நாடார் சமுதாயத்தவருக்கு ஆலயப்பிரவேசம் மறுக்கப்பட்டது உண்மையா?
நாடார் சமுதாயத்தவருக்கு ஆலய பிரவேச உரிமை மறுக்கப்பட்டதாகவும் அவர்களுக்கு ஆலய பிரவேசம் செய்ய அருகதை இல்லாமலிருந்தது என்பது போன்றும் பல கதைகள் உதவி வருகின்றன.
அதில் வழக்குகள் ஏற்பட்டு லண்டனில் உள்ள உச்ச நீதிமன்றம் அதை பிரைவி கவுன்சில் என்று சொல்வார்கள் அளவிற்கு வழக்கு எடுத்துச் செல்லப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது .
அதில் நாடார்களுக்கு ஆலய பிரவேசம் செய்யும் உரிமை கிடையாது என்று கூறப்பட்டதா என்பது பற்றி காண்போம்.
நாடார்கள் ஆலயப்பிரவேசம் செய்வது குறித்த வழக்குகள் 1872 ஆம் ஆண்டு முதலே பல்வேறு நீதிமன்றங்களில் கொடுக்கப்பட்டு கொண்டிருந்தன.
இதில் முக்கியமான வழக்கு 1897 ஆம் ஆண்டு தொடுக்கப்பட்ட கமுதி ஆலய பிரவேச வழக்கு ஆகும் அவ்வாண்டு மே மாதம் 14ஆம் நாள் கமுதியில் உள்ள நாடார்கள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் நுழைந்து வழிபட்டனர்.
இதனை எதிர்த்து கோவில் அறங்காவலர் சேதுபதி மதுரை கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் அதில் கூறப்பட்ட பொருண்மைகள் மூன்று
1)இந்த சமுதாயத்தினர் போதை தரும் பனை தென்னையில் கள் இறக்கி வாழ்க்கை நடத்துவதால் ஆகம விதிப்படி அவர்கள் ஆலய பிரவேசத்திற்கு அருகதை அற்றவர்கள் என்பது வழக்கு.
இதில் சிதம்பரம் தில்லை தீட்சிதர்கள் உட்பட பலர் சாட்சியம் அளித்தனர் மதுரைக்கு வடக்கே கோவில்களில் நாடார்கள் மற்ற சமூகத்தினரை போல வழிபாட்டு உரிமை பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது அதைவிட கள் இறக்கும் தொழிலை முதன்மையாக மேற்கொண்டுள்ள பொறையார் நாடார் குடும்பத்தினர் கும்பகோணம் ஆலயத்தில் அறங்காவலராக உள்ளனர் என்பதும் தெரிவிக்கப்பட்டது.
.
இவற்றை கேட்ட கீழமை நீதிபதி சதாசிவ ஐயர் மூன்று காரணங்களால் நாடார்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கினார்
1)ஆகம விதிப்படி நாடார்கள் கள் இறக்கும் தொழில் உடையவர்கள் ஆனதால் கோவில் தீட்டுப்படும்
2)நாடார்கள் பரம்பரையாக குலதெய்வ வழக்கமே உடையவர்கள் கமுதியில் அவர்களுக்கென்று தனியாக முருகன் கோவில் பத்திரகாளியம்மன் கோயில் உள்ளது அதில் அவர்கள் வழிபாடு செய்ய தடை இல்லை.
3)மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் சேதுபதியின் ராமநாதபுரம் ஜமீன் ஆளுகைக்கு உட்பட்டது அவரே அறங்காவலர் அதனால் எவரை அனுமதிக்க வேண்டும் எவரை அனுமதிக்க கூடாது என்று தீர்மானிக்க சேதுபதி அறங்காவலருக்கு உரிமை உண்டு ஆகவே நாடார்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கினார்.
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அதில் சங்கரலிங்க நாடார் வாதியாகவும் ராமநாதபுரம் சேதுபதி எதிர்வாதியாகவும் இருந்தனர் இதை உயர் நீதிமன்ற நீதியரசர் பென்ஸன் நீதியரசர் கே கே மூர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து முதலாவது கேள்வியை நாடார்களுக்கு சாதகமாக கூறினார்கள்.
