந்தது.

 

இடர் மேலாண்மை உத்திகள் (Risk Management)

      திரு. சீனிவாசன் சுப்ரமணியன் நிதி திட்டமிடலில் இடர் மேலாண்மையின் முக்கிய பங்கை பற்றி வலியுறுத்தினார். 9-படி நிலையில் மிகவும் முக்கியமான ஒன்றாக  நிதி அபாயங்களைக் கண்டறிதல், மதிப்பீடு செய்தல் மற்றும் குறைத்தல், மேலும் பாதுகாப்பான நிதி எதிர்காலத்தை உறுதி செய்வது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

 


நிதி இலக்குகளுடன் உத்திகளை சீரமைத்தல்

     

      திரு. சீனிவாசன் சுப்ரமணியன் தனிப்பட்ட இலக்குகளுடன் நிதி உத்திகளை சீரமைப்பதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். நிதி திட்டமிடல் மூலம் பங்கேற்பாளர்களை அவர்களின் நிதி நோக்கங்களை வரையறுக்கவும் முன்னுரிமை செய்யவும் ஊக்குவித்தது. குறுகிய காலம், நடுத்தரக் காலம் மற்றும் நீண்ட கால நிதி இலக்குகளை தெரிவு செய்வதன் மூலம் எளிதில் நிதி இலக்குகளை அடைய முடியும் என்பதை தெளிவுபடுத்தினார்.

 

நிதி ஆரோக்கியத்தை அளவிடுதல்

      ஒருவரின் நிதி ஆரோக்கியத்தை மதிப்பிடுவதற்கான தகவல்களை இந்த நிகழ்வு  சுட்டிக்காட்டியது. பங்கேற்பாளர்கள் தங்கள் தற்போதைய நிதி நிலையை மதிப்பிடவும், முன்னேற்றத்திற்கான பகுதிகளை அடையாளம் காணவும், நிலையான நிதி வளர்ச்சிக்கான யதார்த்தமான இலக்குகளை அமைக்கவும் கற்றுக்கொண்டனர்.

 

நிலையான நிதி நிலையை ஏற்படுவது.

      உடனடி ஆதாயங்களுக்கு அப்பால், நிலையான மற்றும் நீடித்த  நிதி நிலையை   மேம்படுத்துவதை  இலக்காகக் கொண்ட இந்த பயிலரங்கம் பங்கேற்பாளர்களை நீண்டகால நிதி வெற்றியை நோக்கிய மனநிலை மாற்றத்தை ஊக்குவித்தது. மேலும் ,  நிலையான முயற்சி மற்றும் தகவமைப்புத் தன்மையின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியது. 

 

விருந்தினர் உரை.

 

தலைமை விருந்தினர், நாணயம் விகடனின் நிர்வாக ஆசிரியர் திரு. சி.சரவணன் (https://www.vikatan.com/author/960-saravanan-c), நிதி விஷயங்களில் தனது கருத்துக்களை  பகிர்ந்துகொண்டு, ஓர் அனுபவமிக்க நிபுணரின் கூடுதல் கண்ணோட்டத்துடன் பயிலரங்கை  வளப்படுத்தியதன் மூலம் மதிப்புமிக்க நிகழ்வாக மாற்றினார்.

 

விரிவான சந்தைக் கண்ணோட்டம்

      ஃபிராங்க்ளின் டெம்பிள்டன் மியூச்சுவல் ஃபண்டின் சென்னை கிளை மேலாளர் இந்தியப் பங்குச் சந்தைக் குறித்த தனது கண்ணோட்டத்தைப்  வழங்கியதன்  மூலம் அமர்வு முடிவடைந்தது. இது  பங்கேற்பாளர்களுக்கு பரந்த நிதி சந்தை பற்றிய நடைமுறை புரிதலை வழங்கியது.

 

கற்றல் அனுபவம் மூலம் உடனடியாக செயலில் நடைமுறைபடுத்தும் நோக்குடன் வடிவமைக்கப்பட்ட இந்த அமர்வு, ஈடுபாட்டுடன் கூடிய விவாதங்கள் மற்றும் கேள்வி பதில் பகுதிக்கு உதவியது. திரு. சீனிவாசன் சுப்ரமணியன், 9-படி நிலை பயன்பாட்டை விளக்குவதற்கு தினசரி வாழ்வில் ஏற்படும் எடுத்துக்காட்டுகள் மற்றும் ஆய்வுகளை உள்ளடக்கிய ஒரு நடைமுறை அணுகுமுறையை அளித்துள்ளார். சிக்கலான நிதிக் கருத்துகளை பார்வையாளர்களுக்கு எளிதில் அணுகும்படி செய்துள்ளார்.


 Ducatz FinServ மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் போரூர் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சி  பங்கேற்பாளர்களை 2024-ல் மட்டுமில்லாமல் எதிர்வரும் வருடங்களிலும், தங்கள் நிதி இலக்குகளை எளிதில் அடையவும், தினசரி வாழ்வில் மன நிறைவான வாழ்வை வாழ பெரிதும் உதவி உள்ளது எனலாம்.

இது போன்ற கூட்டங்களை பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள், சங்கங்களில் இலவசமாக நடத்த திரு. சீனிவாசன் சுப்ரமணியன் தொடர்பு கொள்ளவும்.

ஸ்ரீனிவாசன் சுப்ரமணியன்,

தனிநபர் நிதியியல் நிபுணர்,  www.ducatz.in 

Mr. Srinivasan S.,

Financial Planner.,

Ducatz FinServ,

1st Floor, AMSV Complex,

38G-91G, Burkit Road,

T Nagar, Chennai -17.

Mob: +91-995-260-4444

Email id: srinivasan@iwealth360.in

WebSite: www.ducatz.in 

தனிநபர் நிதி மேலாண்மை இதழான நாணயம் விகடனில் இவர் எழுதி வரும் கட்டுரைகளை படிக்க https://www.vikatan.com/author/sriinnnivaacnnn-cuprmnniynnn
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அனைத்து நிதித் தேவைகளுக்கும் ஏற்ற மியூச்சுவல் ஃபண்டுகள் Mutual Fund

நாணயம் விகடன் & மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து `இலக்கு அடிப்படையிலான மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு' என்ற நிகழ்ச்சியை வேலூரில...