மொத்தப் பக்கக்காட்சிகள்

பாங்க் ஆஃப் பரோடா - பரோடா கிசான் பக்வாடா’ 6 ஆவது பதிப்பை தமிழ்நாட்டில் தொடங்கியது.

bank of baroda           

 

பாங்க் ஆஃப் பரோடா - இந்திய விவசாயிகளை நேரடியாக சென்றடையும தனது வருடாந்திர திட்டமான- 'பரோடா கிசான் பக்வாடா' வின் 6 ஆவது பதிப்பை தமிழ்நாட்டில் தொடங்கியது.  

 

வங்கியால் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு விவசாய திட்ட முன்முயற்சிகள் அத்துடன்  அதன் விவசாய பொருட்கள் மற்றும் திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த  பரோடா கிசான் பக்வாடா மூலம், வங்கி விவசாயிகளுடன் ஒன்றிணைந்து ஈடுபட்டுவருகிறது

 

பரோடா கிசான் பக்வாடா திட்டத்தின் ஒரு பகுதியாக மதுரையில் விவசாயிகள் திட்ட நிகழ்ச்சி ஒன்றை வங்கி ஏற்பாடு செய்தது; பல்வேறு விவசாய பொருட்கள்/திட்டங்கள்பற்றிய தகவல்களை பரப்ப  5 நடமாடும் வாகனங்களை (வேன்களை) இயக்கியது

மதுரை/சென்னை, நவம்பர் 22, 2023

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆஃப் பரோடா (வங்கி), நிலவுடைமை வேளாண்மைப் பொருளாதாரத்தில் கவனத்தை செலுத்தி ஈடுபட்டுசெயலாற்றி வரும், பதினைந்து நாட்கள் நடைபெறவிருக்கும் தனது வருடாந்திர .பரோடா கிசான் பக்கவாடா திட்டத்தின் 6வது பதிப்பு தமிழ்நாட்டில் தொடங்கப்படுவதை அறிவித்தது. இந்த உழவர் ஈடுபாட்டுத் திட்டம் நவம்பர் 16, 2023 அன்று தொடங்கி நவம்பர் 30, 2023 அன்று பரோடா கிசான் திவாஸ் கொண்டாட்டங்களுடன் நிறைவடைகிறது.

பரோடா கிசான் பக்கவாடா நிகழ்வுகளின்  ஒரு பகுதியாக, வங்கியின் சென்னை மண்டல அலுவலகம், திண்டுக்கல், மதுரை, நல்லம்பட்டி கிராமத்தில், ஏற்பாடு செய்திருந்த  விவசாயிகள் திட்ட நிகழ்ச்சியை.  பாங்க் ஆப் பரோடா,  சென்னை மண்டலத் தலைவர் ஸ்ரீ ஏ.சரவணகுமார் மற்றும் பாங்க் ஆப் பரோடா மதுரை மண்டல மேலாளர் ஸ்ரீ எம். ஜெய்கிஷன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்வில் நல்லம்பட்டி பால்உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர், சிறுமலை விவசாயிகள் சங்கத் தலைவர், மற்றும் நல்லம்பட்டி கிராம பஞ்சாயத்துத் தலைவர் உள்ளிட்ட ஏராளமான கிராம முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியின் போது, சுயஉதவி குழுக்களுக்கு (SHG) பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு பயனாளிகளுக்கு கொள்கை ரீதியிலான இசைவாவாணைக் கடிதங்கள் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டின் பல்வேறு கிராமங்கள் ஊடாக பயணத்தை மேற்கொள்ளும் பரோடா கிசான் ரத யாத்திரையை, கொடிஅசைத்து தொடங்கிவைத்ததுடன் நிகழ்ச்சி  நிறைவுற்றது.

இந்த நிகழ்சியில் பேசிய பாங்க் ஆஃப் பரோடா, சென்னை மண்டலத் தலைவர் ஸ்ரீ ஏ. சரவணக்குமார் கூறினார், "பேங்க் ஆஃப் பரோடா தன்னகத்தே விவசாய வாடிக்கையாளர்களின் விசுவாசமான மற்றும் வலிமையான அடித் தளத்தைக் கொண்டுள்ளதோடு விவசாயத் துறைக்கு சேவைகளை  வழங்குவதில் முன்னணி வகிக்கும் வங்கிகளில் ஒன்றாகவும் திகழ்கிறது. மதுரையில் இந்த உழவர் திட்டத்தை ஏற்பாடு செய்ததில் நாங்கள் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். இந்த ஆண்டு பரோடா கிசான் பக்வாடா நிகழ்ச்சிகளில் சென்னை மண்டலத்தைச் சேர்ந்த, 160 க்கும் அதிகமான வங்கிக் கிளைகள் பங்கேற்கின்றன, விவசாய சமூகத்துடனான எங்கள் ஈடுபாடுகளில் ஊக்கம் பெறவும், எங்கள் மதிப்பு மிக்க விவசாய வாடிக்கையாளர்களின் வங்கி செயல்பாடுகள் மற்றும் நிதித் தேவைகளை பூர்த்தி செய்யவும் இது எங்களுக்கு உதவும்.

 

மேலும் தமிழ்நாட்டில் ஐந்து நடமாடும் வாகனங்களை (வேன்கள்) இயக்க பாங்க் ஆஃப் பரோடா ஏற்பாடு செய்திருந்தது, அவை கிராமப்புற சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களிலுள்ள கிராமங்கள், டவுன் பஞ்சாயத்துகள் மற்றும் சந்தைகளை உள்ளடக்கிய பகுதிகளில் இயங்கும். ஒவ்வொரு வாகனத்துடனும் சேர்ந்து ஒரு அதிகாரியும் கூட  வருவார்,  அந்த சமயத்தில் வங்கியின் பல்வேறு விவசாய திட்டங்கள் மற்றும் கடன் திட்டங்கள் பற்றிய தகவல்களை வழங்குவதோடு, கடன் விண்ணப்பங்களும் நரடியாகப் பெற்றுக்கொள்ளப்படும் மற்றும் பரோடா கிசான் பக்கவாடா பற்றிய விழிப்புணர்வை கிராம மக்களிடையே பரப்பும்.



 

பாங்க் ஆஃப் பரோடா தமிழ்நாட்டில், 315 கிளைகளைக் கொண்டுள்ளது, அவற்றில் 161 கிளைகள் பகுதியளவுநகர்ப்புற/கிராமப்புற கிளைகளாகும். செப்டம்பர் 30, 2023 நிலவரப்படி தமிழ்நாடு மண்டலத்தில் விவசாயத் துறைக்கான கடன் வழங்கல்கள் ஆண்டுக்கு ஆண்டு 21.4% அதிக  வளர்ச்சி கண்டுள்ளது.

பாங்க் ஆஃப் பரோடா தனது பரோடா கிசான் பக்வாடா செயல்பாடுகளின் போது, விவசாயிகளை நேரடியாக அணுகி, "கர்-கர் KCC அபியான்" என்ற பெயரிலான கிசான் கிரெடிட் கார்டு இயக்கம்    போன்ற பல்வேறு முன் முயற்சிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, கூடுதலாக விவசாய சமூகத்தின் நமைக்காக பாங்க் ஆஃப் பரோடா வழங்கி வரும்,  விவசாய பொருட்கள் , திட்டங்கள் /சலுகைகள், வழங்கல் வழிமுறைகள்  பற்றிய விழிப்புணர்வையும் அவர்கள் மத்தியில் ஏற்படுத்தும். மேலும் விவசாய உள்கட்டமைப்பு நிதி (AIF), கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (AHIDF), பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (PMMSY), PM ஃபார்மலைசேஷன் ஆஃப் மைக்ரோ புட் பிராசசிங் எண்டர்பிரைசஸ் ஸ்கீம் (PM- FME) போன்ற இந்திய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இன்னும் பல்வேறு ஆத்மநிர்பர் பாரத் திட்டங்களை ஊக்குவிக்கவும் இந்த நிகழ்வு உதவிகரமாக விளங்கும்.

 

பாங்க் ஆஃப் பரோடாவில் விவசாயக் கடனுதவிக்கு விண்ணப்பிக்க, வாடிக்கையாளர்கள்https://bit.ly/AGRILoans வளைத்தளத்திற்கு வருகை தரவும்  

 

 

About Bank of Baroda

Founded on 20th July, 1908 by Sir Maharaja Sayajirao Gaekwad III, Bank of Baroda is one of the leading commercial banks in India. At 63.97% stake, it is majorly owned by the Government of India. The Bank serves its global customer base of ~165 million through over 70,000 touch points spread across 17 countries in five continents and through its various digital banking platforms, which provide all banking products and services in a seamless and hassle-free manner. The Bank's vision matches the aspirations of its diverse clientele base and seeks to instil a sense of trust and security in all their dealings with the Bank.

·                    Visit us at www.bankofbaroda.in

·                    Facebook https://www.facebook.com/bankofbaroda/

·                    Twitter https://twitter.com/bankofbaroda

·                    Instagram https://www.instagram.com/officialbankofbaroda/

·                    YouTube https://www.youtube.com/channel/UCdf14FHPLt7omkE9CmyrVHA

·                    LinkedIn https://www.linkedin.com/company/bankofbaroda/

 


 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தரம் மற்றும் பாதுகாப்பிற்காக நீங்கள் செல்ல வேண்டிய செயலி BIS

தரம் மற்றும் பாதுகாப்பிற்காக நீங்கள் செல்ல வேண்டிய செயலி 8 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்கள் மற்றும் வளர்ச்சி. நீங்கள் பதிவிறக்கம் செய்...