கால்வாய் வெட்டப்பட வேண்டிய இடங்கள் பிங்க் வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளன வேளச்சேரி கிராமம் மஞ்சள் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது.
இதில் வேளச்சேரி ஏரியிலிருந்து நேராக பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை ஆகியவற்றிற்கு குறுக்காக ஆழமான கால்வாய் கடற்கரை நோக்கி ஒன்று அமைக்கப்பட வேண்டும்.
இரண்டாவதாக ஒரு கால்வாய் விஜிபிக்கு சற்று மேலே கிழக்கு கடற்கரை சாலைக்கு குறுக்காக அமைக்கப்பட்டு கடலுடன் இணைக்கப்பட வேண்டும்.
மூன்றாவதாக ஒரு கால்வாய் நாவலூர் அருகே கடல் கடற்கரைக்கு மிகவும் அருகில் உள்ளது கால்வாய் குறுகிய தூரத்தில் வெட்டப்பட்டு கிழக்கு கடற்கரை சாலைக்கு குறுக்காக கடலுடன் இணைக்கப்பட வேண்டும்.
இப்படி இணைக்கப்பட்டால் மட்டுமே சென்னை அடுத்த வெள்ளத்தில் இருந்து தப்பும் வெள்ள நீர் சென்னையில் தங்குவது தடுக்கப்பட்டு கடலுக்குள் வடிந்துவிடும்
வடியாத சூழ்நிலை ஏற்பட்டால் ராட்சச பம்புகளை அமைத்து அதை வெளியேற்றலாம் இந்த கால்வாய் பக்கிங்காம் கால்வாயை குறுக்காக வெட்டும் இடங்களில் மதகுகள் அமைக்கப்பட வேண்டும்.
மதகுகள் வழியாக வெள்ளநீர் நேரடியாக கடலுக்குள் செல்வது போலவும் பெரு வெள்ள காலங்களில்பக்கிங்கான் கால்வாய் நீரானது ஏரிகளில் வெளியேறும் நீருடன் சேர்ந்து நேரடியாக இந்த கால்வாய் வழியாக கடலுக்குள் செல்வது போலவும் அமைக்கப்படலாம்
வீடியோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக