கோட்டக் மஹிந்திரா லைஃப் இன்ஷூரன்ஸ் டூலீப் பாலிசி Kotak T.U.L.I.P
கோட்டக் மஹிந்திரா லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனம், பங்குச் சந்தை சார்ந்த காப்பீட்டுத் திட்டமான யூலிப் (ULIP) மற்றும் டேர்ம் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி (Term Life Insurance) ஆகிய இரண்டும் கலந்த புதிய திட்டத்தை என்கிற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
பொதுவாக, டேர்ம் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் கூடுதல் ஆயுள் கவரேஜ் கிடைக்கும். அதன்படி இந்தத் திட்டத்தில் அதிகபட்சமாக செலுத்தும் ஆண்டு பிரீமியத்தை போல் 100 மடங்கு என்ற அளவுக்கு கவரேஜ் கிடைக்கும். ஆனால் டேர்ம் இன்சூரன்ஸ் திட்டத்தில் பாலிசிதாரருக்கு பாலிசி காலத்தில் அசம்பாவிதம் ஏதும் நேராதபட்சத்தில் பணம் திரும்ப கிடைக்காது. அதற்கு மாறாக இந்த பாலிசியில் யூலிப் போல வருமானம் கிடைக்கும்.
பிரீமியம் செலுத்திய 10 ஆண்டுகளுக்குப் பிறகு குறிப்பிட்ட அளவு பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ள முடியும்.
ஆனால், இந்த பாலிசி உண்மையில் பாலிசிதாரர்களுக்கு லாபமா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். காரணம், பிரீமியம் மிக அதிகமாகும்.
https://www.kotaklife.com/tulip/ இணைய தள விவரப்படி, எடுத்த உடனே இந்த பாலிசி மூலமான இழப்பு பாலிசிதாரரை மட்டுமே சேரும் (IN THIS POLICY, THE INVESTMENT RISK IN INVESTMENT PORTFOLIO IS BORNE BY THE POLICYHOLDER) என்கிற வாசகத்துடன் ஆரம்பிக்கிறது.
35 வயதான ஒருவர் 40 ஆண்டு கால பாலிசியை ரூ.1 கோடி ஆயுள் காப்பீடு எடுக்கிறார். அவருக்கு கூடுதலாக விபத்து மூலமான இறப்புக்கு (Accidental Death) ரூ.50 லட்சம், தீவிர நோய் (Critcal Illness) பாதிப்புக்கு ரூ.5 லட்சம் கவரேஜ் இருக்கிறது.
ஆண்டுக்கு ரூ.1.25 லட்சம் வீதம் 10 ஆண்டுகளுக்கு பிரீமியம் கட்ட வேண்டும். அப்படி கட்டும்பட்சத்தில் முதல் 10 ஆண்டுகளில் கட்டப்படும் பிரீமியம் ரூ.12.5 லட்சம் ஆகும்.
ஃபண்ட் மதிப்பு என்பது
@8%- ரூ.1,06,70,985
@4% - ரூ.19,30,275
என இரண்டு விதமாக கொடுக்கப்பட்டுள்ளது.
4% கிடைத்தால் இன்றைக்கு 40 ஆண்டுகள் கழித்து கிடைக்கும் ரூ.20 லட்சம் என்பது பெரிய தொகையை கிடையாது.
மேலும் ஒருவர் ஆண்டுக்கு ரூ.1.25 லட்சம் அதாவது மாதம் ரூ. 10,415 பிரீமியம் கட்ட வேண்டும் என்பது மிக அதிக தொகையாகும்.
டேர்ம் பிளான் மட்டும் எடுக்கும்பட்சத்தில் 35 வயதான ஒருவர் ரூ.1 கோடிக்கு பாலிசி எடுத்தால் அதிகபட்ச ஆண்டு பிரீமியம் ரூ.25,000 கூட இருக்காது. மீதி ரூ.1 லட்சம் வீதம் 10 ஆண்டுகளுக்கு முதலீடு செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை அடுத்து வரும் ஆண்டுகளுக்கு தாராளமாக பிரீமியம் கட்ட முடிவதோடு 40 ஆண்டு முடிவில் கோடிக் கணக்கான தொகை சேர்ந்திருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக