பற்றி எரிந்து கொண்டிருக்கும் பாலஸ்தீன இஸ்ரேல் பிரச்சனையின் மூலகர்த்தா இவர்தான்
இவர் பெயர் தியோடர் ஹெர்சி.. ஏற்கனவே நாம் அறிந்தது போல பாலஸ்தீனத்தில் பூர்வ குடிகளாக இருந்த யூதர்கள் கிறிஸ்தவர்களாலும் ரோமானியர்களாலும் விரட்டியடிக்கப்பட்டு பின்னர் துருக்கிய சுல்தான்களால் விரட்டி அடிக்கப்பட்டு ஐரோப்பாவின் பல பகுதிகளுக்கும் சென்று குடியேறி அங்கே தங்களுடைய திட்டமிடலால் முன்னேறி வளமான வாழ்வு வாழ்ந்து வந்தார்கள்...
இருப்பினும் அவர்களுக்கு பழைய ஏற்பாட்டின் படி இறைவன் மீண்டும் இஸ்ரேலை வழங்குவார் என்ற ஒரு அடிப்படை நம்பிக்கை உண்டு இந்த நம்பிக்கை இலைமறைவு காய் மறைவாக இருந்து வந்த வேளையில் பின்னரும் பல்வேறு நாடுகளில் குறிப்பாக ஜெர்மனி ரஷ்யா போன்ற நாடுகளில் யூத எதிர்ப்பு தலை தூக்க ஆரம்பித்தது ஏனென்றால் யூதர்கள் நமது ஊர் செட்டியார்களை போல வடநாட்டு சேட்டுகளைப் போல வட்டி தொழில் வங்கி தொழில் செய்பவர்கள்
அதனால் எந்த விதமான பெரும் உழைப்பு எதுவும் இன்றி பெரிய பணக்காரர்களாக மாறிவிடுவார்கள் மேலும் அவர்கள் அறிவுத்திறமையினால் அங்கங்கே உள்ள அரசாங்கங்களுக்கு கடன் வழங்கும் பேங்கர்களாகவும் பெரிய அதிகாரிகளாகவும் பெரிய கல்வியாளர்களாகவும் விஞ்ஞானிகளாகவும் அவர்கள் தான் இருப்பார்கள் இதனால் அங்கே உள்ள அடித்தட்டு மக்களுக்கும் நடுத்தட்டு மக்களுக்கும் இவர்கள் மேல் எப்பொழுதும் ஒரு பொறாமையும் காட்டமும் இருக்கும் ...
காரணமாக காட்டி தியோடர் ஹெர்சி முதன்முதலாக அனைத்து நாடுகளிலும் உள்ள யூதர்களுக்கும் தனியாக இஸ்ரேல் என்ற ஒரு நாடு உருவாக்கப்பட்டு அனைத்து யூதர்களும் அங்கே குடியேற்றப்பட வேண்டும் என்ற ஒரு புதிய கோட்பாட்டை முன் வைத்தார் இதற்குப் பெயர் சயானிசம் என்பது... பல்வேறு நாடுகளில் இருந்து வந்த யூத எதிர்ப்பு அதாவது ஆன்டிசெமடிசம் என்ற வெறுப்பிற்கு ஒரே தீர்வு தனி இஸ்ரேல் நாடுதான் என்ற ஒரு வாதத்தை முன்வைத்து சயாநிசம் என்ற புதிய இயக்கத்தை துவக்கினார்
இவர் ஐரோப்பாவில் உள்ள அங்கேரி நாட்டில் வசித்து வந்த ஒரு எழுத்தாளர் இவர் பாரிஸ் நகரத்தில் ஆல்ஃபிரட் டிரைஃபஸ் என்ற ஒரு பெரிய யூத அதிகாரிக்கு எதிராக நடந்த விசாரணையின் போது அங்கே யூத எதிர்ப்பும் யூத வெறுப்பும் உமிழப்படுவதை பார்த்து மனம் நொந்து 1896 ஆம் ஆண்டு யூத நாடு என்ற ஒரு சிறு புத்தகத்தை வெளியிட்டார் அதில் தான் தனி யூத நாடு அமைக்கப்பட வேண்டும் என்ற முதலாவதாக கோரிக்கை எழுப்பப்பட்டது அது மட்டுமல்ல 1897 ஆம் ஆண்டு பேசல் நகரில் முதல் யூத ஆதரவு மாநாட்டை அதாவது சயனிஸ்ட் காங்கிரஸ் என்ற மாநாட்டை நடத்தினார்..
இந்த புத்தகத்தில் அவருடைய கருத்துக்கள் என்னவென்றால் யூதர்களுக்கு எதிராக போக்ராம் என்று சொல்லப்படும் யூதர்களை விரட்டி அடிக்கும் தாக்குதல்கள் ரஷ்யா போன்ற நாடுகளில் தொடர்ந்து நடந்து வந்ததை சுட்டிக்காட்டி இருந்தார் இந்த புத்தகத்தில் தான் யூதர்களுக்கு என்று பாலஸ்தீனத்தில் தனி நாடு உருவாக்கப்பட்டு சகல நாடுகளில் உள்ள யூதர்கள் நிம்மதியாக வாழ்வதற்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்ற கருத்து இடம் பெற்று இருந்தது ஆனால் தியோடர் ஹெர்சி 1904 ஆம் ஆண்டில் இறைவனடி சேர்ந்தார்..
அவரது கனவு நனவாவதை காண்பதற்கு அவருக்கு கொடுத்து வைக்கவில்லை ...ஆனால் அவர் கனவு கண்டு ஏற்றி வைத்த தீபமான தனி இஸ்ரேல் நாடு 1948 ஆம் ஆண்டு தான் உதயமானது... இதில் பெருமைக்குரிய விஷயம் என்னவென்றால் உலகெங்கிலும் இருந்து யூதர்கள் விரட்டிஅடிக்கப்பட்டாலும் அவர்களை அரவணைத்துக் கொண்ட ஒரே நாடு நமது பாரத தேசம் என்பது தான் நமது நமது நெஞ்சை நிமிர்த்திக் கொள்ளும் பெருமை..
ஆ ஆறுமுக நயினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக