2024 ஜனவரி - மார்ச் காலாண்டுக்கான சிறு சேமிப்பு வட்டி விகிதம் பற்றிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது.
3 மூன்று ஆண்டு டைம் டெபாசிட், செல்வமகள் சேமிப்புத் திட்டம் ஆகிய இரண்டு சிறு சேமிப்புத் திட்டங்களுக்கும் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது
3 ஆண்டு டைம் டெபாசிட் திட்டத்துக்கான வட்டி 7.10 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. செல்வமகள் சேமிப்புத் திட்டத்துக்கான வட்டி 8.20 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை.
சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம்: 2024 ஜனவரி - மார்ச்
சேமிப்பு கணக்கு : 4%
1 ஆண்டு டைம் டெபாசிட் : 6.9%
2 ஆண்டு டைம் டெபாசிட் : 7%
3 ஆண்டு டைம் டெபாசிட் : 7.1%
5 ஆண்டு டைம் டெபாசிட் : 7.5%
5 ஆண்டு தொடர் வைப்பு நிதி (RD) : 6.7%
சீனியர் சிட்டிசன் சேமிப்புத் திட்டம் : 8.2%
மாத வருமானத் திட்டம் : 7.4%
தேசிய சேமிப்பு சான்றிதழ் : 7.7%
பொது வருங்கால வைப்பு நிதி (PPF) : 7.1%
கிசான் விகாஸ் பத்திரம் (115 மாதங்கள்) : 7.5%
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக