மொத்தப் பக்கக்காட்சிகள்

A to Z இந்த 26 வார்த்தைகள்எவ்வளவு அழகு படியுங்கள் தெரியும்.

*இந்த 26 வார்த்தைகள்*

*எவ்வளவு அழகு படியுங்கள்......, தெரியும்.........*

*A - Appreciation*  
*மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்.*

*B - Behaviour*  
*புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்*

*C - Compromise*  
*அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள். மனம் திறந்து பேசி சுமுகமாக தீர்த்துக்கொள்ளுங்கள்.*

*D - Depression*  
*மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள்.*

*E - Ego*  
*மற்றவர்களை விட உங்களை உயர்வாக நினைத்துக் கொண்டு கர்வப்படாதீர்கள்.*

*F - Forgive*  
*கண்டிக்கக்கூடிய அதிகாரமும் நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும், எதிர்த் தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள்.*

*G - Genuineness*  
*எந்த விஷயத்தையும் நேர்மையாகக் கையாளுங்கள்.*

*H - Honesty*  
*தவறு செய்தால் உடனே மன்னிப்பு கேட்பதைக் கெளரவமாகக் கருதுங்கள்.*

*I - Inferiority Complex*  
*எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள். நான் ஏன் இப்படி இருக்கிறேன்?என்ற தாழ்வு மனப்பான்மையை விடுங்கள்.*

*J - Jealousy*  
*பொறாமை வேண்டவே வேண்டாம். அது கொண்டவனையே கொல்லும்.*

*K - Kindness*  
*இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.*

*L - Loose Talk*  
*சம்பந்தமில்லாமலும், அர்த்தமில்லாமலும், பின் விளைவு அறியாமலும் பேச வேண்டாம்.*

*M - Misunderstanding*  
*மற்றவர்களைத் தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்.*

*N - Neutral*  
*எப்போதும் எந்த விஷயத்தையும், முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம். பேசிவிட்டு முடிவு எடுங்கள். நடுநிலை தவறாதீர்கள்.*

*O - Over Expectation*  
*அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பு வைக்காதீர்கள். தேவைக்கு அதிகமாக ஆசைப்படாதீர்கள்.*

*P - Patience*  
*சில சங்கடங்களை சகித்துத்தான் ஆகவேண்டும் என உணருங்கள்.*

*Q - Quietness*  
*தெரிந்ததை மாத்திரமே பேசுங்கள். அநேகப் பிரச்னைகளுக்குக் காரணம், தெரியாததைப் பேசுவதுதான். கூடுமானவரை பேசாமலே இருந்துவிடுங்கள்.*

*R - Roughness*  
*பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டாதீர்கள்.*

*S - Stubbornness*  
*சொன்னதே சரி, செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்.*

*T - Twisting*  
*இங்கே கேட்டதை அங்கேயும், அங்கே கேட்டதை இங்கேயும் சொல்வதை விடுங்கள்.*

*U - Underestimate*  
*மற்றவர்களுக்கும் மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள்.*

*V - Voluntary*  
*அடுத்தவர் இறங்கி வரவேண்டும் என்று காத்திராமல் நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள். பிரச்னை வரும்போது எதிர்த்தரப்பில் உள்ளவரின் கருத்துக்களுக்கும் காது கொடுங்கள்.*

*W - Wound*  
*எந்தப் பேச்சும் செயலும் யார் மனதையும் காயப்படுத்தாமல் இருக்கட்டும்.*

*X - Xerox*  
*நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, அப்படியே மற்றவர்களை நாம் நடத்துவோம்.*

*Y - Yield*  
*முடிந்தவரை விட்டுக் கொடுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை; கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை.*

*Z - Zero*  
*இவை அனைத்தையும் கடைப் பிடித்தால் பிரச்னை என்பது பூஜ்ஜியம் ஆகும்.............*
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தரம் மற்றும் பாதுகாப்பிற்காக நீங்கள் செல்ல வேண்டிய செயலி BIS

தரம் மற்றும் பாதுகாப்பிற்காக நீங்கள் செல்ல வேண்டிய செயலி 8 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்கள் மற்றும் வளர்ச்சி. நீங்கள் பதிவிறக்கம் செய்...