அதாவது ஆகமங்கள் காலகாலமாக மாறுபட்டு வந்திருக்கின்றன வேதங்களிலேயே போதையூட்டும் சோம பானம் அந்தணர்களால் அருந்தப்பட்டுள்ளது.
சோமபானத்தை அருந்தியதால் சோமசுந்தரர் என்று கடவுளே அழைக்கப்படுகிறார் எனவே போதையூட்டும் கள்ளை இறக்குபவர்கள் என்ற காரணத்தால் ஆலய நுழைவை தடுக்க முடியாது.
ஆனால் இரண்டாவது மூன்றாவது காரணங்கள் நாடார்களுக்கான தனி கோயில்கள் உள்ளன மேலும் ஆலய அறங்காவலரான சேதுபதி விரும்பாத வரை அவருடைய அறங்காவலுக்கு உட்பட்ட கோவிலுக்குள் வேறு யாரும் நுழைய உரிமை இல்லை.
எனவே நாடார்களின் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதை எதிர்த்து நாடார்கள் 1908 ஆம் ஆண்டு லண்டன் பிரைவி கவுன்சிலுக்கு மேல்முறையீடு செய்தனர் இதை விசாரித்த பிரபு சான்சலர் ஹால்ஸ்பரி மற்றும் பிரபு சான்ஸலர் ஹால்டேன் ஆகிய இரண்டு நீதி அரசர்கள் உயர் நீதிமன்றத்தின் இரண்டாவது மூன்றாவது காரணங்களை ஒப்புக்கொண்டனர் அதேபோல் விக்டோரியா மகாராணி 1858 ஆம் ஆண்டு இந்திய நிர்வாகத்தை கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து எடுத்துக் கொண்ட போது வெளியிட்ட அறிக்கையில் இந்தியர்களின் மத நம்பிக்கையில் தலையிட மாட்டோம் என்று குறிப்பிட்டதை சுட்டிக்காட்டி உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தார்கள்.
எனவே நாடார்களுக்கு கோவில் நுழையும் உரிமை மறுக்கப்படவில்லை என்பதே உண்மை அதாவது கள் இறக்குவதன் காரணமாக நாடார்கள் கோவிலுக்கு செல்ல முடியாது என்ற வாதம் உயர்நீதிமன்றத்தாலும் பிரைவி கவுன்சிலாலும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.
இரண்டாவது காரணமாக நாடார்களுக்கு சொந்த ஆலயங்கள் இருப்பதால் அவர்கள் அங்கே பிரவேசம் செய்ய தடை இல்லை என்றும் மூன்றாவது முக்கிய காரணமாக ராமநாதபுரம் சேதுபதி என்ற மறவர் தலைவர் அன்றைய சாதிச் சூழலில் நாடார்களுக்கு எதிராக எடுத்த கொள்கை முடிவு அதாவது அறங்காவலர் என்ற முறையில் நாடார்களுக்கு கோவில் நுழைவு உரிமை தடை செய்த ஒரே காரணம் மட்டுமே பிரதானமாக மேற்கொள்ளப்பட்டு நாடார்களுக்கு எதிரான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதே தவிர நாடார்கள் கோவிலுக்குள் நுழையும் உரிமை மறுக்கப்பட்டதாக கூறுவது முழு பொய்யாகும்..
இதே சேதுபதி மரபில் வந்த பிற்கால ராமநாதபுரம் சேதுபதி பொறையாரில் ராவ் பகதூர் ரத்தினசாமி நாடார் துவக்கி வைத்த நாடார் மகாஜன சங்க துவக்க விழாவில் தலைமையேற்று கலந்து கொண்டதையும் பின்னர் விருதுநகர் சத்திரிய பெண்கள் உயர்நிலைப் பள்ளியினை துவக்கி வைத்த போது சகோதர தமிழர் சமுதாயமாகிய நம்மவர் இடையே நாடார்களின் வளர்ச்சியை கண்டு பொறாமை கொள்ளக் கூடாது என்றும் அவர்களுடன் சேர்ந்து நாமும் வளர்ச்சி அடைய முயற்சிக்க வேண்டும் என்று தனது சக சமுதாயத்தினருக்கு அறிவுரை கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது
ஆ ஆறுமுக நயினார், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக