*முக்கிய தினம் :-*
*உலக தத்துவ தினம்*
🌷 *ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21-ஆம் தேதி உலக தத்துவ தினமாக கொண்டாடப்படுகிறது.*
🌷 *மனித சிந்தனை வளர்ச்சியில் தத்துவங்கள் வகிக்கும் நீடித்த பங்கினை நினைவு கூறவும் 'நீதி' நேர்மை மற்றும் சுதந்திரத்தை தத்துவங்கள் மூலம் வழங்க முடியும் என யுனெஸ்கோ கருதுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தத்துவத்தின் முக்கியத்துவத்தை இளைஞர்களிடம் கொண்டு சேர்த்துப் பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்கிற நோக்கத்தில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.*
*உலக தொலைக்காட்சி தினம்*
📺 *உலக தொலைக்காட்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21-ஆம் தேதி கொண்டாடப்படுகிறதுஇத்தினத்தில் தொலைக்காட்சியின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துச் சொல்லப்படுகிறது.*
📺 *1996-ஆம் ஆண்டு நவம்பர் 21-ஆம் தேதி நடைபெற்ற அனைத்துலக தொலைக்காட்சி கருத்தரங்கின் பரிந்துரையின்படி ஐக்கிய நாடுகள் சபை இத்தினத்தை அறிவித்தது. அதன்படி 1997-ஆம் ஆண்டு நவம்பர் 21-ஆம் தேதி முதன் முறையாக உலக தொலைக்காட்சி தினம் கொண்டாடப்பட்டது.*
*உலக மீனவர்கள் தினம்*
🌺 *கடலில் மீனவர்களுக்கு ஏற்படும் தொழில் சார்ந்த பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில் 40 நாடுகளின் மீனவப் பிரதிநிதிகள் 21.11.1997-ஆம் ஆண்டு டெல்லியில் கூடி விவாதித்தனர்.*
🌺 *அப்போது உலகளவில் இணைந்து மீனவர்களின் உரிமைக்குக் குரல் கொடுத்துப் போராடுவதற்காக மீன்பிடி தொழிலாளர்கள் பேரவை என்ற அமைப்பை உருவாக்கினர்.*
🌺 *இதன்மூலம் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் பிரச்சனைகள், பாரம்பரிய மீனவர்களின் உரிமைகள், சுற்றுச்சூழல் பாதிப்பால் கடல் மாசடைந்து மீன்வளம் குன்றி மீன்பிடித் தொழில் அழிவுப் பாதையில் செல்வது உள்ளிட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு காண நவம்பர் 21-ஆம் தேதி உலக மீனவர்கள் தினமாக அறிவிக்கப்பட்டது.*
*உலக ஹலோ தினம்*
🌹 *ஒவ்வொரு ஆண்டும் உலக ஹலோ தினம் நவம்பர் 21-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது1973-ஆம் ஆண்டு எகிப்து மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் தங்களுக்கிடையே நடைபெற்ற போரினை முடிவுக்கு கொண்டு வந்தது. இத்தினத்தில் போர் முடிவுக்கு வந்ததையடுத்து, நவம்பர் 21-ஆம் தேதி இரு நாடுகளும் ஹலோ சொல்லிக் கொண்டனர். ஒவ்வொருவரும் உலக அமைதிக்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பதே இதன் நோக்கம் ஆகும்.*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக