மொத்தப் பக்கக்காட்சிகள்

பெரும்பாலும் நாம் காணும் திரைப்படங்கள் நம்மை பெரிதும் பாதிப்பதில்லை இறுகப்பற்று Cinema

பெரும்பாலும் நாம் காணும் திரைப்படங்கள் நம்மை பெரிதும் பாதிப்பதில்லை. அத்திபூத்தாற்போல ஒரு சில திரைப்படங்கள் நம் வாழ்க்கையையும் வாழ்வியலையையும் பிரதிபலிக்கையில்  நம்மையுமறியாமல் அந்த திரைப்படத்தோடு இணக்கமாகி விடுகிறோம். அதுபோன்ற மனதிற்கு நெருக்கமான ஒரு பீல்குட் மூவி தான் இறுகப்பற்று !! 

தம்பதிகளுக்குள் நடக்கும் உணர்வு போராட்டங்களை சினிமாத்தனமில்லாமல் சினிமாவாக எடுத்திருக்கிறார் இயக்குனர். காட்சியமைப்பும் கதாபாத்திர தேர்வும்  பெரிய ப்ளஸ்... 

விக்ரம் பிரபு - ஷ்ரத்தா , விதார்த் - அபர்ணதி, ஸ்ரீ - சானியா அய்யப்பன் என மூன்று ஜோடிகள் !! பொருத்தமான தேர்வு .. சானியா அய்யப்பன் பார்ப்பதற்கு நடிகை சங்கீதா போலிருக்கிறார்... 

ஒரு திரைப்படத்தின் பெரிய பலம் அதன் உணர்வுபூர்வமான வசனங்கள் தான்.. ஒன்றிடிரண்டு வசனங்கள் நன்றாகயிருந்தாலே கொண்டாடப்படும் நிலையில் இந்த படத்தில் நிறைய வசனங்கள் மனதை வருடி கொடுத்து உண்மை நிலையை பளிச்சென்று வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது... 

"தங்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகளை ஊதி பெரித்தாக்காமல் எவ்வாறு கையாள வேண்டுமென்று தெரிந்தவர்கள் தான் அருமையான தம்பதியினர் !!! "

துணையின் கண்ணோடு கண் நோக்கி அமைதியாக அமர்ந்து பேசினாலே எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து விடுமே. பின்னர் எதுக்கு கவுன்சிலிங், விவாகரத்து எல்லாம்  !! 

"கணவன் மனைவி இரண்டு பேரும் சண்டை போடுவதற்கு தனியான காரணம் தேவையில்லை !! கணவன் மனைவியாக இருப்பதே பெரிய காரணம் " - அல்டிமேட் வசனம் 

ஆம் கணவன் மனைவிக்குள் சிறிய சிறிய சண்டை வரவேண்டும். அடிச்சிகணும்.. அப்புறம் அணைச்சிக்கணும் !! சிறிய சண்டைகள் காதலையும் ஊடலையும் அதிகரிக்கும் !!! 

" எப்போதெல்லாம் உங்களுக்கு கோவம் வருகிறதோ , அதற்கான காரணத்தை ஒரு பேப்பரில் எழுதி கசக்கி ஒரு மூலையில் வைத்து விடுங்கள்... சில மாதங்கள் கழித்து அதனை எடுத்து படிக்கையில் நமக்கே சிரிப்பு வரும் "- நல்ல யோசனை !! 

நாம் கோபப்பட்டு கக்கிவிடும் ஒரு வார்த்தை இணையரை எவ்வாறு காயப்படுத்தும் என்பதை யோசித்து பார்த்தால் போதும்.. நமக்கு கோபமே வராது. அதுவே நாம் பாராட்டும் சிறிய வார்த்தை கூட அவர்களுக்கு எத்தனை மகிழ்ச்சியை கொடுக்கிறது என புரிந்து விட்டால் வாழ்க்கை அழகாக மாறிவிடும் !!! 

" சாப்டாச்சானு மனைவி கேட்கும் ஒரு கேள்விக்கு பின்னே , சாப்பாடு எப்படி இருந்தது என்பதற்கான பதிலும் ,  பாராட்டிற்க்கான எதிர்பார்ப்பும் இருக்கிறது " - இதனை  செய்கிறோமா என நம்மை நாமே கேள்விக் கேட்டு கொள்ளவேண்டும் !! 

மனம் விட்டு பேசணும் , Admire பண்ணனும் , நமக்காக செய்யும் சின்ன சின்ன விசயங்களுக்கு Appriciate செய்யணும், தேவைப்படும் பொழுது Sorry சொல்லுங்கள், தேவையில்லாமல் Thanks சொல்லுங்கள், வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்ளுங்கள் !! வாழ்க்கை வரமாகும் !!! 

"லவ் பண்றதுக்கு எதுக்கு அறிவு தேவை ? யார் ஸ்மார்ட் , யார் முட்டாள் இதெல்லாம் தேவையேயில்லை. 100% லவ் தான் தேவை. "  உண்மையான வசனம் காதல் செய்ய காதல் மட்டுமிருந்தாலே போதும் !!! 

சுயமரியாதையும் பொஸசினசும் தான் நல்ல உறவின் அடிப்படை தகுதியே.. இணையரின் திறமை , அறிவு , காதல் மீது பொறாமை கொள்ளாமல் ஆனந்தம் கொண்டு அவர்களை அவர்களாகவே ஏற்றுக் கொண்டால் வாழும் நாட்கள் அனைத்தும் கொண்டாட்டம் தான்... 

எப்போதும் கேள்விகளாக இல்லாமல் அப்பப்போ பதிலாக இருக்க முயற்சி செய்யுங்கள். வாழ்க்கை உங்களோடு பேச முயற்சி செய்யும். மொத்தத்தில் லவ் பண்ணுங்க சார் !! வாழ்க்கை நல்லாயிருக்கும் !! 

இரைச்சல் சப்தம் தான் இசையென்று பீற்றிக்கொள்ளும் சமீபகாலத்தில் காதுகளை காயப்படுத்தாமல் காயங்களை குணப்படுத்தும் மருந்தாக இந்த படத்தின் மெல்லிசை இருக்கிறது. ஒவ்வொரு தம்பதியினருக்கும் வித்தியாசமான இசை.. அர்ஜூன் கோபப்படும் பொழுது பிண்ணனியில் இசைக்கும் அந்த இசையே கோபத்தின் கொடூரத்தை சொல்லுகிறது... ஜஸ்டின் பிரபாகர் யூ ர் ப்ளடி ஸ்வீட் மேன் !!!

இரத்தம் தெறிக்க தெறிக்க படம் எடுப்பது எளிது. ஆனால் இதுபோன்று உணர்வுகளும் உணர்ச்சிகளும் தெறிக்க தெறிக்க படமெடுப்பது கடினம்.. 

தனக்கு பிடித்த படிப்பு , தான் விரும்பிய வேலை , பிசினஸ் ஆசை என கிடைக்காததால் ஏற்படும் Fraustration எல்லாம் வீடுகளில் தான் கொண்டு கொட்டப்படும். விதார்த் உடைந்து பேசும் அந்த காட்சி நம்மில் பலரோடு ஒத்துப்போகும். அந்த காட்சியில் பேசுவது விதார்த் அல்ல.. பலருடைய மனசாட்சி !!! 

நம்முடைய வாழ்வை நாம் தான் வாழ வேண்டும். அதுபோல நம் பிரச்சனைகளை நாம் தான் பேசிதீர்க்க வேண்டும். கவுன்சிலிங் கொடுப்பவருக்கே ஒரு கட்டத்தில் கவுன்சிலிங் தேவைப்படுகிறது தானே !!! 

கணவன் மனைவி உறவை கையாள தெரியாமல் கவலையிலும் மனவேதனையிலும் சிக்கித் தவிப்பவர்கள் , காதலிப்பவர்கள், புதிதாக திருமணமானவர்கள் உட்பட அனைவருக்குமான படம் தான் இது. முடிந்த வரை இணையரோடு பாருங்கள். அவர்களின் கையை இறுகப்பற்றிக்கொண்டு கண்டிப்பாக ஒரு முறையாவது Sorry , Thanks சொல்லுவீர்கள்.... 

எங்கேயோ ஒரு மூலையில் கசங்கிய பேப்பராகவோ, டைரியாகவோ, போன் நோட்டாகவோ உங்கள் துணையர் முடங்கி கிடக்கலாம்.. அவர்களை கண்டறிந்து அதிலிருந்து வெளியே கொண்டு வாருங்கள் !!
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தரம் மற்றும் பாதுகாப்பிற்காக நீங்கள் செல்ல வேண்டிய செயலி BIS

தரம் மற்றும் பாதுகாப்பிற்காக நீங்கள் செல்ல வேண்டிய செயலி 8 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்கள் மற்றும் வளர்ச்சி. நீங்கள் பதிவிறக்கம் செய்...