*மனநிறைவு என்பது நம்மிடம் இயல்பாகவே உள்ள செல்வம். ஆடம்பரம் என்பது நாமே தேடிக்கொள்ளும் வறுமை.*
*நட்பு என்பது வெறும் வார்த்தை அல்ல, உணர்வோடும் உறவோடும் நம் வாழ்வில் நுழையும் ஒரு பொக்கிஷம்.*
*நாம் சந்திக்கும் ஒவ்வொருவருமே தங்கள் சொந்த பிரச்சினைகளோடு போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். நாம் பிறரை பார்க்கும்போது நன்றாக தானே இருக்கிறார்கள் என்று எண்ணுகிறோம், அப்படி அல்ல எல்லோருடைய வாழ்க்கையிலும் பிரச்சினைகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.*
*பொய்யைச் சொல்லாதீர், நீங்கள் தான் அதனை காப்பாற்ற வேண்டும். உண்மையைச் சொல்லுங்கள். அது உங்களை காப்பாற்றும்.*
*துர்மதி படைத்தவரின் கல்வி விவாதங்களுக்கும், செல்வம் அகந்தைக்கும், சக்தி பிறரைத் துன்புறுத்தவுமே பயன்படுகிறது. நன்மதி படைத்தவருக்கோ அவர் கல்வி நல்வழிப்படுத்தவும், செல்வம் கொடைக்கும், சக்தி நலிந்தவரைக் காக்கவும் பயன்படுகிறது.*
*நெருங்கியவர்களுடன் கலந்துரையாடுவது மன அழுத்தத்தை குறைக்க ஒரு சிறந்த வழி முறையாகும். உறவினர்களையும் நண்பர்களையும் சந்திக்க நேரம் ஒதுக்குங்கள்.*
*கடவுள் தந்த அருமையான பரிசு வாழ்க்கை. அதனை ஒவ்வொரு நிமிடமும் அன்புடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து காட்டுவோம்.*
*நிகழ்காலத்தில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால் கடந்த காலத்தின் பாதிப்புகளை மறந்து விடுங்கள். எதிர்காலத்தைப்பற்றிய பயத்தினை விட்டுவிடுங்கள்.*
*எப்பொழுதும் எல்லோருடனும் நல்ல செயல்களைச் செய்வதன் மூலம் மனம் தூய்மை அடையும். கெட்ட எண்ணங்கள் இல்லாத தூய்மையான மனமே கோயில்.*
*#வாழ்த்துகள்.*
*#வாழ்க_வளத்துடன்.*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக