மொத்தப் பக்கக்காட்சிகள்

இந்தியா முழுவதும் தனது செயலிருப்பை பரவலாக்கும் பிஎன்சி மேட்டார்ஸ் BNC

இந்தியா முழுவதும் தனது செயலிருப்பை பரவலாக்கும் பிஎன்சி மேட்டார்ஸ்; குறிப்பாக வட இந்திய சந்தைகளை வலுவாக்குகிறது!

 

~ 2024 இறுதிக்குள் இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் 88 டீலர்ஷிப் அவுட்லெட்டுகள்!

~ இந்த காலண்டர் ஆண்டில் நாடு முழுவதும் 1500-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள்!

 

சென்னை,  ஜனவரி 24, 2024:: மின்சார வாகன (EV) பைக் துறையில் முன்னணியில் இருக்கும் BNC மோட்டார்ஸ், தனது தேசிய வளர்ச்சியை விரைவுபடுத்தும் வகையில் ஒரு செயல்திட்ட விரிவாக்கத்துடன் இந்தியாவில் உள்ள 300 டீலர்ஷிப் நெட்வொர்க்குகளை அதன் தற்போதைய 10 அவுட்லெட்டுகளுடன் சேர்க்கும் அதன் திட்டங்களை இன்று அறிவித்தது. இந்த காலண்டர் ஆண்டின் இறுதிக்குள் இந்த விரிவாக்கத் திட்டத்தைச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ள BNC, இந்தியாவின் வடக்குப் பகுதியில், முக்கியமாக டெல்லி-NCR, உத்தரப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்களில் கிட்டத்தட்ட 90 புதிய விற்பனை நிலையங்களைத் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அறிவித்தது. இந்த குறிப்பிடத்தக்க நடவடிக்கையானது, நிலையான போக்குவரத்து தீர்வுகளுக்கான நிறுவனத்தின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது மற்றும் நாட்டில் அதிகரித்து வரும் மின்சாரத்தால் இயக்கப்படும் வாகனங்களின் தேவைக்கான அதன் பதிலளிப்பையும் குறிக்கிறது.

 

இந்திய மின்சார வாகன சந்தையில் BNC மோட்டாரின் தலைமையை வலுப்படுத்துவதில் இந்த விரிவாக்கத் திட்டம் முக்கியப் பங்கு வகிக்கும் மற்றும் குறிப்பிட்ட பிராந்தியங்களில் உள்ள மக்களுக்கு 1500-க்கும் மேற்பட்ட புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும். 2019-இல் நிறுவப்பட்ட, BNC மோட்டார்ஸ், எலெக்ட்ரிக் வாகன பைக் துறையில் முன்னணியில் இருந்து வருகிறது, தொடர்ந்து புதுமையான முயற்சிகளைச் செய்து வருகிறது. இந்த நிறுவனம் 2023-ஆம் ஆண்டில் Challenger S110 பைக் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட Etrol பேட்டரியை அறிமுகப்படுத்தியதால், அது ஒரு மைல்கல் ஆண்டாகத் திகழ்ந்தது. அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்து அதன் சிறப்பான பயணத்தை நிலைநிறுத்தும் நோக்கத்துடன், நிறுவனம் இந்த காலண்டர் ஆண்டில் தீவிரமான விரிவாக்கத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

 

இந்த வளர்ச்சி குறித்து கருத்து தெரிவித்த BNC மோட்டார்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. அனிருத் ரவி நாராயணன் பேசுகையில், "நமது நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் புதுமையான, உள்நாடு சார்ந்த மின்சார வாகன இயக்கத் தீர்வுகளை வழங்குவதில் BNC மோட்டார்ஸ் உறுதிபூண்டுள்ளது. BNC தரத்தை அனுபவிக்க விரும்பும் வாடிக்கையாளர்களிடமிருந்து அதிகரித்து வரும் தேவை மற்றும் விசாரிப்புகளின் காரணமாகவே வட இந்தியாவில் விரிவாக்கம் செய்வதில் நாங்கள் அதிக கவனம் செலுத்துகிறோம். தென் மாநிலங்களில் ஆறு மாதங்கள் விரிவாக கவனம் செலுத்தப்பட்ட முயற்சிகளுக்குப் பிறகு, எங்கள் இருப்பை வலுப்படுத்துவதிலும், எங்கள் தயாரிப்புகளை நாடு முழுவதும் உள்ள ஆர்வலர்களுக்கு நெருக்கமாக கொண்டு செல்வதிலும் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்." என்று தெரிவித்தார்.

 

2024-ஆம் ஆண்டில், பெர்ஃபெட்டோ ஸ்கூட்டர் மற்றும் Boss NR150 பைக் ஆகிய 2 கூடுதல் தயாரிப்புகளை அறிமுகப்படுத்த நிறுவனம் தயாராகி வருகிறது. சேலஞ்சர் S110-இல் முதல் 10 டீலர்ஷிப்களின் வாயிலாக மிகப்பெரிய வாடிக்கையாளர் திருப்தியுடன், BNC ஆனது EV துறையில் சிறந்து விளங்குவதற்கானதோர் அடையாளமாக மாறியுள்ளது. வட இந்தியாவுக்கான இந்த விரிவாக்க செயல்திட்டம், நிலையான மற்றும் புதுமையான இயக்கத் தீர்வுகளை பரந்த பார்வையாளர்களுக்கு கிடைக்கக்கூடியதாக மாற்றும் BNC மோட்டார்ஸின் பணியுடன் ஒத்துப்போகிறது.

 

About BNC Motors Pvt Ltd: BNC Motors is on a mission to drive the world towards sustainable energy. The first phase of this mission is centred on electric 2-wheelers. Our goal is to ensure that customers embrace clean energy 2-wheelers on a massive scale. To achieve this, we design vehicles that not only match but exceed their internal combustion engine (ICE) counterparts in every aspect: superior performance, better value, longer lifespan, ease of maintenance, enhanced driving experience, convenient refuelling, and exceptional intelligence. Our aim is to eliminate any reservations customers may have about using electric vehicles. Join us as we Charge Ahead and make the switch to a cleaner, brighter, and more sustainable future.

 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

உடனடி கடன் = வாழ்நாள் முழுவதும் தொல்லை? Instant Loan

உடனடி கடன் = வாழ்நாள் முழுவதும் தொல்லை? எந்த ஒரு ஆவணமோ அல்லது கிரெடிட் சரிபார்த்தல் இல்லாமல் பெறும் கடன்கள் உங்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத...