மொத்தப் பக்கக்காட்சிகள்

நோபல் பரிசு கொரோனா நோய்க்கு தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்க உதவிய மருத்துவ விஞ்ஞானிகள் கெட்டாலின் கேரிகோ மற்றும் ட்ரூ வெய்ஸ்மேன் என்ன சாதனை நிகழ்த்தினார்கள்? ஆ ஆறுமுக நயினார் Nobel

 சமீபத்தில் நோபல் பரிசு வழங்கப்பட்ட கொரோனா நோய்க்கு தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்க உதவிய மருத்துவ விஞ்ஞானிகள் கெட்டாலின் கேரிகோ மற்றும் ட்ரூ வெய்ஸ்மேன் இருவரும் அப்படி என்ன சாதனையை நிகழ்த்தினார்கள் என்று பார்ப்போம்...

 நமது உடலில் உள்ள திசுக்களில் டி என் ஏ என்ற புரத அடுக்கு உள்ளது.. இதிலிருந்து தகவல்கள் எம் ஆர் என் ஏ என்ற வேறு அடுக்கிற்கு மாற்றப்படுகிறது எம் ஆர் என் ஏ என்றால் தகவல் கொண்டு செல்லும் மெசஞ்சர் ஆர்.என்.ஏ என்று பொருள்.. இந்த எம் ஆர் என் ஏ என்பது புரதம் என்ற புரோட்டின் உற்பத்திக்கு ஒரு தளமாக செயல்படுகின்றது... நமக்குத் தெரியும் வியாதியை உருவாக்கும் அனைத்து வைரஸ்களும் புரோட்டீனின் மாறுபட்ட உருவங்கள் தான் அது எந்த வியாதியாக இருந்தாலும் அதை உருவாக்கும் வைரஸ்கள் புரோட்டீனின் வேறு வேறு வடிவங்கள் தான்.. 

இந்த எம் ஆர் என் ஏ என்பது நோய்வாய்ப்பட்ட உடலில் இருந்து எடுக்கப்பட்டு செயல் இழக்க வைக்கப்பட்ட வடிவமாக நோய் வராதவர்களின் உடலில் செலுத்தப்படும் பொழுது செலுத்தப்பட்ட உடலானது நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி விடுகிறது...இதுதான் தடுப்பூசி என்று அழைக்கப்படுகின்றது.. முதலில் வாழும் உடல் திசுக்களில் இருந்து எடுக்கப்பட்ட எம் ஆர் என் ஏ மருந்தாக பயன்பட்டது.

 பின்னர் சோதனைச் சாலையில் செயற்கை யாக தயாரிக்கப்பட்டு ஊசி மூலமாக செலுத்தப்படும் தொற்று தடுப்பு மருந்தாக பயன்படுத்தப்பட்டது.. இவ்வாறு வெளியில் இருந்து செலுத்தப்படும் எம் ஆர் என் ஏ மருந்தால் போதிய பலன்கள் கிடைக்கவில்லை மேலும் மருந்து செலுத்தப்பட்டவுடன் உடலில் திசுக்களிலும் உடல் பகுதிகளிலும் ஒவ்வாமை வீக்கங்கள் ஏற்படுகின்றன என்பது கண்டுபிடிக்கப்பட்டது.. இதனால் செயற்கை ஊசி மருந்தை வைத்து நோயை கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.

. இந்த சிரமங்களை தனக்கு விடப்பட்ட ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு அங்கேரி நாட்டைச் சார்ந்த வரும் தற்பொழுது அமெரிக்காவில் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் உயிரியல் ஆய்வுக்கூடத்தில் பணியாற்றும் விஞ்ஞானியுமான கெட்டாலின் கேரிகோ இந்த ஒவ்வாமையை தவிர்ப்பதற்கு ஆராய்ச்சியை தொடங்கினார்.. இவர் தனது ஆராய்ச்சியில் வேறு ஒரு தடுப்பூசி விஞ்ஞானியான ட்ரூ வெய்ஸ்மேனை சேர்த்துக் கொண்டார் இவர்கள் ஊசி மூலமாக செலுத்தப்படும் செயற்கை எம் ஆர் என் ஏ தொற்று தடுப்பு மருந்தை உடல் ஏற்றுக்கொள்ளவும் ஒவ்வாமை வீக்கங்கள் ஏற்படாமல் இருப்பதற்கும் வழி காண முயன்றனர்.. 

தடுப்பூசி போடப்படுபவரின் உடலில் எவ்வித மாற்றங்களும் ஏற்படாமல் இருக்கவும் மருந்தை உடல் ஏற்றுக் கொள்ளவும் எதிர்வினைகளை நீக்குவதையும் உறுதி செய்வதே இவர்களது ஆராய்ச்சி ...இவர்களது ஆராய்ச்சியில் உடலில் உள்ள டென்ட்ரிட்டிக் செல்கள் என்று சொல்லப்படும் திசுக்கள் செயற்கை  எம் ஆர் என் ஏ மருந்தை அந்நிய பொருளாக கருதி நிராகரிப்பதை கண்டுபிடித்தனர்... இந்த டென்ட்ரிட்டிக் செல்கள் உடலுக்குள் அந்நிய வைரஸ்கள் புகுந்து விட்டதை அறிவித்து நோய் எதிர்ப்பு போராட்டத்தை துவக்கி வைப்பவை..

இவை உடலுக்குள் செயற்கை எம் ஆர் என் ஏ செலுத்தப்பட்டவுடன் அந்நிய பொருள் நுழைந்து விட்டது என்று உடலுக்கு அறிவித்து அதை நிராகரிக்க வகை  செய்கின்றன என்பதையும் ..இதனால்தான் மருந்து செலுத்தப்பட்டவர் உடலில் ஒவ்வாமை வீக்கங்கள் ஏற்படுகிறது என்பதையும் அறிந்தனர் உடலால் தயாரிக்கப்படும் எம் ஆர் என் ஏ புரதம் உடலால் ஏற்றுக் கொள்ளப்படும் பொழுது செயற்கை யாக செலுத்தப்படும் அதே புரதம் ஏன் அந்நிய பொருளாக உடலால் நிராகரிக்கப்படுகின்றது என்பதுதான் அவர்களது அடுத்த ஆராய்ச்சி.. உடல் தயாரிக்கும் எம் ஆர் என் ஏ க்கும் செயற்கை எம்ஆர்என்ஏக்கும் ஏதோ ஒரு பெரிய வித்தியாசம் இருக்க வேண்டும் என்பதை அவர்கள் உணர்ந்தனர்... 

இவர்களது ஆராய்ச்சியில் ஆர் என் ஏ என்பதில் நான்கு அடிப்படை கூறுகள் அடங்கியுள்ளதையும் அந்த அடிப்படைக் கூறுகளில் சிறு மாற்றங்கள் செய்யப்படும் பொழுது உடல் இயற்கை எம் ஆர் என் ஏ க்கும் செயற்கை எம்ஆர்என்ஏக்கும் உள்ள வித்தியாசங்களை உணராமல் ஒவ்வாமை வீக்கங்கள் மறைவதையும் அவர்கள் கண்டுபிடித்தனர்.. இவர்களின் ஆராய்ச்சியின் அடிப்படையில் தான் சமீபத்தில் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது... இவர்களது கண்டுபிடிப்பானது மருத்துவத்துறையில் மாபெரும் புரட்சியாக கருதப்படுகின்றது..

 இந்த கண்டுபிடிப்பு 2005 ஆம் ஆண்டிலேயே வெளியிடப்பட்டு விட்டபோதிலும் இதன் பயன்பாட்டை உலகம் கொரோனா நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்ட போது தான் உணர்ந்து கொண்டது.. இந்த மகத்தான சாதனைக்கு சொந்தக்காரர்களான கெட்டாலின் கேரிகோ மற்றும் ட்ரூ வெய்ஸ்மேன் ஆகியோர் உலகை பேரழிவிலிருந்து காப்பாற்றிய மாபெரும் சாதனையாளர்கள் ஆவார்கள் 

ஆ ஆறுமுக நயினார்
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அனைத்து நிதித் தேவைகளுக்கும் ஏற்ற மியூச்சுவல் ஃபண்டுகள் Mutual Fund

நாணயம் விகடன் & மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து `இலக்கு அடிப்படையிலான மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு' என்ற நிகழ்ச்சியை வேலூரில...