மொத்தப் பக்கக்காட்சிகள்

அன்று குறைந்த வருமானம்.. நிறைந்த நிம்மதி.. இன்று நிறைந்த வருமானம்.. குறைந்த நிம்மதி .. Life

*அன்று* 
வீடு நிறைய குழந்தைகள் 
*இன்று* 
வீட்டுக்கொரு குழந்தை 

*அன்று* 
பெரியவர் சொல்லி பிள்ளைகள் கேட்டனர்
*இன்று* 
சிறியவர் சொல்ல பெரியவர் முழிக்கிறார்கள்

*அன்று* 
குறைந்த வருமானம்
நிறைந்த நிம்மதி 
*இன்று*
நிறைந்த வருமானம்
குறைந்த நிம்மதி 

*அன்று*
படித்தால் வேலை
*இன்று* 
படிப்பதே வேலை

*அன்று* 
வீடு நிறைய உறவுகள்
*இன்று* 
உறவுகள் அற்ற வீடுகள்.

*அன்று*  
உணவே மருந்து
*இன்று*
மருந்தே உணவு

*அன்று*
முதுமையிலும் துள்ளல்
*இன்று*
இளமையிலேயே அல்லல்

*அன்று* 
உதவிக்கு தொழில் நுட்பம்
*இன்று*
தொழில் நுட்பமே உதவி

*அன்று* 
யோக வாழ்க்கை
*இன்று*
எந்திர வாழ்க்கை 

*அன்று*
தியாகம் நாட்டை காப்பாற்றியது
*இன்று*
துரோகம் நாட்டை கூறுபோடுகிறது

*அன்று* 
படங்களில் பாடல் கருத்தானது. 
*இன்று*
கருத்தே இல்லாத பாடலானது

*அன்று*  
ஓடினோம் வயிற்றை நிறைக்க 
*இன்று* 
ஓடுகின்றோம் வயிற்றை குறைக்க

*அன்று*
பெரியோர்கள் பாதையில்
*இன்று* 
இளைஞர்கள் போதையில் 

*அன்று*  
ஒரே புரட்சி 
*இன்று* 
ஒரே வறட்சி

*அன்று* 
வளச்சிப்பாதையில் இளைஞர்கள்.
*இன்று*
போதையின் பிடியில் இளைஞர்கள்.

*அன்று* 
ஊரே கூட கோலாகல விழா
*இன்று*
ஊருக்கே போக முடியாத மூடுவிழா 

*அன்று*
கைவீசி நடந்தோம்
*இன்று*
கைப்பேசியுடன் நடக்கிறோம்

*அன்று* 
விளைச்சல் நிலம்
*இன்று*
விலை போன நிலம்

*அன்று*
தொட முடியாத உச்சத்தில் காதல்
*இன்று*
தொட்டு முடியும் எச்சம் காதல்

*அன்று* 
கோடை விடுமுறையில் உறவுகளிடம் தஞ்சம்
*இன்று*
கோடை விடுமுறையில் உறவுகளிடம் அச்சம்.

*அன்று* நல்லவர்கள் நாட்டை காப்பாற்றி ஆண்டார்கள்
நிறைந்தது மகிழ்ச்சி
*இன்று*
 தீயவர்கள் நாட்டை விற்று பிழைப்பு நடத்துகிறார்கள் மகிழ்வை தேடி அலைகிறோம் 
 
*அன்று*
வாழ்ந்தது  வாழ்க்கை
*இன்று* 
ஏதோ வாழ்கிறோம் வாழ்க்கை!

இது தமிழ் குடிகளின் தாகம்
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தரம் மற்றும் பாதுகாப்பிற்காக நீங்கள் செல்ல வேண்டிய செயலி BIS

தரம் மற்றும் பாதுகாப்பிற்காக நீங்கள் செல்ல வேண்டிய செயலி 8 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்கள் மற்றும் வளர்ச்சி. நீங்கள் பதிவிறக்கம் செய்...